லின் இயக்கத்தில் Boonie Bears: The Hidden Protector
ஒரு காடு.. அதில் அண்ணன் பிரையர், தம்பி பிராம்பள் மற்றும் அவர்களின் நண்பன் விக் ஆகியோர் ஒரு கட்டத்தில் நியான் (Nian) மான்ஸ்டரை சந்திக்கிறார்கள்..
ஒரு சூழ்நிலையில் அந்த மான்ஸ்டர் மாய சக்திகளை இவர்களுக்கு கொடுத்து விட்டு செல்கிறார்.. பின்னர் அந்த சக்தி மூலம் மாய உலகமான ஈவ் சிட்டிக்கு செல்கிரார்கள்.. இப்படியான நேரத்தில் பிரையர் தன் அண்ணன் பதவியை இழந்து விடுகிறார்.. மேலும் மிகவும் பலவீனமானவராக இருந்து வருகிறார்..
இதனை அறிந்த ஒரு அரக்கன் ஒரு சக்தி வெளியாகிறது.., இதனால் மனித உலகம் பெரிய சிக்கலில் சிக்கிக் கொள்கிறது… இந்த ஆபத்தில் இருந்து அவர்கள் எப்படி காப்பாற்றப்படுகிறார்கள், என்பதை அனிமேஷன் பேண்டஸியாக ’பூனி பியர்ஸ் : தி ஹிடன் ப்ரொடெக்டர்’ கிளைமாக்ஸ் சொல்கிறது..
சீன புத்தாண்டு பழக்க வழக்கங்கள் அதில் பின்னணியில் போற்றப்படும் கலாச்சாரங்கள் என அனைத்தையும் அனிமேஷன் வடிவில் அழகாக சுவாரசியமாக சொல்லி இருக்கிறார்கள்..
டிவி சேனல்கள் கார்டூன் நிகழ்ச்சியை பார்ப்பவர்களுக்கு இந்த அனிமேஷன் படம் அதுவும் 3d கண்ணாடியை போட்டுக்கொண்டு பார்க்கும் போது ஒரு புது விதமான அனுபவத்தை தரும் என உறுதியாக சொல்லலாம்..
முழுக்க முழுக்க 3டி அனிமேஷன் படம் என்றாலும் இந்தியர்கள் அதிலும் முக்கியமான தமிழர்கள் விரும்பும் புராண கால கதை பின்னணியில் சொல்லப்பட்டு இருப்பதும் சுவாரஸ்யமான அனுபவம்..
கதாபாத்திரங்கள் வடிவமைப்பு அதற்கு ஏற்ற வசனங்கள் என அனைத்தும் ரசிக்க வைக்கிறது… முக்கியமாக தமிழ் வசனங்களில் த்ரிஷா உள்ளிட்ட வசனங்கள் வரும்போது தியேட்டரில் சிரிப்பொலையை காண முடிகிறது..
சிறுவர்கள் மட்டுமல்ல குடும்பத்தினர் அனைவரும் பார்த்து மகிழும் வகையில் நகைச்சுவை காட்சிகளும் இடம் பெற்றுள்ளது..
