சிங் கீதம் விமர்சனம்.. வசனமே இல்லாமல் பாடல் பாடிய கலைஞர்கள்..

நாயகன் அயான்.. தன் சொத்துக்களை மீட்டெடுக்க தனக்கு உள்ள பிரச்சினைகளில் இருந்து சமாளிக்க தன்னுடைய அப்பாவின் சொந்த ஊரான குபேரபுரத்திற்கு செல்கிறார்…

அங்கு இருக்கும் இரண்டு தங்கச் சுரங்கங்களை நம்பி அங்குள்ள மக்கள் பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.. அந்த இரண்டு தங்கச்சரங்குகளில் ஒன்று தன் குடும்பத்திற்கு சொந்தமானது என்ற விவரத்தை அறிகிறார் அயான்..

ஏற்கனவே தனக்கு பல பிரச்சனைகள் இருக்கு இங்கு இருந்தால் மீண்டும் சிக்கிக் கொள்வோம்.. எனவே இந்த தங்க சுரங்கத்தை விற்றுவிட்டு தப்பித்துக் கொள்ளலாம் என நினைக்கிறார்..

இப்படியான சூழ்நிலையில் அனைத்து மரங்களும் வெட்டப்பட்ட நிலையில் ஒரே ஒரு அரச மரத்தை பாதுகாப்பாக வளர்த்து வருகிறார் நாயகி..

ஆனால் அதையும் ஒரு சிலர் வெட்டி எடுக்க குபேரனிடம் முறையிடுகிறார்… நாயகி இதனை எடுத்து அந்த ஊரில் உள்ள அனைவரும் பேச்சு வசனங்களை பேசாமல் பாடலாக பாடுகின்றனர்..

இந்த சாபத்திலிருந்து அந்த மக்களை எப்படி மீட்டு எடுத்தார்கள்.? யார் மீட்டது.? இந்த சாபம் நீங்க மக்கள் என்ன செய்தனர்.? தங்க சுரங்கம் மக்களுக்கு கிடைத்ததா.? என்பதெல்லாம் மீதிக்கதை

நடிகர்கள் & தொழில்நுட்ப குழு…

அறிமுக நாயகி அகல்யா பக்ரூவ்.. மரத்திற்காக இவர் நின்று போராடுவதும் மரத்தில் வசிப்பதும் என மரத்தை நேசிக்கும் ஒரு சமூக ஆர்வலராக பசுமையாக மனதில் நிறைகிறார்..

நாயகன் பிரதாப்.. ஜாலியான இளைஞனாக அதே சமயம் ஒரு கட்டத்தில் பொறுப்பான இளைஞனாக மாறி மக்களுக்கு நல்லது செய்கிறார்…

சுரங்கத் தொழிலதிபரின் மகள் ரேணுவாக ஷாலினி கொண்டேபூடி.. அழகிலும் நடிப்பிலும் கவர்கிறார் ஒரு கட்டத்தில் தந்தையின் பேராசையை கண்டு அவரையும் உதறி தள்ளுகிறார்..

சைலாஜம்மாவாக நிவேதா பெதுராஜ், கர்ப்பிணிப் பெண்ணாக வருபவர், பழங்குடியின பெண்ணாக வரும் துளசி என பல பெண் கதாபாத்திரங்கள் போற்றுதலுக்கு உரியதாகும்..

படம் முடியும் தருவாயில் இரண்டாம் பாகத்திற்கு அடித்தளமாக என்ட்ரி கொடுக்கிறார் தெலுகு நடிகர் விஜய் தேவரகொண்டா.. இனி சிங்கீதம் அடுத்த பாகத்தில் பாடலுக்கு பதிலாக நடனங்களை எதிர்பார்க்கலாம்..

கிளைமாக்ஸ் எதிர்பாராத திருப்பத்தை கொடுக்கும் முக்கியமாக நம் மனதை இதமாக்கும்… ஒவ்வொருவரும் தங்கமாக மாறும் அந்த காட்சிகள் அதிலிருந்து மக்கள் மீளும் காட்சிகள் என அனைத்தும் உணர்வு பூர்வமானவை..

கதாபாத்திரங்கள் தம் வசனங்களை பாடல்களாகப் பாடுவதை மக்கள் ரசிக்கும்படி கொடுத்திருக்கிறார் இசை அமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்.

அதற்காகவே சிறந்த பாடல் கலைஞர்களை தேர்வு செய்து அவர்களுக்கும் ஒரு வித்தியாசமான அனுபவத்தை கொடுத்து நமக்கும் வித்தியாசமான பாடலை கொடுத்து இந்த சிங்கீதம் படத்தை சிறப்பாக்கி இருக்கின்றனர் படக்குழுவினர்..

வசனங்கள் எல்லாமே பாடல்கள் ஆகிவிட்ட நிலையிலும் நாம் எப்போதும் கேட்கும் இனிமையான பாடல்களையும் சில இடங்களில் கொடுத்து அதையும் ரசிக்க வைத்துள்ளனர்..

ஒளிப்பதிவாளர் அங்கூர்.. ஒரே நிலத்தின் இரண்டு வெவ்வேறு பகுதிகளை கொடுத்திருக்கிறார்.. ஒன்று மேல்நிலை பரப்பில் ஒன்று பூமிக்கு அடியில் என வித்தியாசமான சிந்தனையுடன் கலை இயக்குனர் பணியை சிறப்பாக கொடுத்திருக்கிறார்…

சிங்கீதம் சீனிவாச ராவ்… நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான பேசும் படம் மற்றும் மைக்கேல் மதன காமராஜன் உள்ளிட்ட பல வித்தியாசமான திரைப்படங்களை இயக்கியவர் சிங்கீதம் சீனிவாசராவ்..

40 வருடங்களுக்கு முன்பே பேச்சே இல்லாமல் வசனம் இல்லாமல் ‘பேசும் படம்’ என்ற படத்தை கொடுத்தவர்.

இப்போது அவருக்கு 95 வயது ஆகிறது எனவே வித்தியாசமான முயற்சியாக படத்தில் வசனங்கள் இல்லாமல் பாடலாகவே அதாவது பேசும் வசனங்கள் கூட சாப்டீங்களா வந்திங்களா? தூங்குனீங்களா என்பதை கூட பாடலாகவே ஒலிக்கச் செய்து வித்தியாசமான திரைக்கதை அமைத்து படத்தை ரசிக்கும் படி கொடுத்திருக்கிறார் சிங்கீதம் சீனிவாச ராவ்… 95 வயதில் படம் இயக்குவதே பெரிய விஷயம்… அதையும் வித்தியாசமாக கொடுப்பது அவரின் கடின உழைப்புக்கு மிகப்பெரிய சான்றாகும்..

இந்தப் படம் முடிந்து நீங்கள் வெளியே வரும்போது வசனம் இல்லாமல் நீங்களும் பாடலாக பாடத் தோன்றும்… அதுதான் இந்த படத்தின் வெற்றி..

Related posts

Leave a Comment