06.04.26:
சென்னை – முட்டுக்காடு.
கனவே கலையாதே திரைப்படத்தில் இயக்குநராக அறிமுகமாகி மகிழ்ச்சி, படையாண்ட மாவீரா திரைப்படங்களில் நாயகனாக நடித்து இயக்கிய வ.கௌதமன் தனது மகள் கௌ.பரஞ்ஜோதி பிகாம்.,எம்.பிஏ அவர்களுக்கும் கடலூர் நடுவீரப்பட்டு தொழிலதிபர் கண்ணன் அவர்களின் மகன் க.குணாநிதி பி.ஆர்க் அவர்களுக்கும் திருமண நிச்சயதார்த்த நிகழ்வு சென்னை எம்ஜிஎம் பீச் ரெசார்ட் அரங்கில் மன நெகிழ்வோடு திருமண நிச்சயதார்த்த விழா நடந்தேரியது.
விழா நிகழ்வில் மூத்த திரைக்கலைஞர் சிவக்குமார், “கவிப்பேரரசு” வைரமுத்து, நீதியரசர் கலையரசன், பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜெகத்ரட்சகன், தமிழச்சி தங்கபாண்டியன், மேனாள் அமைச்சர் ஏகே, மூர்த்தி, தமிழ் தேசிய பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசன், தொழிலதிபர்கள் டெல்டா செல்வம், ராம்ஜி, ஜெயராமன் ஐ.ஏ.எஸ், சந்தானம் ஐஏஎஸ், சகாயம் ஐஏஎஸ், ஜெயகாந்தன் ஐஏஎஸ், தட்சிணாமூர்த்தி ஐஏஎஸ், நடிகர்கள் சந்தானம், இளவரசு, ரெடின் கிங்ஸ்லி, ஏகன், பிரிகடா, கராத்தே ராஜா, கிங்காங், இயக்குநர்கள் ஆர்வி.உதயகுமார், கதிர், பேரரசு, எழில், வசந்தபாலன், கரு.பழனியப்பன், செழியன், நம்பி, வீ.மா.செந்தில்குமார், அசோக் பாலாஜி, ஒளிப்பதிவாளர் கோபி ஜெகதீஸ்வரன், எடிட்டர் ராஜா முகமது தயாரிப்பாளர்கள் ஏ.எல்.அழகப்பன், சிவசக்தி பாண்டியன், மகிழ்ச்சி த.மணிவண்ணன், பம்மல் சரவணராஜா, நிர்மல் சரவணராஜா, குறள் அமுதன், சுந்தரவரதன், ஊடகவியலாளர்கள் ஏகலைவன், கார்ட்டூனிஸ்ட் பாலா, சமூக போராளி அற்புதம் அம்மாள், அவரது மகன் பேரறிவாளன், புலவர் இரத்தினவேலன், ஆவல் கணேசன் உள்ளிட்ட தமிழ் சான்றோர்களும் சமூக பேராளுமைகளும் கலந்துகொண்டு மணமக்களை மனம் நிறைந்து வாழ்த்தினர்.
சிறப்பு விருந்தினர்களை இயக்குநர் வ.கௌதமன், தொழிலதிபர் க.கண்ணன், தயாரிப்பாளர் த.மணிவண்ணன் மற்றும் வளர்ந்து வரும் நடிகரான வ.கௌதமனின் மகன் கெள.தமிழழகன் உள்ளிட்டோர் வரவேற்று மகிழ்ந்தனர்.
அரங்கிற்குள் வரும் வழிநெடுக சங்ககாலம் தொட்டு இன்று வரையிலான மூலவன் முருகன், தொல்காப்பியர், ஒளவையார், கம்பர், வள்ளுவர், வள்ளலார் தொடங்கி, கரிகாலன், இராஜராஜ சோழன், மற்றும் தமிழ்த் தேசிய வழிகாட்டிகளான மேதகு பிரபாகரன் புலவர் கலியபெருமாள், தோழர் தமிழரசன், கௌதமனின் தந்தையும் தமிழ்த் தேசிய போராளியுமான தோழர் வடமலை, பாரதிதாசன், திருவிக, மறைமலையடிகள், பெருஞ்சித்திரனார் வரையிலான உணர்வுமிக்க பதாகைகளும் வரிசைகட்டி வரவேற்றது வருகை தந்த அனைவரையும் மகிழ்ச்சிக்குள்ளாக்கியது.

