கதை…
நாயகன் லெனின் இவர்தான் இந்த படத்தின் தயாரிப்பாளர்.. இவர் கோவையில் உள்ள பிரபல கல்லூரியின் முன்னாள் மாணவர்.. அந்த கல்லூரியில் தேர்தல் நடக்க உள்ளது இந்த நிலையில் அந்த பள்ளியில் படிக்கும் மாணவர்கள் இவரின் உதவியை நாடுகின்றனர்..
அப்போது இவர் அந்த கல்லூரியில் பர்னிச்சர் ஒர்க் செய்வது போல உள்ளே வந்து அந்த தேர்தல் பணிகளை கவனிக்கிறார்..
எதிர்பாராத விதமாக அப்போது தன் காதலிக்கு நிச்சயிக்கப்பட்ட மணமகனை கொன்றுவிடுகிறார்… ஏற்கனவே இவர் மீது சில வழக்குகள் நிலுவையில் இருக்க இந்த கொலை குற்றத்திற்காக உள்ளே சென்றால் வெளியே வர முடியாது என்ற சூழ்நிலை ஏற்படுகிறது.
அதனை எடுத்து அந்த கொலையை மறைக்க திட்டமிடுகிறார்.. அதன் பிறகு நடந்தது என்ன என்பதெல்லாம் கதை..

நடிகர்கள்…
Lenin, Azmin, R.V. Udhayakumar, Munishkanth, Anu Mohan and Others
ஸ்மார்ட் ஆக இருக்கிறார் லெனின் கதைக்கு ஏற்ப தன்னை வடிவமைத்துக் கொண்டுள்ளார்.. ஆக்சன் ரொமான்ஸ் என அனைத்திலும் நல்ல மெச்சூரிட்டி..
நாயகியாக அஷ்மின் கொடுத்த வேலையில் சிறப்பு.. முனிஷ்காந்த் ஓரிரு காட்சிகளில் வருகிறார்.. அரசியல்வாதியாக தன்னால் என்ன செய்ய முடியுமோ என்பதை நிரூபித்திருக்கிறார் RV உதயகுமார்.. இவருக்கு உதவியாளராக அனுமோகன் சில காட்சிகளை சிரிக்க வைக்கிறார்..

தொழில்நுட்ப கலைஞர்கள்…
Music Director: Kailas Menon
Singers : Chinmayi sripada , Velmurugan , Kavitha gopi
Cinematographer : Sathish Maiappan
Editor: Lawrence Kishore
Art: Pragadheeswaran
காளிதாஸ் இசையமைத்துள்ளார் பாடல்கள் அனைத்தும் சிறப்பு.. பின்னணி இசையும் ரசிக்கும்படியாக இருக்கிறது..
சதீஷ் மெய்யப்பன் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார்.. கல்லூரி காட்சிகளை கலர்ஃபுல்லாக காட்டியிருக்கிறார்..
Fight Choreographer: Phantom Pradheep
Publicity Design: Sri Aravind kesavan (SAK STUDIO)
Pro: Sridhar Raju, Udaya Kumar, Hari Babu
Banner: REVGEN FILM FACTORY
Written by: Pon Parthiban
Directed by: K.R. Vinoth
Produced by: Lenin
பொன் பார்த்திபன் எழுதிய திரைக்கதைக்கு கதைக்கு வடிவம் கொடுத்து இந்த படத்தை கே ஆர் வினோத் இயக்கியிருக்கிறார்.. கல்லூரியில் நடக்கும் அரசியலை அப்பட்டமாக காட்டியிருக்கிறார்.
அதிகாரத்தில் இருக்கும் அரசியல்வாதிகளும், போலீஸ் அதிகாரிகளும் எப்படி எல்லாம் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்கின்றனர் என்பதையும் காட்சிப்படுத்தி இருக்கிறார்..
காதலர் மாதத்தில் கல்லூரி மாணவர்களுக்கு ஏற்ற படம் இந்த ரெட் லேபிள்..
