கதை…
பாலாஜி சக்திவேல் ரிட்டையர்டு ஆசிரியர்.. இவரது மகன் பிரசாந்த் பாண்டியராஜ்.. தன்னைப் போலவே தன் ஒரே மகனும் அரசு அதிகாரியாக வேண்டும் ஆசைப்பட்டு அனைத்து தேர்வுகளையும் எழுத சொல்கிறார்.. ஆனால் எல்லாம் தேர்வுகளும் தோல்வியில் முடிகிறது..
ஒரு கட்டத்தில் தன் உறவினர் போலீஸ் காளி வெங்கட் மூலம் பிரசாந்துக்கு காவல்துறையில் வேலை கிடைக்கிறது..
சிபாரிசு மூலம் வேலை கிடைத்ததால் வேலையில் கொஞ்சம் அலட்சியமாக இருக்கிறார் பிரசாந்த்.. இதனால் பல பிரச்சினைகளை சந்திக்கிறார்.. ஒரு கைதி இவரது அலட்சியத்தால் தப்பி செல்கிறார்..
இதனால் காவல்துறையில் உயர் அதிகாரிகளின் அலட்சியத்துக்கு ஆளாகிறார்.. இதனால் ஒரு எடுப்பிடியாகவே இவரை நடத்துகின்றனர்..
ஒரு கட்டத்தில் போலீஸ் வேலையை வேண்டாம் என்று நினைக்கிறார்..
அதன் பிறகு என்ன நடந்தது.? போலீஸ் வேலையை விட்டு சென்றாரா அல்லது காவல் துறையில் சாதித்து காட்டினாரா? என்பதெல்லாம் இந்த தொடரின் மீதிக்கதை..
நடிகர்கள்…
விலங்கு இணைய தொடர் மற்றும் மாமன் படங்களை இயக்கியவர் பிரசாந்த் பாண்டியராஜன் இதில் கதை நாயகனாக மாறியிருக்கிறார். ஒரு அப்பாவி போலீஸ் ஆக நம் மனங்களை தன் நடிப்பில் மூலம் கவர்ந்து விடுகிறார்.. தாய் தந்தை பாசம் காதலி மீது நேசம் என எதார்த்த நடிப்பிலும் கவர்கிறார்..
கமர்சியல் போலீஸ் அல்லாமல் எதார்த்த போலீசாகவே வாழ்ந்திருக்கிறார்.. இவரின் சொந்த தம்பியும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் வந்து கிளைமாக்ஸ் எபிசோடில் வசனங்கள் மூலம் கவர்ந்து விடுகிறார்..
நாயகிகளாக நர்மிதா.எம்.வி, அருள்ஜோதி, சாயா தேவி ஒவ்வொருவரும் இரண்டு எபிசோடுகளில் வந்தாலும் நம் மனதில் அழகாக நடிப்பாலும் நிறைந்திருக்கின்றனர்..

பிரசாந்த் தந்தையாக பாலாஜி சக்திவேல், அம்மாவாக கெளசல்யா, போலீஸ் இன்ஸ்பெக்டராக அருள்தாஸ், காவலராக ஹெலோ கந்தசாமி, கொடைக்கானல் சரவணன், போலீஸ் அக்கா என ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் ஒரு பெரிய ஸ்பேஸ் கொடுக்கப்பட்டிருக்கிறது..
தொழில்நுட்பக் குழு
அசோக் குமாரின் ஒளிப்பதிவு… காவல் நிலையம் மற்றும் திருச்சி மாநகர அழகை காட்டியிருக்கிறார்..
சாம்.சி.என் பின்னணி இசை வழக்கம் போல் கவர்கிறது.. இரண்டு பாடல்கள் இருந்தாலும் இரண்டும் ரசிக்க வைக்கிறது..
ஆர்.ராமரின் படத்தொகுப்பு.. விறுவிறுப்பு இருந்தாலும் சில எபிசோடுகளை கொஞ்சம் கத்தரி போட்டு இருக்கலாம்..
பிரசாந்த் பாண்டியராஜ் கதை வடிவம் கொடுத்திருக்கிறார்.. இவருடன் பணிபுரிந்த விக்னேஷ் நடராஜன் இந்த படத்தை இந்த இணைய தொடரை இயக்கியிருக்கிறார்..
வழக்கமாக சினிமாவில் காண்பிக்கப்படும் காவல்துறை காட்சிகள் போல் அல்லாமல் காவல்துறையில் உள்ளே நடக்கும் சம்பவங்களை ஒவ்வொரு எபிசோடிலும் அழகாக காட்டியிருக்கிறார் முக்கியமாக கோர்ட் மற்றும் விசாரணை காட்சிகள் அதில் உள்ளே கைதிகளின் பொய் சாட்சி என அனைத்தையும் விளக்கமாக கொடுத்துள்ளார்..
என்னதான் காவலர்களாக இருந்தாலும் அவர்களின் பார்வையில் ஒரு சிறையில் கைது கொல்லப்பட்டால் அதன் பிறகு அவர்களின் மனநிலை என்னவாகும் மற்ற காவலர்களின் சூழ்ச்சி என்ன என்பதையும் அழகாக காட்டியிருக்கிறார்..
ஆக இந்த வாரண்ட் இணைய தொடர் நிச்சயம் பார்த்து ரசிக்க வேண்டிய ஒன்று..
