வளர்ந்து இளைஞர்கள் ஆன பிறகும் அது தொடர்கிறது.. இந்த சூழ்நிலையில் கிரிகெட்டு தல ஆடும் மேட்ச் ஃபைனல் சென்னையில் நடைபெற உள்ளது.. இதுதான் தல அவர் கடைசி மேட்ச் என சொல்லப்படுவதால் நேரில் சென்று பார்த்தே ஆக வேண்டும் என்று இவர்கள் போட்டியை காண தயாராகின்றனர்..
இதற்காக ஊர் பணத்தை கொள்ளை அடித்து திருட்டுத்தனமாக பஸ் ஏறி சென்னைக்கு செல்கின்றனர்.. ஆனால் அங்கு சென்ற பிறகு ஒரு சில பிரச்சனைகளால் அவர்கள் எடுத்தது டூப்ளிகேட் டிக்கெட் என தெரிய வருகிறது.. இதனால் மேட்ச் பார்க்க முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது.. அடுத்த மேட்ச் காண இவர்கள் கிடைத்த சின்ன சின்ன வேலைகளை செய்கின்றனர்..
ஊருக்கு திரும்ப வேண்டுமென்றால் நிச்சயம் பணம் வேண்டும் என்ற சூழ்நிலையில் கிரிக்கெட் மேட்ச் பேட்டிங் சூதாட்டத்திற்கு தயாராகின்றனர்..
அதன் பிறகு நடந்தது என்ன? அந்த பெட்டிங்கில் இவர்கள் ஜெயித்தார்களா.?ஊர் பணத்தை கொண்டு கொடுத்தார்களா.? திருடிய குற்றத்திற்காக போலீஸ் இவர்களை கைது செய்ததா.? என்பதெல்லாம் மீதிக்கதை
கேரக்டர்ஸ்…
வைபவ் முருகேசன், லாவண்யா அன்பழகன், வெங்கட பாலமுரளி, ஜகபர் சதிக்.. இவர்களை சுற்றிய கதைகளும் அமைக்கப்பட்டுள்ளது.. ஜென்சி கிட்ஸ் மனநிலையில் காணப்படும் இவர்களுக்கு ஏற்ற கேரக்டர் தான்.. ஆனால் சில இடங்களில் ஓவர் ஆக்டிங்.. தங்களால் முடிந்தவரை முயற்சித்துள்ளனர்..
இவர்களுக்கு துணையாகவும் இந்த இணைய தொடருக்கு உறுதுணையாகவும் இருந்துள்ளனர் சில அனுபவமிக்க நடிகர்கள்…விவேக் பிரசன்னா, விஜய் சத்யா, நான் கடவுள் ராஜேந்திரன், சம்பத் ராம் & சரத் ரவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்..
பல படங்களில் வில்லனாக மிரட்டிய சம்பத் ராம் இதில் பெட்டிங் கட்டி ஆடும் சேட்டாக கெத்து காட்டியிருக்கிறார்.. ஜெயித்து விட்டு அவர் போடும் ஆட்டமும் ரசிக்க வைக்கிறது..
டெக்னீசியன்ஸ்…
ஒளிப்பதிவாளர் பி.எம்.ராஜ்குமார்.. ஒரே படத்தில் கிராமத்து அழகையும் நகரத்து அழகையும் காட்டும் சேலஞ்ச் இவருக்கு இருந்திருக்கிறது அதை அழகாகவே செய்து இருக்கிறார்..
பரத் தனசேகரின் பின்னணி இசை பல இடங்களில் இரைச்சலாகவே இருக்கிறது.. கானா பாடல்கள் அடுத்தடுத்து வருவது எரிச்சலை கிளப்புகிறது..
இந்தியாவில் இதுவரை நடைபெற்ற கிரிக்கெட்டுகள் அதில் வென்ற அணிகள் என பல்வேறு நுணுக்கங்களை ஆராய்ந்து இருந்தாலும் படத்தில் எந்தவித நெருக்கமும் நமக்கு ஏற்படவில்லை… மாறாக எப்போது எந்த எபிசோடு முடியும் என்ற அளவில் நம் மனநிலை காணப்படுகிறது..
கிரிக்கெட் பிரியர்களுக்கு கூட இந்த படம் பிடிக்குமா என்று தெரியவில்லை.. தேர்ச்சி பெற்ற நடிகர்களும் இல்லை… அவர்களிடம் போதுமான வேலை வாங்கும் திறமையும் இயக்குனரிடம் இல்லையோ என்ற கேள்வியும் எழுகிறது…
தொடரை இயக்கியிருக்கும் சவிர் சுதாகர்.. இதற்கு ஏன் இந்த வெப் சீரிஸ்.? குறும்படமே போதும் என்ற மனநிலையை காணப்படுகிறது… ஒவ்வொரு எபிசோடு முடியும்போது அடுத்தது என்ன நடக்கும் என்று எதிர்பார்ப்பு கொஞ்சம் கூட வரவில்லை…
