கதை…
நரேன் – தேவி மகேஷ் இவர்களின் மகன் அஸ்ரப்.. தன் தந்தை தொழிலதிபராக இருந்தாலும் அவரை சார்ந்து வாழாமல் தனக்கு பிடித்த போட்டோகிராபி தொழிலில் சாதிக்க வேண்டும் என விரும்புகிறார் நாயகன் அஷ்ரப்..
இதுவரை யாரும் எடுத்திடாத ஒரு போட்டோ கிளிக் சரித்திரம் படைக்க வேண்டும் என விரும்புகிறார். அப்போதுதான் அவருக்கு மதிகெட்டான்சோலை என்ற அடர்ந்து காட்டுப்பகுதியில் ஒரு தங்க மரம் இருப்பதாக அறிகிறார்..
எனவே அதைத் தேடி அடர்ந்த காட்டுக்குள் தனியாக செல்கிறார்.. ஆனால் அங்கு சென்றவர்கள் யாரும் உயிருடன் திரும்புவதில்லை என அந்த கிராம மக்கள் சொல்கின்றனர்..
ஆனாலும் ரிஸ்க் எடுத்து செல்கிறார்.. அதன் பிறகு நடந்தது என்ன.? அவர் உயிருடன் திரும்பி வந்தாரா? தங்க மரத்தை போட்டோ எடுத்தாரா.? அதன் பின்னர் நடந்தது என்ன என்பதெல்லாம் திரில்லர் கதை..
நடிகர்கள்…
அஷ்ரஃப் @ வீரா
ஜனனி சாமிநாதன் @ தர்ஷினி
கருணாகரன் @ கபிலன்
உரியடி சிவா @ மதி
ஆடுகளம் நரேன் @ செங்குட்டுவன்
தேவி மகேஷ் @ ஆதினி
அஷ்ரப் இவர்தான் படத்தில் நாயகன் இயக்குனர் எல்லாம்.. எனவே தனக்கான காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்.. அழகான காதலி இருந்தும் அழகான ரொமான்ஸ் இல்லை..
நாயகனின் அம்மாவாக நடித்த தேவி மகேஷ் படத்திற்கு மிகப்பெரிய பலம்.. அவரின் அன்பான அட்வைஸ் ஒவ்வொன்றும் ரசிக்க வைக்கிறது..
ஜனனி… இந்த படத்தின் நாயகி.. அட்லீஸ்ட் இவரையும் காட்டுக்குள் அழைத்து சென்று இருந்தால் என்னும் கூடுதல் அழகும் கவர்ச்சியும் இருந்திருக்கும்.. அதுவும் இல்லாமல் போச்சு..
கருணாகரன், ஆடுகளம் நரேன், உறியடி சிவா, வேலராமமூர்த்தி உள்ளிட்டோரும் உண்டு.. ஊறுகாய் போல பயன்படுத்தப்பட்டுள்ளனர்..
தொழில்நுட்ப கலைஞர்கள்…
*எழுத்து & இயக்கம் :* அஷ்ரஃப்
*தயாரிப்பு :* அப்துல் பாசித் சையத்
*வசனம் & பாடல்கள் :* பிரேமன்
*மக்கள் தொடர்பு :* ஸ்ரீ வெங்கடேஷ்
*ஒளிப்பதிவு :* ரயீஸ் அஹ்மத்
*இசை :* ராஜ்குமார் சந்திரசேகரன்
*படத்தொகுப்பு :* RC பிரணவ்
படத்தின் ஒளிப்பதிவாளரும் இசையமைப்பாளரும் வெகு சிறப்பு.. அடர்ந்த காட்டை பார்த்தாலே ஒரு ஆபத்தான இடம் என்பது போன்ற ஒளிப்பதிவு செய்துள்ளார்.. அதுபோல பின்னணி இசையும் ஒருவித பதட்டத்தை உண்டாக்குகிறது..
சில வசனங்களும் கவர்கின்றன.. காட்டிலுள்ள மிருகங்களை விட அதில் நுழையும் மனிதர்கள் ஆபத்தானவர்கள்..
காட்டை காக்க காடுக்கு தெரியும்… மனிதர்கள் அதற்கு தேவையில்லை…
அப்பாவின் ஆசை என்பது தன் விருப்பத்தை மகன் மீது திணிப்பது… ஆனால் அம்மாவின் ஆசை மகனின் ஆசை நிறைவேற்றுவது உள்ளிட்ட வசனங்கள் கைதட்டல் பெறும்..
பிளாஷ் பேக் காட்சிகள் படத்திற்கு பலம்.. ஆனால் இடைவேளைக்கு முன்பு கொஞ்சம் திரைக்கதையில் கவனம் செலுத்தி இருக்கலாம்..
ஆனால் அடர்ந்த காடு அதை சுற்றியுள்ள அமானுஷ்யம் பயம் என்ற ஓவர் பில்டப்.. ஆனால் படத்தில் அதற்கு ஏற்ப காட்சிகள் இல்லை.. முக்கியமாக கொடூர மிருகங்களும் காட்சிப்படுத்தப்படவில்லை அது இருந்தால் கொஞ்சம் திரில்லர் கலந்திருக்கும்..
அட்லீஸ்ட் யானை மான் மயில் காட்டு நாய் இப்படியாக கூட காட்டி இருக்கலாம்..
Photographer movie review
