தி பெட் – திரைப்பட விமர்சனம்

நாம் தூங்க பயன்படுத்தும் ஒரு பெட் ஒரு கதை சொன்னால் எப்படி இருக்கும்? அப்படி ஒரு பெட் கதை சொல்வது போல் படத்தை ஆரம்பிக்கிறார்கள்.
ஸ்ரீகாந்த்,அவரது நண்பர்கள் குழு வீக் எண்ட் கொண்டாட்டம் என்ற பெயரில்
அந்த வார விடுமுறைக்கு ஊட்டிக்கு சென்று வர திட்டமிடுகிறார்கள். .அவர்களுடன் பாலியல் தொழிலாளி சிருஷ்டி டாங்கேவையும் அழைத்துச் செல்கிறார்கள். அங்கே அறை எடுத்து தங்குகிறார்கள் மதுவருந்தி போதை தலைக்கேறிய நேரத்தில் சிருஷ்டி டாங்கே மீது நண்பர்கள் காமப் பார்வை வீச,நாயகன் ஸ்ரீகாந்த் மட்டும் காதல் பார்வை வீசுகிறார். அவரை அடைய நண்பர்கள் தவிக்க, ஸ்ரீகாந்த் யாரும் தொட முடியாதபடி அவர்களை போதையில் தூங்க போட்டு விடுகிறார். இந்நிலையில் திடீரென்று சிருஷ்டி காணாமல் போகிறார். உடன் வந்த நான்கு நண்பர்களில் ஒருவரும் காணாமல் போக…
கிடைத்த தகவலின் பெயரில் காவல்துறை இந்த வழக்கை விசாரிக்கிறது.

யார் கண்ணிலும் படாமல் மறைந்து விட்ட அந்த இருவரையும் காவல்துறை சல்லடை போட்டு தேடுகிறது. ஆனால் காணாமல் போனவர்கள்என்ன ஆனார்கள் என்று தெரியும்போது ஓர் அதிர்ச்சி காத்திருக்கிறது.
அவர்கள் கிடைத்தார்களா? சிருஷ்டி டாங்கே ஒரு பாலியல் தொழிலாளி என்று தெரிந்தும் ஸ்ரீகாந்த் அவரை விரும்பியது ஏன்?போன்ற கேள்விகளுக்குப் பதில் தான் இந்த
‘தி பெட்’.
நான்கு நண்பர்களில் ஒருவரான வேலு கேரக்டரில்
ஸ்ரீகாந்த் வருகிறார்.
இப்படி ஒரு பாத்திரத்தில் நடிக்கிறாரா என்று சற்றே அதிர்ச்சி தந்தாலும் ஏற்றுக் கொண்ட அந்த வேலு கதாபாத்திரத்திற்கு நடிப்பில் நியாயம் செய்திருக்கிறார்.
நாயகியாக கிறிஸ்டி என்ற பாத்திரத்தில் வரும் சிருஷ்டி டாங்கே, அழகோடு கொஞ்சம் கவர்ச்சியும் காட்டி
படத்தை இளமையாக வைத்துக் கொள்கிறார்
ஸ்ரீகாந்தின் நண்பர்களாக பிளாக் பாண்டி, விஜே பப்பு, விக்ரம் வருகிறார்கள்.
இந்த வழக்கை விசாரிக்கும் போலீஸ் இன்ஸ்பெக்டராக ஜான் விஜய் வருகிறார். அந்த புத்திசாலித்தனமான
துப்பறிதலில் படத்தை ரசிக்க வைக்கிறார். பிற்பகுதி படம் முழுக்க இவர்தான் ஹீரோ என்கிற அளவுக்கு காட்சிகளில் நிரம்பி நிற்கிறார்.
நாயகியின் அம்மாவாக வரும் திவ்யா, போலீஸ் சப் இன்ஸ்பெக்டராக வரும் தேவிப்பிரியா
பொருத்தமான பாத்திரத் தேர்வுகள்.
தாஜ்நூர் இசையில் ஒரு பாடல் மட்டுமே என்றாலும் அது கேட்கும் ரகம். பின்னணி இசை கதைக்களத்திற்கு ஏற்ற விதத்தில் பயணம் செய்துள்ளது.
ஒளிப்பதிவாளர் கோகுல், ஊட்டியின் இன்னொரு பக்கத்தை திகிலுற தந்திருக்கிறார்.
எழுதி இயக்கியிருக்கும் எஸ்.மணிபாரதி, கால் கேர்ள் என்று தெரிந்தே காதல் கொள்ளும் நாயகன் என்ற பின்னணியில் ஒரு திரில்லர் கதையை முடிவு வரை பரபரப்பு குறையாமல் தந்திருக்கிறார். கொலையாளி யார் என்ற அந்த சஸ்பென்ஸ் தான் படத்தின் ஜீவன் என்பதை மனதில் கொண்டு காட்சிகளை உருவாக்கியதில் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு உரியதாகி விடுகிறது.
விலைமாதுவான நாயகியை நாயகன் மணந்து கொள்ள சொல்லும் காரணம் மட்டும் ஏற்புடையதாக இல்லை. என்றாலும் எடுத்துக்கொண்ட கதையை
ஆபாசமின்றி அழகியலோடு காட்சிப்படுத்திய விதத்தில் இயக்குனர் பார்டரில் பாஸ் ஆகி விடுகிறார்.

Related posts

Leave a Comment