இயக்குநர் மோகன் ராஜா இயக்கத்தில் உருவாகும் மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் 153-வது திரைப்பட பூஜை

இயக்குநர் மோகன் ராஜா இயக்கத்தில் உருவாகும் மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் 153-வது திரைப்பட பூஜை.

 

 

 

 

இயக்குநர் மோகன் ராஜா இயக்கத்தில் உருவாகும் மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் 153-வது திரைப்படத்திற்கு பிரம்மாண்ட பூஜை

இயக்குநர் மோகன் ராஜா இயக்கத்தில் உருவாகிறது மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் 153-வது திரைப்படம். தமிழில் ஜெயம், எம். குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி, சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்பிரமணியம், தனி ஒருவன், வேலைக்காரன் போன்ற ஜனரஞ்சகமான வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் இயக்குநர் மோகன் ராஜா.
இவரது இயக்கத்தில் மெகா ஸ்டார் நடிகர் சிரஞ்சீவியின் 153-வது திரைப்படத்திற்கு இன்று மிக பிரம்மாண்டமாக பூஜை நடத்தப்பட்டது. ஃபிலிம் நகரில் உள்ள சூப்பர் குட் ஃபிலிம்ஸ் அலுவலகத்தில் இப்பூஜை நடத்தப்பட்டது.
திரைப்படம் குறித்து இயக்குநர் மோகன் ராஜா பேசும்போது, “மெகாஸ்டார் சிரஞ்சீவியின் திரைப்படத்தை இயக்குவது என்பது எனக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கிகாரமாக கருதுகிறேன். அவருடைய ரசிகர்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் வகையில் நிச்சயமாக இத்திரைப்படம் உருவாக்கப்படும். நாங்கள் ஒரிஜினல் கதையை அப்படியே ரீமேக் செய்யவில்லை. மூலக்கதையை எடுத்துக் கொண்டு மெகா ஸ்டார் சிரஞ்சீவிக்கு ஏற்ப கதையை மெருகேற்றி மாற்றியிருக்கிறோம்” என்றார்.
திரைப்பட பூஜையில் அல்லு அரவிந்த், அஸ்வினி தத், டிவிவி தனய்யா, நிரஞ்சன் ரெட்டி, மெகா பிரதர் நாகபாபு, இயக்குநர் கொரட்டல்லா சிவா, தயரிப்பாளர்கள் தாகூர் மது, ஜெமினி கிரண், எழுத்தாளர் சத்யானந்த், மெஹர் ரமேஷ், பாபி, ராம் அசந்தா, கோபி அசந்தா, மிர்யாலா ரவீந்தர் ரெட்டி, நவீன் யெர்ரேனி, ஷிரிஷ் ரெட்டி, யுவு கிரியேஷன்ஸ் விக்க்கி மற்றும் பல பிரபலங்கள் கலந்து கொண்டு கவுரவித்தனர்.
கொனிடெலா தயாரிப்பு நிறுவனம், சூப்பர் குட் ஃபிலிம்ஸ் மற்றும் என்.வி.ஆர் ஃபிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தைத் தயாரிக்க ஸ்ரீமதி சுரேகா கொனிடெலா வழங்குகிறார். திரைப்படத்தை மோகன் ராஜா இயக்குகிறார்.
இந்த மெகா திரைப்படத்திற்கு தூள் பறக்க இசையமைக்கிறார் இசையமைப்பாளர் எஸ்.எஸ்.தமன். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். வசனம் லக்‌ஷ்மி பூபால், கலை சுரேஷ் செல்வராஜன், லைன் புரொடியூசர் வக்கடா அப்பாராவ்.
திரைப்படம் குறித்து தயாரிப்பாளர்கள் ஆர்.பி.சவுத்ரி மற்றும் என்.வி.பிரசாத் கூறுகையில், “வரும் பிப்ரவரி மாதம் முதல் படப்பிடிப்பைத் தொடங்கவுள்ளோம். இயக்குநர் மோகன் ராஜா திரைக்கதையில் பல புதுமைகளைப் புகுத்தி மண்ணின் மனம் கமழச் செய்துள்ளார். இந்தத் திரைப்படம் நிச்சயமாக மெகா ப்ளாக் பஸ்டர் ஹிட்டாக அமையும். சிரஞ்சீவியின் நடிப்புப் பயணத்தில் ஒரு மைல்கல் திரைப்படமாக இருக்கும்” என்றனர்.
படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள், நடிகையர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என படக்குழு தெரிவித்தது. இந்தத் திரைப்படத்தை ஸ்ரீமதி சுரேகா கொன்னிடெலா வழங்குகிறார்.

English Press Release

Megastar Chiranjeevi’s #153 Launched

Megastar Chiranjeevi’s project #153 was launched ceremoniously on Wednesday at Super Good Office in the city’s Film Nagar. Konidela Productions, Super Good Films, and N V R Films are jointly producing the movie with Smt. Surekha Konidela is presenting the movie. Mohan Raja is directing the film. Music Director S S Thaman is all set to provide scintillating music to this mega project.
Mega Producers Allu Aravind, Ashwini Dutt, DVV Danayya, Niranjan Reddy, Mega Brother Nagababu, Director Koratala Siva, Producer’s Tagore Madhu, Gemini Kiran, Writer Satyanand, Meher Ramesh, Bobby, Ram Achanta, Gopi Achanta, Miryala Ravinder Reddy, Naveen Yerneni, Sirish Reddy, UV Creations Vicky and others participated in the pooja ceremony.
Mega Project #153 producers R B Choudhary and N V Prasad while speaking to media on this auspicious occasion have said that they were planning to start regular shooting from February onwards. “Director Mohan Raja made suitable changes to the original script and improvised it that suits our nativity,” said the producers. The project will not only be a mega-blockbuster hit but will also remain one of the most prestigious movies in Megastar’s career, said the producers.
Director Mohan Raja seemed much elated while speaking to the media. “I am most fortunate to direct Megastar’s movie,” said Mohan Raja. He promised that this movie will reach all the expectations of Mega fans, he assured. This is not an original remake. We took the outline and improvised the story according to Megastar Chiranjeevi gari’s image. The production team said that it would announce the other cast and crew, shortly.

The Movie is presented by – Smt. Surekha Konidela.
Music: S S Thaman
Camera: Neerav Shah
Writer: Laxmi Bhupal
Art: Suresh Selvarajan
Line Producer: Vakada Apparao
Producers: R B Choudhary, N V Prasad
Screenplay and Direction: Mohan Raja

Related posts

Leave a Comment