கதை…
ஸ்ரீராம் கார்த்திக் – வனவிலங்கு புகைப்படக் கலைஞர்
கிரிஷா குரூப்.. பறவைகள் பூங்கா நடத்துபவர்
இருவரும் தொழில் ரீதியாக சந்திக்கும்போது நட்பாக பழக க்ரிஷா மீது காதல் கொள்கிறார் ஸ்ரீராம் கார்த்திக்.. இவர் தன் காதலை நாயகியிடம் சொல்வதற்குள்… தனக்கு ஒரு தலை காதல் இருப்பதாகவும் அந்த காதலனை தேட வேண்டும்.. அதற்கு ஸ்ரீராம் உதவ வேண்டும் என வேண்டுகோள் வைக்கிறார்.
தன் காதலை சொல்லி காதலியிடம் கைகோர்த்துக் கொண்டாரா அல்லது காதலி விருப்பப்படி அவரின் ஒருதலை காதலனை தேடிக் கொடுத்தாரா என்பதெல்லாம் இந்த மைலாஞ்சி சொல்லும் கதை..

நடிகர்கள்…
ஸ்ரீராம் கார்த்திக் மற்றும் கிரிஷா குரூப்
எப்போதும் போலவே ஸ்மார்ட் நாயகனாக ஸ்ரீராம் கார்த்திக்.. காதலை சொல்லவும் முடியாமல் காதலிக்காக காதலனை தேடும் நன்றாகவே ஸ்கோர் செய்கிறார்..
கதையின் நாயகியாக க்ரிஷா குரூப்.. சிறப்பான நடிப்பு நேர்த்தியான உடை என ரசிகர்களை கவர்கிறார்..
முனிஷ்காந்த் மற்றும் சிங்கம்புலி… இந்தக் காதல் படத்தில் தங்கள் பங்களிப்புக்கு கலகலப்புக்கு உதவி இருக்கின்றனர்..
நாயகனின் அம்மாவாக செந்தி, மாமனாக கலையரசன் கன்னுசாமி ஆகியோர்களின் கேரக்டர்களும் கவனிக்க வைக்கின்றன.

தொழில்நுட்ப கலைஞர்கள்…
இசை ஞானி இளையராஜா இசையமைத்திருக்கிறார்.. அவரின் பழைய பாடல்கள் பாணியை எதிர்பார்த்தால் ஏமாற்றமே… ஆனாலும் பாடல்கள் ஓகே ரகம்.. பின்னணி இசை வழக்கம் போல சிறப்பு..
ஊட்டியின் அழகை அழகாக படம் பிடித்து நம் கண்களை குளிர்ச்சியாக்கி இருக்கிறார் ஒளிப்பதிவாளர் செழியன்.
ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்திருக்கிறார்..
அஜயன் பாலா இயக்கியிருக்கிறார் எளிமையான காதல் கதையில்… ஒரு தலை காதல்… இருகோண காதல்.. முக்கோண காதல் என வெரைட்டியாக கலந்து கொடுத்து இருக்கிறார்.. ஒருவேளை படம் பூவே உனக்காக பாணியில் செல்லுமோ என்ற எதிர்பார்ப்பை சில காட்சிகளில் வர வைக்கிறது..
அதேசமயம் பெண்களின் மனநிலை அவர்களின் மனம் தடுமாற்றம் உள்ளிட்டவைகளை உணர்வுபூர்வமாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் அஜயன் பாலா..
