கதை…
நாயகன் நாயகி காதலிக்கிறார்கள்.. ஒரு கட்டத்தில் காதல் முறிவு வருகிறது.. அட அதான்பா லவ் பிரேக்கப்.. பிரிந்து வேறு வேறு பாதையில் பயணிக்கும் இவர்களுக்கு தீராத வலி.. தோல்வி வலியை மறக்க பல வழிகளில் முயற்சிக்கின்றனர்.. ஆனாலும் இவர்களால் முடியாத பட்சத்தில் மற்றொரு காதலை தேடுகின்றனர்.. இறுதியில் என்ன ஆனது என்பதுதான் இப்படத்தின் கிளைமாக்ஸ்..
நடிகர்கள்…
விஜய் ஆண்டனி தயாரித்திருக்கும் இந்த படத்தில் இவரது உறவினர் பையன் தான் இந்தப் படத்தின் கதாநாயகன் அஜய் திஷன்.. கம்பீரக் குரலில் ரசிகைகளை கவர்ந்து விடுவார்.. இவரது குரல் இவருக்கு பிளஸ் பாயிண்ட்.. ஆட்டம் பாட்டம் துள்ளல் உணர்ச்சி என மெச்சூரிட்டியான நடிப்பை கொடுத்திருக்கிறார்..
தனுஷா.. இவருக்கு தமிழில் இதுதான் முதல் படம்.. ஆனால் தன் அழகான எக்ஸ்பிரஷன் மூலம் ரசிகர்களை காந்தம் போல கவர்ந்து விடுகிறார்.. நடனத்தில் இவரது நளினம் கூடுதல் அழகு..
பாண்டியராஜன், சுனில், லக்ஷ்மி மஞ்சு, இந்துமதி மணிகண்டன், ஆதித்யா கதிர், விவேக் பிரசன்னா, பிளாக் பாண்டி, பிக் பாஸ் சத்யா, எம்.ஜெ.ஸ்ரீராம் மற்றும் பலர்.. இவர்கள் தங்கள் நடிப்பின் மூலம் ரசிகர்களை ஈர்க்கின்றனர்..

தொழில்நுட்ப கலைஞர்கள்…
தயாரிப்பு… இசையமைப்பு.. படத்தொகுப்பு என மூன்றையும் கலந்து இந்த பூக்கியை திரைப்படமாக கொடுத்திருக்கிறார் விஜய் ஆண்டனி..
இன்னும் கொஞ்சம் முயற்சித்து இருக்கலாமோ என்று சொல்லும் வகையில் எடிட்டிங் அமைந்திருக்கிறது..
புதிய பரிதி என்பவர் கதை திரைக்கதை வசனம் எழுதி இருக்கிறார்..
இன்றைய காலகட்டத்தில் என்னதான் காதல் பிரேக்கப் வந்தாலும் அடுத்த காதல் கிடைக்கிறது என்பதை ஜாலியாக சொல்ல முயற்சித்து இருக்கிறார் டைரக்டர் கணேஷ் சந்திரா..
ஆனால் அதே சமயம் எத்தனை ஆண்டுகள் உருண்டோடினாலும்
எத்தனை நவீன மோகம் வந்திருந்தாலும் காதலுக்கு என்றும் அழிவில்லை.. அந்த உணர்வு ஒன்றுதான் என்பதையும் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்…
இயக்கம் மற்றும் ஒளிப்பதிவு என இரட்டைக் குதிரையில் சவாரி செய்ய முயற்சித்திருக்கிறார் கணேஷ் சந்திரா..
ஆக மொத்தம் காதல் காதல்… தேடல் தேடல் என்று விரும்பும் நபர்களுக்கு இந்த பூக்கி-யை பிடிக்கும்
—
