கதை …
திருமண வயதை அடைந்த போதிலும் அந்த வயதை கடந்த போதிலும் பெண் கிடைக்காமல் நாயகன் ரியோ.. அப்போது அவரை அழகான நாயகி வர்டிக்கா காதலிக்கிறார்.. ஆனால் அவரின் ஒரே கண்டிஷன் மாலை 6 மணிக்கு மேல் சந்திக்கக் கூடாது என்பதுதான்.. முதலில் காதலுக்காக ஓகே சொன்னாலும் அதன் பிறகு 6 மணிக்கு மேல் அவருக்கு என்ன பிரச்சனை.. ஏன் சந்திக்கக் கூடாது? என்று அறிய ஆர்வம் காட்டுகிறார் ரியோ..
அப்போதுதான் அவருக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது.. அது என்ன என்பதுதான் திரைக்கதை..
நடிகர்கள்…
சீரியஸ் நாயகன் என்றாலும் காமெடியை கரெக்டாக செய்திருக்கிறார் ரியோ ராஜ்.. பெண்களைப் பற்றி தெரியாத அப்பாவி இளைஞராக ரியோ நடிப்பில் சிறப்பு..
அறிமுக நடிகை வர்டிகா அழகிலும் நடிப்பிலும் கவர்கிறார்.. முதல் படத்திலேயே அழுத்தமான வேடம் ஏற்றதற்கு பாராட்டுக்கள்..
சமீபத்தில் வந்த அன்பே டயானா படத்தில் நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்தார் சேத்தன்.. இதிலும் கவனிக்க வைக்கிறார்..
நாயகனின் அம்மாவாக மாளவிகா அவினாஷ், தங்கையாக தாஃபியா அபு, மாமனாக முனீஷ்காந்த், நண்பராக பாலாஜி..
நாயகியின் அம்மாவாக தீபா வெங்கட், மாமனாக மாகாபா, தாத்தா ஆகியோர் பொருத்தமான தேர்வு..
தொழில்நுட்ப கலைஞர்கள் …
ஒளிப்பதிவாளர் மல்லிகார்ஜுன்.. படத்தொகுப்பாளர் ஒய்.என்.சி.சிவா.. இருவரும் தங்கள் பணிகளில் நேர்த்தி..
அன்கிட் மேனனின் இசையில் பாடல்கள் அனைத்தும் இதமான இசையுடன் பயணிக்கிறது..
சின்னத்தம்பி படத்தில் கவுண்டமணிக்கு 6 மணிக்கு மேல் இருக்கும் பிரச்சினை போல இதில் நாயகிக்கு ஒரு பிரச்சனை… அதை சுவாரசியமாகவும் உணர்வுபூர்வமாகவும் சொல்லி இருக்கிறார் இயக்குனர் ராமச்சந்திரன் கண்ணன்..
நாயகியின் பிரச்சனை தெரிந்த பிறகு அதை ரியோ கையாளும் விதம் காதலுக்கு கொடுக்கும் மரியாதை.. அதன் உணர்வு அதன் வலி… என அனைத்தையும் எதார்த்தமாக பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் ராமச்சந்திரன் கண்ணன்..
