எல் கே சுதீஷ் எம் பி இல்லத் திருமண விழா..

தேமுதிகவின் பொருளாளரும் , திரைப்படத் தயாரிப்பாளரும்,ராஜ்யசபா எம்பியுமான எல் கே சுதீஷ் எம் பி மற்றும் பூர்ண ஜோதி சுதீஷ் அவர்களின் மூத்த மகள் டாக்டர்  ஜானு ஸ்ரீ எம் பி பி எஸ் அவர்களுக்கு ஓசூரைச் சார்ந்த அகில் குமார் என்பவரோடு திருமணம் நடைபெற உள்ளது.

திருமணம் சென்னை நீலாங்கரையில் உள்ள ஆர் கே கன்வென்ஷன் சென்டரில் வரும் நவம்பர் 22 ஆம் தேதி காலை 8:30 மணி முதல் 10 மணி வரை திருமணம் நடைபெற உள்ளது..

வரவேற்பு நிகழ்ச்சியும் அதே ஆர் கே கன்வென்ஷன் சென்டரில் நவம்பர் 21ஆம் தேதி மாலை 6.30 மணி முதல் நடைபெற உள்ளது..

இந்த திருமண நிகழ்ச்சியை கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மறைவிற்குப் பிறகு அந்த குடும்பத்தில்
நடக்கும் முதல் திருமண விழாவாக அனைவரும் கருதுவதால்.
தேமுதிகவின் தொண்டர்கள், சினிமா பிரபலங்கள், அரசியல்வாதிகள் என்று இத்திருமணத்தில் நிறைய பிரபலங்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

Related posts

Leave a Comment