பண்டைய சோழப் பேரரசில் நிகழும் கற்பனை ஆக்ஷன்-அட்வென்ச்சர் விளையாட்டான Son of Thanjai, Xbox Series X|S மற்றும் PS5-இல் வெளிவர உள்ளது.
இந்த ஆட்டத்திற்கான கதை, திரைக்கதை, வசனம் மற்றும் பாடல்களை @madhankarky எழுதுகிறார். எந்திரன், பாகுபலி உட்பட 400 திரைப்படங்களுக்கும் மேலாக ஆயிரம் பாடல்களுக்கு மேலா பணியாற்றிய மதன்கார்க்கிக்கு இது முதல் கேமிங் முயற்சி.
உண்மையான தென்னிந்திய தற்காப்புக் கலை மரபில் வேரூன்றிய, கேமிங்கில் இதுவரை காணப்படாத, நெகிழ்வுத்தன்மை கொண்ட சுருள் வாள் (Surul Vaal) இவ்விளையாட்டில் இடம்பெறுகிறது. சண்டைக் காட்சிகள் உலகின் மிகப் பழமையான தற்காப்புக் கலைகளுள் ஒன்றான களரிப்பயற்றின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இந்த விளையாட்டை உருவாக்கியவர்கள் சென்னையை மையமாகக் கொண்ட 30 பேர் கொண்ட @AyeletStudio குழு. இது தமிழ் மொழியில் ஆங்கில சப்டைட்டிலுடன் உலகெங்கும் வெளியாகிறது. உலகெங்கிலும் உள்ள விளையாட்டாளர்களுக்குத் தமிழ் மண், மொழி, பண்பாடு ஆகியவற்றை அறிமுகப்படுத்தும்.
Xbox Series X|S மற்றும் PS5-இல் விரைவில்.
கேம்பிளே ரிவீல் டிரெய்லரைப் பாருங்கள்: https://www.youtube.com/watch?v=CuR16jMhdkQ
@onlynikil
#SonOfThanjai #CholaDynasty #Tamil #IndieGame #Xbox #PlayStation #Kalaripayattu #SurulVaal #MadhanKarky #AyeletStudios

