கதை…
நாயகன் யோகி பாபு.. ஒரு கோயில் பூசாரி.. இவரும் பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த லவ்லின் காதலிக்கிறார்கள்.. இவர்களின் காதலுக்கு பெரிய எதிர்ப்பு இல்லை என்றாலும் ஒரு நிபந்தனை விதிக்கிறார் நாயகியின் அப்பா..
உங்கள் ஊரில் தண்ணீர் பஞ்சம் இருப்பதால் என் மகளை உங்களுக்கு கொடுக்க முடியாது என்கிறார்.. இதனால் பெண் கிடைக்காமல் தவிக்கிறார் யோகி பாபு..
அப்போது ஊருக்குள் தண்ணீர் பஞ்சம் தலை விரித்து ஆடும் போது அங்கு ஆராய்ச்சி செய்யும் ஒருவர் யோகி பாபு நிலத்தில் (வீட்டில்) தண்ணீர் இருப்பதாக சொல்கிறார்..
இதனையடுத்து ஊர் மக்கள் அங்கே கிணறு வெட்ட சொல்கின்றனர்.. ஆனால் ஒரு நிபந்தனை விதிக்கிறார் யோகி பாபு..
அது என்ன என்பதுதான் சுவாரசியமான கிளைமாக்ஸ்..

நடிகர்கள்…
யோகி பாபு லவ்லின் காதல் கதைக்கு ஒட்டவில்லை.. யோகி பாபு எடுக்கும் கிளைமாக்ஸ் முடிவு ரசிக்கத்தக்கது..
கவுண்டமணி ஸ்டைலில் யோகி பாபு அனைவரையும் சகட்டு மேனிக்கு திட்டுவதை குறைத்து இருக்கலாம்.. ஒரு பூசாரி இப்படி பேசலாமா.?
லவ்லின், ரேச்சல், ஜார்ஜ் மரியான், ஹலோ கந்தசாமி, ராமகிருஷ்ணன் & பலர்.. இவர்கள் கதையின் ஓட்டத்திற்கு பெரிய பங்களிப்பை கொடுத்துள்ளனர்..
தொழில்நுட்ப கலைஞர்கள்…
ஒளிப்பதிவு: தியாகராஜன்
இசை: நிவாஸ் கே பிரசன்னா
தயாரிப்பு: ஆர்.ரமேஷ்பாபு
இயக்கம்: சுரேஷ் சங்கய்யா
நிவாஸ் கே பிரசன்னாவின் இசை பங்களிப்பு நேர்த்தி.. தியாகராஜன் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார்.. கிணத்தை சுற்றி அந்த கிராமத்து பகுதிகளை அழகாக படம் பிடித்திருக்கிறார்..
ஒரு கிடாயின் கருணை மனு படத்தை இயக்கிய சுரேஷ் சங்கயா இந்த படத்தையே இயக்கி இருக்கிறார்.. கிணறு வெட்ட பூதம் வந்த கதையாக கிணறு வெட்ட அதில் டைனோசரஸ் கூடு வருவது போல நகைச்சுவையாக படத்தை நகர்த்தி இருக்கிறார்..
100 நாள் வேலை திட்டம்.. மக்களின் அலட்சியம்.. அகழ்வாராய்ச்சி தொல்பொருள் ஆராய்ச்சி ஆகியவற்றையும் அப்பட்டமாக சொல்லி இருக்கிறார்..
ஆராய்ச்சி என் அடுத்த கட்டத்திற்கு சமூகம் சென்றாலும் மக்களின் தண்ணீர் பிரச்சனையை தீர்க்க ஒரு அழகான தீர்ப்பையும் சிரிக்கவும் சிந்தனையுடன் படத்தில் சொல்லி இருப்பது சிறப்பு..
