மௌன மொழிகள் விமர்சனம்

கதை…

ஹீரோ ஷகீர் மனோ.. நண்பர் ஸ்ரீமன் இருவரும் ஒரு விளம்பர ஏஜென்ஸி நடத்தி அதன் மூலம் ஒரு நல்ல வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர்..

ஒரு அழகான பெண்ணை தான் திருமணம் முடிக்க வேண்டும் என நம்பிக்கையுடன் காத்திருக்கிறார் நாயகன்… ஒரு கட்டத்தில் கல்லூரி மாணவி அர்ச்சனாவையும் சந்திக்கிறார்.. அவர் பழகிப் போட்டியில் மிஸ் சென்னை பட்டம் வென்றவர்..

அவர் மேல் காதலும் கொள்கிறார்.. ஆனால் ஒரு கட்டத்தில் ஹீரோயின் அர்ச்சனா ஒரு விபத்தில் சிக்கி தன் முக அழகை இழக்கிறார்..

அதன் பிறகு என்ன செய்தார் நாயகன்.. காதலித்து கரம் பிடித்தாரா.? மிஸ் சென்னை பட்டம் பெற்ற அர்ச்சனா அடுத்த என்ன செய்தார்.? என்பதெல்லாம் மீதிக்கதை..

நடிகர்கள்…

பிரபலமான பாடகர் மனோவின் மகன் தான்  ஷாகீர்.. அப்பாவைப் போலவே  அழகாக இருக்கிறார். ஆனால் நடிப்பில் இன்னும் மெச்சூரிட்டி தேவை..

நாயகி அர்ச்சனா சிங்.. நடிப்பிலும் அழகிலும் ஓகேதான் இன்னும் கூடுதல் மெனக்கடல் தேவை.. மற்றொரு ஹீரோயின் திவ்யா நாகேஷ்.. இளமை துள்ளலான நடிப்பை கொடுத்திருக்கிறார்..

நண்பராக அர்ஜுனன் நந்தகுமார்.. நல்ல காமெடி செய்து படத்தை கலகலப்பாக்கி இருக்கலாம் ஆனால்.?

இவர்களுடன் தலைவாசல் விஜய், மீரா கிருஷ்ணன், அஞ்சலி தேவி உள்ளிட்டோரும் உண்டு..

தொழில்நுட்பக் குழு…

இயக்கம்: ஏ.சி. சௌந்தர்
தயாரிப்பு: பி. பாலசந்திரன், பி. ஸ்ரீமன்
இசை: நல. இளந்திரையன்
ஒளிப்பதிவு: எம்.ஜி. ராய்
மக்கள் தொடர்பு: சரண்

இசையமைப்பாளர் நல. இளந்திரையன்.. பாடல்களும் பின்னணி இசையும் ஓகே ரகம்தான்.. எம். ஜீ.. ராய் கலர்புல் ஒளிப்பதிவைக் கொடுத்துள்ளார்.

மௌன மொழிகள் தலைப்பு மட்டும் கவிதையாக இருக்கிறது.. ஆனால் படத்தில் பாட்டு ஃபைட் ஆக்ஷன் என அதிரடியான திரைக்கதையை கொடுத்திருக்கிறார் இயக்குனர்..

ஆனால் தமிழ் சினிமாவில் நாம் பார்த்து பழகிய பழைய ஃபார்முலா டெம்ப்ளட்டை வைத்திருக்கிறார் டைரக்டர்.. முக்கியமாக சில காட்சிகள்   அடுத்தது பைட்.. அடுத்தது சாங்.. என இப்படியாகவே திரைக்கதையை நகர்த்தி இருக்கிறார் ஏசி சௌந்தர்..

ஆனால் ஓர் அருமையான மெசேஜ்.. காதல் என்பது முகத்தை பார்த்து வருவதல்ல அகத்தைப் பார்த்து வருவது தான் உண்மையான காதல் என்ற மெசேஜ் கொடுத்து இருக்கிறார் இயக்குனர் சௌந்தர்..

மேலும் சாலைகளை சுற்றி தெரியும் சில பைத்தியங்கள் காதலில் தோல்வியுற்றவர்களாக கூட இருக்கலாம் என்பதையும் சொல்லி இருக்கிறார்..

Related posts

Leave a Comment