ஒரு விஷயத்தை நாம் சொல்ல விரும்பினால் அதற்கு மொழி அவசியமாகிறது.. அப்படி இருக்கையில் இன்று திரைப்படத்தில் வசனங்கள் முக்கியமானது.. ஆனால் வசனங்கள் இல்லாமல் வந்துள்ள படம் ‘காந்தி டாக்ஸ்’..
கதை…
வறுமையில் தவிக்கிறார் விஜய் சேதுபதி.. என்ன செய்தாலும் வருமானம் இன்றி வறுமையில் தவிக்கும் இவருக்கு ஒரு காதலி அதிதி ராவ்..
மற்றொரு பக்கம் தொழிலதிபர் அரவிந்த்சாமி.. பல கோடி வருமானத்தில் உயர்ந்த இவர் இன்று நஷ்டத்தில் ஆண்டியாகிறார்..
இதனை அறியாத விஜய் சேதுபதி கொள்ளையடிக்க திட்டம் போட்டு அரவிந்தசாமி மாளிகையில் நுழைகிறார்.. அதே நேரத்தில் இந்த மாளிகையை தீ வைத்து எரிக்க முயல்கிறார் அரவிந்தசாமி.. அதற்கு பின்னணியில் ஒரு காரணமும் இருக்கிறது..
இறுதியில் என்ன ஆனது.? இவர்கள் பணத்தால் பட்ட கஷ்டத்திற்கு பணம் கிடைத்ததா.? பணம் இவர்களுக்கு கை கொடுத்ததா.? என்பதெல்லாம் மீதிக்கதை..
நடிகர்கள்…
விஜய் சேதுபதி – அரவிந்தசாமி – அதிதி ராவ்..
வசனங்கள் இல்லாமல் தன் உடல் மொழியில் தன் நடிப்பை அவரது நடவடிக்கையில் உணரச் செய்திருக்கிறார் விஜய் சேதுபதி.. கொள்ளையடிக்கும் காட்சியில் பங்களாவில் விஜய் சேதுபதியின் ஆக்டிங் சிறப்பு..
ஒரு கட்டத்தில் எல்லாம் இருந்தும்.. ஒரு கட்டத்தில் எல்லாத்தையும் இழந்தும் அரவிந்த்சாமியின் இரு கோணங்களில் மாறுபட்ட நடிப்பும் ரசிக்க முடிகிறது..
கேரக்டர் நடிகர்களாக வந்திருக்கும் வீட்டுக்காரர், டிரைவர், போலீஸ் என ஒவ்வொருவரும் அசத்தல்..

தொழில்நுட்ப கலைஞர்கள்…
ஒளிப்பதிவு : கரண்
இசை: ஏ.ஆர்.ரஹ்மான்
வசனங்கள் இல்லாத குறையை தன் இசை மூலம் நிரப்பி இருக்கிறார் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்.. இசையால் (வசனங்களை) நடிகர்களின் உணர்வுகளை உணர வைத்திருக்கிறார்..
விஜய் சேதுபதி வீடு.. அரவிந்தசாமியின் பங்களா.. ஆகியவற்றை தன் ஒளிப்பதிவுகள் மூலம் அழகாக காட்டியிருக்கிறார் கரண்..
தயாரிப்பு: ஜீ ஸ்டூடியோஸ்
இயக்கம்: கிஷோர் பாண்டுரங் பெலேகர்
வசனங்கள் இல்லாத நிலையில் இந்த படத்தை எப்படி தன் திரை கதையால் நிறுத்த முடியும் என்பதை யோசித்து யோசித்து கூடுதல் ஒவ்வொரு காட்சியிலும் iஅதிக சிரத்தை எடுத்திருக்கிறார் இயக்குனர் கிஷோர் பாண்டுரங் பெலேகர்.
பணம் ஒவ்வொருத்தரின் வாழ்வில் எப்படி எல்லாம் அவசியமாகிறது என்பதை உணர்வுப்பூர்வமாக சொல்லி இருக்கிறார் இயக்குனர்.. கிளைமாக்ஸ் உண்மையில் பாராட்டகூடியது.
வசனங்களே இல்லாத படத்தில் பாடல் மட்டும் ஏன்.? என்ற கேள்வி எழுகிறது.. அதை தவிர்த்து இருக்கலாமே..
ஆல்ரெடி வசனம் இல்லை காட்சிகளில் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் படத்தின் நீளத்தை குறைத்து இருந்தால் அது ஒரு பெரிய பிளஸ் ஆக அமைந்திருக்கும்..

