ஜியோ ஸ்டுடியோஸ் & B62 ஸ்டுடியோஸ் தயாரிப்பில், ஆதித்யா தர் இயக்கத்தில் உருவாகியுள்ள துரந்தர் பழிவாங்கல் பாக்ஸ் ஆபிஸ் வரலாற்றை மாற்றி எழுதியுள்ளது. உலகளாவிய அளவில் இதுவரை காணாத பிரம்மாண்டமான ஓப்பனிங் வீக்கெண்டை வசூலித்து, அனைத்து காலத்திற்குமான மிகப்பெரிய உலகளாவிய பிளாக்பஸ்டராக உருவெடுத்துள்ளதுடன், உலகெங்கிலும் புதிய சாதனைகளை படைத்துள்ளது.
அசாதாரணமான முன்பதிவுகள், அனைத்து திரையரங்குகளிலும் அரங்கம் நிறைந்த காட்சிகள் மற்றும் இந்த படத்தின் அடுத்த பாகத்திற்கான இணையற்ற எதிர்பார்ப்பு ஆகியவற்றின் காரணமாக, உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் நாளுக்கு நாள் மிக அதிக வசூலை அள்ளி குவித்துள்ளது. இதன் மூலம், இந்திய மற்றும் சர்வதேச அளவில் ஒரு இந்திய படத்திற்கான மிக பெரிய ஓப்பனிங் வீக்கெண்ட் வசூல் என்ற மாபெரும் சாதனையை நிகழ்த்தியுள்ளது.
உலகளாவிய மிகப்பெரிய இந்தி பிளாக்பஸ்டரான துரந்தர் முதல் பாகத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து, இந்த இரண்டாம் பாகம் எதிர்பார்ப்புகளை மேலும் உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது. அதிக கட்டணம் செலுத்தப்பட்ட சிறப்பு காட்சிகள், மிகப்பெரிய ஓப்பனிங் நாள், அதிக வசூல் செய்த சனிக்கிழமை, அதிக வசூல் செய்த ஞாயிற்றுக்கிழமை மற்றும் உலகளவில் எந்தவொரு இந்திய படமும் செய்யாத மிகப்பெரிய ஓப்பனிங் வீக்கெண்ட் வசூல் எனப் புதிய வரலாற்றைப் படைத்துள்ளது.
தனது முதல் வார இறுதியில் மட்டும் உலகளவில் பிரமிக்க வைக்கும் வகையிலான ரூபாய் 761 கோடி மொத்த வசூலை குவித்து, துரந்தர் பழிவாங்கல் இந்திய திரையுலகிற்கு உலக அரங்கில் ஒரு புதிய மைல்கல்லை அமைத்துள்ளது.
*நாள் வாரியான வசூல் விவரம்*
சிறப்பு காட்சிகள் + நாள் 1 (வியாழன்) – ரூபாய் 145 கோடி இந்தியா (நிகர வசூல் | ரூபாய் 52 கோடி வெளிநாடு
நாள் 2 (வெள்ளி) – ரூபாய் 83 கோடி இந்தியா (நிகர வசூல்) | ரூபாய் 46 கோடி வெளிநாடு
நாள் 3 (சனி) – ரூபாய் 117 கோடி இந்தியா (நிகர வசூல்) | ரூபாய் 58 கோடி வெளிநாடு
நாள் 4 (ஞாயிறு) – ரூபாய் 121 கோடி இந்தியா (நிகர வசூல்) | ரூபாய் 56 கோடி வெளிநாடு
*ஓப்பனிங் வீக்கெண்ட் மொத்த வசூல்*
இந்தியா – ரூபாய் 466 கோடி (நிகர வசூல்)
இந்தியா – ரூபாய் 550 கோடி (மொத்த வசூல் )
வெளிநாடு – ரூபாய் 211 கோடி
*உலகளாவிய மொத்த பாக்ஸ் ஆபிஸ் வசூல் – ரூபாய் 761 கோடிகள்*
*துரந்தர் தி ரிவெஞ்ச் — அனைத்து காலத்திற்குமான சாதனைகள்*
*இந்தியா*
– இதுவரை இல்லாத அளவிலான அதிக முன்பதிவு விற்பனை
– இதுவரை இல்லாத அளவிலான அதிக வசூல் செய்த சிறப்பு காட்சிகள்
– இதுவரை இல்லாத அளவிலான அதிக வசூல் செய்த ஓப்பனிங் வீக்கெண்ட்
– உள்நாட்டில் மிக வேகமாக ரூபாய் 300 கோடியை எட்டிய திரைப்படம்
– முதல் சனிக்கிழமையில் அதிக டிக்கெட்டுகள் விற்பனை (ஆதாரம்: BMS & District)
– BookMyShow-வில் ஒரு மணிநேரத்திற்கு அதிக டிக்கெட்டுகள் விற்பனை – 109.17K (ஆதாரம்: BMS)
*வெளிநாடுகள்*
– ஒரு இந்திய படத்திற்கு இதுவரை கிடைக்காத மிகப்பெரிய வெளிநாட்டு வீக்கெண்ட் வசூல்
– வளைகுடா நாடுகள் இல்லாமல் அதிக ஓப்பனிங் நாள் வசூல்
– ஒரு இந்திய படத்திற்கான அதிகபட்ச ஒற்றை நாள் வசூல் — சனிக்கிழமை
– முக்கிய சந்தைகளில் 2-வது இடம் & இரண்டாம் நிலை சந்தைகளில் 1-வது இடம் (ஆதாரம்: Comscore)
– ஒரு இந்தி படத்திற்கான மிகப் பெரிய அளவிலான வெளிநாட்டு வெளியீடு – 2200 திரையரங்குகள் | 3000 திரைகள்
– ரசிகர்களின் மாபெரும் தேவையால் உருகுவே, உக்ரைன், பல்கேரியா, ருமேனியா, சிலி, மெக்சிகோ மற்றும் சைப்ரஸ் போன்ற பாரம்பரியமற்ற சந்தைகளிலும் வெளியீடு.
*இந்த சூறாவளி சும்மா வரவில்லை.. உலகெங்கிலும் வரலாற்றை மாற்றி எழுதியுள்ளது!*

