கதை…
பெற்றோரை இழந்த சிறுவன் திஹான்.. இவன் தாத்தாவின் பராமரிப்பில் வளர்ந்து வருகிறான்.. தேசிய கொடிகள் தயாரிக்கும் இடத்தில் பணிபுரிகிறார் தாத்தா.. இவர் இந்திய தலைநகர் டெல்லி செங்கோட்டையில் ஜனாதிபதி ஏற்றும் கொடியை நேரில் பார்க்க வேண்டும் என்பது கனவு..
திடீரென ஒரு நாள் நோய்வாய்ப்பட்டு படுத்த படுக்கையாகி விடுகிறார்.. இவரது உயிர் ஊசலாடி கொண்டிருக்கும்போது இவரது கனவை நிறைவேற்ற பேரன் முயற்சி எடுக்கிறான்..
அந்த சிறுவனால் தாத்தாவின் கனவை நிறைவேற்ற முடிந்ததா.? அவன் என்ன செய்தான்.? டெல்லிக்கு எப்படி சென்றான் என்பதெல்லாம் மீதிக்கதை..
நடிகர்கள்…
மோகனவேல் என்ற கதாபாத்திரத்தில் கதை நாயகனாக சிறுவன் திஹான்.. ஒரு பக்கம் தேசப்பற்று.. மறுபக்கம் தாத்தா மீது பாசம் என இரண்டையும் அன்பால் அழகாக செய்து இருக்கிறார் இந்த சிறுவன்..
தாத்தாவை மறந்து பாசம் இல்லாமல் செல்போனில் மூழ்கி இருக்கும் இந்த கால சிறு குழந்தைகளுக்கு இந்த தாத்தா பாசம் புதிய படிப்பினையை கொடுக்கும்..
தாத்தா கதாபாத்திரத்தில் மிக்கி மக்கி ஜா, கிரி துவாரகேஷ், ஆனந்த், அபிநவ் கோசாமி, அமீர் மாலிக், பபுஷா, சினி உள்ளிட்ட அனைத்து நடிகர்களும் சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளனர்..
தொழில்நுட்பக் குழு…
ராஜா ரவி வர்மா மற்றும் பாலசுப்பிரமணியம் இசை படத்துடன் ஒன்றி பயணிக்கிறது..
ஒளிப்பதிவாளர் இயக்குனர் என இரண்டு பொறுப்புகளை எடுத்து இருக்கிறார் பொன் சங்கர்.. இரண்டையும் திறம்பட அழகாக செய்து இருக்கிறார்.. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை அழகியலை தேசப்பற்றுடன் விளக்கி இருக்கிறார்..
ஒரு சிறுவனால் இப்படி பயணிக்க முடியுமா என்ற லாஜிக் கேள்வி இருந்தாலும்.. தேசத்திற்காகவும் பாசத்திற்காகவும் இந்த FLAG கொடியை பறக்க விட்டு ரசிக்கலாம்..
