வித் லவ் விமர்சனம்.. காதல் என்றென்றும் தொடரும்..
கதை…
அபிஷன் ஜீவிந்த் – அனஸ்வரா ராஜன்
நாயகன் நாயகி இருவரும் திருமணம் செய்து கொள்வதற்காக.. வீட்டில் சொன்னபடி சந்திக்கின்றனர்.. அப்போதுதான் இவர்கள் இருவரும் ஒரே பள்ளியில் ஜூனியர் சீனியர் என்பது தெரிய வருகிறது.
உனக்கு இதற்கு முன்பு ஏதேனும் காதல் இருந்ததா என்று இருவரும் கேட்கவே இருவருக்கும் காதல் இருந்தது என்கின்றனர்… அப்படியானால் ஒரு இடைவெளி விட்டு நாம் பழைய காதலை சந்திப்போம்.. அதன் பிறகு என்ன நடக்குது பார்க்கலாம் என்று பயணிக்கின்றனர்..
அதன் பிறகு நடப்பது எல்லாம் மீதிக்கதை.
நடிகர்கள்..
அபிஷன் ஜீவிந்த், அனஸ்வரா ராஜன், தேனி முருகன், “கலைமாமணி” சரவணன், ஹரிஷ் குமார், காவ்யா அனில், சச்சின் நாச்சியப்பன், சாச்சனா, R.J. ஆனந்தி, டிம்பிள் கண்ணாம் சித்தார்த்
டூரிஸ்ட் ஃபேமிலி இயக்கி சின்ன கேரக்டர் நடித்த அபிஷன் இந்த படத்தில் கதை நாயகனாக மாறியிருக்கிறார்.. பள்ளி பருவத்தில் பளிச்சென்று கவர்கிறார்.. இஸ்லாமியப் பின் அனீஷாவுக்காக உருகும் காட்சிகளில் இளைஞர்களையும் ஈர்க்கிறார்..

மலையாளத்தில் தெலுங்கில் கலக்கிய அனசுவரராஜன் இந்த படத்தில் அறிமுகம்.. க்யூட் எக்ஸ்பிரஷன் மூலம் இளைஞர்களை நிச்சயம் காதலர்களை கவர்வார்..
அனிஷா கேரக்டர் மற்றும் பாலாஜி கேரக்டர் கவனம் பெறுகின்றனர்.. சித்தப்பு சரவணன் ஆசிரியராக அசத்தியிருக்கிறார்..
தொழில்நுட்ப கலைஞர்கள்…
ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவில் காட்சிகள் அனைத்தும் கலர்ஃபுல் காதலர்களை கவரும் விதமாக அமைந்துள்ளது..
இசை : ஷான் ரோல்டன்
ஒளிப்பதிவு : ஸ்ரேயாஸ் கிருஷ்ணா
ஷான் ரோல்டன் இசையில் பாடல்கள் அனைத்தும் அருமை.. காதல் வெற்றிக்காகவும் காதல் தோல்விக்காகவும் அழகான பாடல்களை கொடுத்திருக்கிறார்.
இயக்கம் : மதன்
தயாரிப்பு : செளந்தர்யா ரஜினிகாந்த், மகேஷ் ராஜ் பசிலியன்
இன்றைய இயக்குனர்கள் இன்றைய இளைஞர்களின் நாடித்துடிப்பை காதல் மயக்கத்தை தெளிவாக கண்டறிந்து அதை திரைப்படமாக்கி வருகின்றனர்.. அந்த வரிசையில் காதல் மயக்கத்தை அறிந்து மதன் அருமையான காதலர் தினத்தை கொண்டாடும் படமாக வித் லவ் படத்தை கொடுத்திருக்கிறார்.

மிகப்பெரிய வெற்றி பெற்ற ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ திரைப்பட இயக்குநர் அபிஷன் ஜீவிந்த், அனஸ்வரா ராஜன் ஆகியோரது நடிப்பில், அறிமுக இயக்குநர் மதன் இயக்கத்தில், செளந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் மகேஷ் ராஜ் பசிலியன் தயாரிப்பில் பிப்ரவரி 6 ஆம் தேதி வெளியாக உள்ளது ‘வித் லவ்’..
