கதை…
நாயகன் ரிஷிகாந்துக்கு காதல் தோல்வி.. எனவே ஊரை விட்டு துபாய்க்கு செல்கிறார்.. சில வருடங்களுக்குப் பிறகு ஊர் திரும்புகிறார்… அப்போது அவருக்கு தெரியாமல் திடீரென திருமண ஏற்பாடுகளை குடும்பத்தார் செய்து வைக்கின்றனர்.. நாயகி அனிஷ்மாவுடன் திருமணமும் நடக்கிறது… முதல் இரவு அன்று தன் பழைய காதலனுடன் ஓடிவிடுகிறார் நாயகி அனிஷ்மா..
அதன் பிறகு என்ன நடந்தது.. நாயகன் என்ன ஆனார்.? அவரின் நிலை என்ன.? நாயகி நிலை என்ன.? என்பதெல்லாம் மீதிக்கதை…
நடிகர்கள்….
மருது கேரக்டரில் நாயகன் ரிஷிகாந்த்.. எளிமையான உணர்வுகளை எதார்த்தமாக கடந்து செல்கிறார்.. முதலிரவு அன்று மனைவி ஓடிப் போனால் மணமகனின் நிலை என்ன என்பதை உணர்வுபூர்வமாக வெளிப்படுத்தி இருக்கிறார்…
அழகும் திறமையும் நிறைந்த நடிகை அனிஷ்மா.. ஏற்கனவே சிறை மற்றும் யூத் திரைப்படங்களில் ரசிகர்களை ஈர்த்து அனிஷ்மா இதிலும் அழகாகவே ஸ்கோர் செய்து இருக்கிறார்.. வசனங்களை பேசாமல் கண்களால் பேசி உணர்வுகளை வெளிப்படுத்தி இருக்கிறார்..
சேத்தன், பக்ஸ், சங்கீதா பாலன், பானுப்பிரியா, வர்ஷினி கார்மேகம், அப்துல் லீ, ஏ.வெங்கடேஷ் உள்ளிட்ட பலரும் கதை ஓட்டத்திற்கு பக்க பலமாக இருந்துள்ளனர்..
தொழில்நுட்ப கலைஞர்கள்…
ஒளிப்பதிவாளர் சுரேந்தரன் பரஞ்சோதி.. திருமண வீட்டு கலாட்டாக்களை சுவாரசியமாக படமாக்கி இருக்கிறார்..
பரத் சங்கரின் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் கதையுடன் ஒன்றி பயணிக்கிறது.
திருமண உறவு.. முதலிரவு.. உறவினர்கள்.. நண்பர்கள் என குடும்ப திருவிழா போல கதை சொல்லி இருக்கிறார் இயக்குநர் ராஜா கருப்புசாமி.. பல இடங்களில் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்து இருக்கிறார்..
ஒரு நாளில் நடக்கும் கதையை சுவாரசியமாக குடும்பப் பின்னணியில் சொல்லி இருக்கிறார் இயக்குனர்… திருமணம் முதலிரவு என வித்தியாசமான கதைகளத்தோடு படத்தை கலகலப்பாக்கி இருக்கிறார் இயக்குநர் ராஜா கருப்புசாமி..
Modha Rathri movie review
