கோபமடைந்த கூட்டத்தை எதிர்கொள்ளும் காஜல் அகர்வால், ஷ்ரேயாஸ் தல்படே!
நச்சு பூச்சிக்கொல்லி விவசாயத்தின் பின்னணியை மையமாகக் கொண்ட ‘தி இந்தியா ஸ்டோரி’ புதிய போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கிறது!
Zee Studios மற்றும், MIG Production இணைந்து தயாரித்துள்ள ‘தி இந்தியா ஸ்டோரி’ திரைப்படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. சேட்டன் DK இயக்கத்தில், சாகர் B. ஷிண்டே எழுதி தயாரித்துள்ள இப்படம், ஜூலை 24, 2026 அன்று உலகம் முழுவதும் இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது.
நச்சு பூச்சிக்கொல்லி விவசாயம் மனித உடல்நலத்தில் ஏற்படுத்தும் தீவிர விளைவுகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த சமூக அக்கறை கொண்ட நீதிமன்ற பின்னணித் திரைப்படம், உண்மை சம்பவங்களின் தாக்கத்தை வலுவான திரைக்கதையுடன் எடுத்துரைக்கிறது.
வெளியான புதிய போஸ்டரில், காஜல் அகர்வாலும் ஷ்ரேயாஸ் தல்படேவின் பதற்றமான சூழ்நிலையில் கோபமடைந்த பொதுமக்கள் கூட்டத்தால் சூழப்பட்டிருப்பது காணப்படுகிறது. காய்கறி சந்தையின் நடுவே நடைபெறும் இந்தக் காட்சியில், வியாபாரிகள் இருவரையும் நோக்கி காய்கறிகளை வீசுவதும், குற்றம் சாட்டுவதும் இடம்பெற்றுள்ளது. உண்மையை வெளிக்கொணர முயலும் நபர்கள் சந்திக்கும் எதிர்ப்பையும் சமூகத்தின் கோபத்தையும் இந்த போஸ்டர் வலுவாக பிரதிபலிக்கிறது.
போஸ்டரில் இடம்பெற்றுள்ள “Slow Poison in Progress…” என்ற வாசகம், மெதுவாக மனிதர்களின் வாழ்வை பாதிக்கும் மறைமுக அச்சுறுத்தலை சுட்டிக்காட்டி, படத்தின் மையக் கருத்தை மேலும் வலுப்படுத்துகிறது.
இயக்குநர் சேட்டன் DK கூறுகையில், “உண்மையை பேசுவதற்கான விலையை இந்த போஸ்டர் பிரதிபலிக்கிறது. ஏமாற்றத்தின் மீது கட்டமைக்கப்பட்ட ஒரு அமைப்பை கேள்வி கேட்கும்போது, முதலில் வெளிப்படுவது பயமும் கோபமும்தான். ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தின் ஒவ்வொரு காட்சியும் அந்தப் போராட்டத்தை உணர்த்துவதோடு, நாம் உண்ணும் உணவு மற்றும் நம்பிக்கைகளைப் பற்றி பார்வையாளர்கள் சிந்திக்க வைக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது” என்றார்.
இந்தப்படத்தில் இணை தயாரிப்பாளர்களாக ஸ்வாதி விநாயக் சைந்தானி,அனிதா ஜாதவ்,விநாயக் சைந்தானி, கல்பேஷ் ஷா, தேவ்யானி கொராடே மற்றும் பிரேம் ஜோஷி ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.
தொழில்நுட்பக் குழுவில் ஒளிப்பதிவாளர் நிஷாந்த் பகவத், இசையமைப்பாளர் மங்கேஷ் தாக்டே, படத்தொகுப்பாளர் ஆஷிஷ் மாத்ரே, பாடலாசிரியர் ஷகீல் அஜாமி , ஒலி வடிவமைப்பாளர் அன்மோல் பாவே ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
