கதை…
நாயகன் – ஜீவா.. நாயகி – ஹரிஷ்மிதா..
இவர்கள் இருவருக்கும் கனவு தேசமான சினிமா உலகில் சாதிக்க வேண்டும் என்பதே இலட்சியம்.. நாயகனுக்கு இயக்குனராக வேண்டும் என்பது ஆசை.. நாயகிக்கோ திரைப்பட பின்னணி பாடகி ஆக வேண்டும் என்பது ஆசை..
இந்த சூழ்நிலையில் இருவருக்கும் காதல் மலர்கிறது.. இவர்களின் காதல் வாழ்க்கையில் கனவே பிரச்சனையாக அமைகிறது.. அப்படி என்னதான் அந்த கனவு.. என்ன பிரச்சனை என்பதெல்லாம் மீதிக்கதை..

நடிகர்கள்…
நாயகன் – ஜீவா.. நாயகி – ஹரிஷ்மிதா..
இருவரும் புதுமுகங்கள் என்றாலும் எதார்த்த நடிப்பில் ரசிகர்களை கவர்ந்து விடுகின்றனர்.. இவர்களின் லவ் கெமிஸ்ட்ரி நன்றாகவே ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது..
பிரபு சாஸ்தா, துருவன், இந்திரா ஆகியோரின் கதாபாத்திரங்கள் படத்திற்கு கூடுதல் பலத்தை கொடுத்திருக்கிறது..

தொழில்நுட்ப கலைஞர்கள்…
இளமாறன் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் கவர்கின்றன.. பாடல் வரிகளும் இனிமை..
ஒளிப்பதிவாளர் சாலமன் போவாஸ்.. ஊட்டி அழகை கண்களுக்கு குளிர்ச்சியாக்கி இருக்கிறார்..
கனவை வில்லனாக வைத்து திரைக்கதை அமைத்து இருப்பது வித்தியாசமான சிந்தனை.. எம் ஆர் பாரதி என்பவர் இயக்கியிருக்கிறார்.. முக்கோண காதல் கதை போல வடிவம் கொடுத்திருக்கிறார்..
கனவுக்காக ஓடும் காதலர்கள்… கனவை கண்டு ஓடும் காதலர்கள் என வித்தியாசமாக திரைக்கதை அமைத்து ரசிகர்களை கவர்ந்திருக்கின்றார் ட்ரீம் கேர்ள்..

