COLD CALL கோல்ட் கால் – விமர்சனம்..

கதை…

இந்த தலைப்பை பார்த்தால் இது என்ன ஆங்கில படமா என்று ஒரு சந்தேகம் வரலாம்.. கோல்டு கால் என்பது நமக்கு தெரியாத ஒரு நபர் அவரது பொருளை விற்க மார்க்கெட்டிங் செய்வதுதான் கோல்டு கால் என்பதாகும்..

ஒரு நிறுவனத்தில் நான்கு மார்க்கெட்டிங் நபர்கள் ஒரே நாளில் வேலைக்கு சேர்கிறார்கள்… அன்று முதலே அவர்கள் நட்புடன் பழகி வருகின்றனர்.. இவர்களுக்கு டார்கெட் கொடுக்கப்பட்டுள்ளது..

அந்த டார்கெட் படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசையில் பயணிக்க வேண்டும்… ஒருவர் எல்லைக்குள் அடுத்தவர் வரக்கூடாது என்ற நிபந்தனை..

ஆனாலும் இவரின் நண்பர்கள் என்பதால் அதனை மீறி செயல்படுகின்றனர்.. அதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் கதை..

நடிகர்கள்…

சித்து மூலிமணி, சந்தோஷ், ஸ்ரீ வைஷ்ணவ், கிருஷ்ணா விஜய், பாலாஜி, ஸ்ரீகாந்த், அமிதா ரங்கநாதா, நிஷா ஹெக்டே, மேரி லிட்டி & கீர்த்தனா புல்கி.

பெரும்பாலும் புதிய முகங்கள் தான்.. பெங்களூரில் நடக்கும் கதை இது.. பெங்களூரை பொறுத்தவரை எப்போதும் நிறைய மொழி பேசும் மக்கள் இருப்பார்கள்… அதனால் அவர்கள் மொழியிலேயே பேசவிட்டு இருக்கிறார்..

தெலுங்கு மலையாளம் கன்னடம் தமிழ் ஹிந்தி உள்ளிட்ட மொழிகளும் பேசும் கேரக்டர்கள் இருக்கிறது.. ஆனால் அதற்கு கீழே சப்டைட்டில் போட்டு இருக்கலாம்..

நான்கு நண்பர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதம்… ஆனாலும் நட்புக்கு தோள் கொடுக்கும் கேரக்டர்களாக உள்ளனர்.. ஒவ்வொருவரும் அவரவர் பாணியில் சிறப்பு..

அதுபோல அந்த கம்பெனியில் உள்ள ஹெச் ஆர்.. மேனேஜர்.. ரிஷப்னிஸ்ட்.. முதலாளி உள்ளிட்டோர் இந்த மார்க்கெட்டிங் அலுவலகத்திற்கு பணி புரிந்துள்ளனர்..

தொழில்நுட்பக் குழு…

எழுத்து & இயக்கம்: தம்பிதுரை

ஒளிப்பதிவு : சரவணன்

இசை: பிரணவ் கிரிதரன்

படத்தொகுப்பு: சுரேஷ் ஆறுமுகம்

சண்டைப் பயிற்சி: ஜாகுவார் சன்னப்பா

பாடல்கள்: பா. அரவிந்தன், ஆர்மியஸ்

வசனம்: பாலாஜி ராஜசேகர், தம்பிதுரை, நுதன், நிதின் சாம் ரெஜினோல்ட்.

தயாரிப்பாளர்: கேசவ மூர்த்தி

விநியோகஸ்தர்: ஆக்சன் ரியாக்ஷன் ஜெனிஷ்.

தயாரிப்பு நிறுவனம்: Walkthrough Entertainment

PRO: திரு


படத்தின் ஒளிப்பதிவு சிறப்பு.. முக்கியமாக ஒரு IT அலுவலகத்தில் எப்படி செயல்படுகிறார்கள் என்பதை பாமர மக்களுக்கு புரியும்படி சொல்லி இருக்கிறார் இயக்குனர்..

பாடல்களும் பின்னணி இசையும் ஓகே..

நம் வீட்டுக்கு காலிங் பெல்லை அடிக்கடி அமர்த்தும் மார்க்கெட்டிங் நபர்களைப் பார்த்திருப்போம்.. அவர்களுக்கு கொடுக்கப்பட்ட டார்கெட் அவர்களின் பணிச்சுமை ஆகியவற்றை இந்த படம் சொல்கிறது.. ஆனால் அவர்கள் எந்த பொருளை விற்பனை செய்கிறார்கள்… மார்க்கெட்டிங் செய்கிறார்கள் என்பதை இயக்குனரும் சொல்லவில்லை.. நடிகர்களும் கேட்காமல் நடித்து விட்டார்கள்..

புதிதாக வேலைக்கு சேர்ந்த 4 நபர்கள் நான்கு நண்பர்கள் ஆகின்றனர்.. அவர்களை சுற்றி நடக்கும் கதைக்களம்.. அங்கு ஆபீஸில் அவர்களின் உயர் அதிகாரிகள் அவர்களை வைத்து மற்ற விஷயங்களை சாதித்துக் கொள்ளும் பெண்கள்.. மாட்டிவிடும் பெண்கள் என நிறுவன ஊழியர்களை பற்றியும் எச்சரிக்கை செய்திருக்கிறார் இயக்குனர்..

அத்துடன் ஒரு சோசியல் மெசேஜ் கொடுத்திருக்கிறார்.. நாம் என்னதான் ஒரு நிறுவனத்திற்காக ஓடி ஓடி உழைத்தாலும் அவர்களின் டார்கெட் முடிந்து விட்டால் நாம் நிராகரிக்கப்படும் என்பதையும் காட்சிப்படுத்தி இருக்கிறார் இயக்குனர் தம்பிதுரை..

Related posts

Leave a Comment