கதை…
கங்கை அம்மன் ரோஜா தம்பதியினர் இவர்களுக்கு விவசாயம் தொழில்.. அந்தப் பகுதியில் நடக்கும் மணல் கொள்ளைக்கு எதிராக போராடுகிறார் விவசாயி கங்கை அமரன்.. ஒரு கட்டத்தில் இவருக்கு ஆதரவாக அரசு அதிகாரியும் செயல்பட அவர் கொல்லப்படுகிறார்..
இந்த விவகாரம் காவல்துறை நீதித்துறைக்கு செல்ல.. விவசாயி கங்கை அமரனுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்படுகிறது அதன்படி தர்ஷன் விவசாயி பாதுகாக்க அவருடன் தங்கி இருக்கிறார்.. ஆனாலும் மீண்டும் மணல் கொள்ளையர்கள் கங்கை அமரனை கொல்லத் திட்டமிடுகின்றனர்..
ஏற்கனவே குடும்ப சூழ்நிலையால் பிரச்சினை சிக்கி தவிக்கும் தர்ஷனை மணல் கொள்ளையர்கள் விலை கொடுத்து வாங்க நினைக்கின்றனர்.
இறுதியில் என்ன ஆனது தர்ஷன்? விவசாயியை காப்பாற்றினாரா? என்பதுதான் மீதி திரைக்கதை..
நடிகர்கள்…
சிவாஜி கணேசன் மகன் ராம்குமாரின் மகன் தர்ஷன் இந்த படத்தின் கதாநாயகன்.. எதார்த்த போலீசாக தன் பணியை கம்பீரமாக செய்திருக்கிறார்..
கங்கை அமரன் ரோஜா தம்பதியினர்.. வயதானாலும் இவர்களின் காதல் இளமையானது.. ஒரு விவசாயின் வலியை உணர்வு பூர்வமாக நடிப்பில் வெளிப்படுத்தி இருக்கிறார் கங்கை அமரன்.. ஆனால் ரோஜாவுக்கு டப்பிங் குரல் கொடுத்த துளசி குரல் செட்டாகவில்லை..
ஆனால் அந்த ஊர் எல்லைச்சாமியை நம்பி இருப்பவர்களின் நிலை இதுதானா என்ற கேள்வியும் எழுகிறது.??
சில இடங்களில் பூங்காற்று திரும்புமா என்ற பாடல் ஒலிக்கும் போது 1980 காலகட்டங்களுக்கு நினைவுகள் செல்லும்..
இவர்களுடன் போஸ் வெங்கட் தன் நடிப்பில் மிரட்டி இருக்கிறார்… பொறுப்பான நேர்மையான நீதிபதியாக ஜார்ஜ் மரியான்.. ஆனால் நேர்மைக்கு தான் இடமாற்றம் இருக்குமே எனவே இவர் உடனே காணாமல் போகிறார்..
யுகேந்திரன், அர்ச்சனா, ஆடுகளம் நரேன் உள்ளிட்டோரின் நடிப்பு சிறப்பு….

தொழில்நுட்பக் குழு….
எட்வின் சாகே ஒளிப்பதிவும், இளையராஜாவின் இசையும் சிறப்பு..
முக்கியமாக இளையராஜா இசையில் ஒலிக்கும் பாண்டி முனி பாடல் பரவசப்படுத்துகிறது..
இந்தப் படத்தின் இயக்குனர் DD பாலச்சந்திரன்.. ஆதரவு இல்லாத அப்பாவியான ஒருவருக்கு வாழ்க்கைத் துணையாக வரும் ரோஜாவின் கேரக்டரை அழகுப்படுத்தி இருக்கிறார்..
அவர்களின் இளமை பருவ காதலை கங்கை அமரன் சொல்லும்போது கிராபிக்ஸ் காட்சிகளில் காட்டாமல் முகபாவனைகளை வைத்து சொல்லி இருப்பதால் காதல் உணர்வுகளை புரிந்துக் கொள்ள முடிகிறது…
நீதித்துறையும் காவல்துறையும் நேர்மையாக செயல்பட்டால் ஒரு சாமானியனுக்கு என்றென்றும் நீதி நிலைநாட்டப்படும் என கருத்தை வலியுறுத்தி இருக்கிறார் இயக்குனர்..

