ராக்கி – விமர்சனம்

நடிப்பு : ஸ்ரீகாந்த்,நாசர்,ஈஷான்யா,சயாஷி ஷின்டே,பிரம்மானந்தம்

இயக்கம் : கே சி பொடியா

கதை: தன் உயிரைக் காப்பாற்றி அடைக்கலம் கொடுத்த எஜமானை கொன்றவர்களை பழிவாங்கும் நாயின் டபுள் ஆக்ஸன் கமர்சியல் மசாலா.

ஸ்ரீகாந்த் மிகவும் நேர்மையான போலீஸ் ஆபிசர், அவர் ஒரு நாள் வேலை முடிந்து வரும் போது விபத்தில் அடிபட்ட ஒரு நாய்க் குட்டியைப் பார்த்து காப்பாற்றி, வீட்டுக்கு எடுத்து வந்து ராக்கி என்று பெயர் வைத்து வளர்க்கிறார். அவரது மனைவி ஈஷான்யாவும் ராக்கியை குழந்தை போல பார்த்துக்கொள்கிறார். ராக்கியின் துறுதுறு தனத்தை கண்டா ஸ்ரீகாந்த் அதை போலீஸ் துறை துப்பறியும் நாய்கள் பயிற்சி நிலையத்தில் சேர்த்து பயிற்சி பெற வைக்கிறார். துப்பறிவதில் எக்ஸ்பர்ட்டாகி விட்ட ராக்கியுடன் சேர்ந்து பல வழக்குகளில் குற்றவாளிகளை பிடிக்கிறார் ஸ்ரீகாந்த் . இந்நிலையில் லோக்கல் எம்எல்ஏ சாயாஜி சிண்டேக்கும் ஸ்ரீகாந்துக்கும் பிரச்சினை ஏற்படுகிறது. அதே சமயம் சிறையில் இருந்து பாம் பாண்டியன் எனும் குற்றவாளியை தேடி செல்லும் போது சாயாஜி மற்றும் அவரது கூட்டாளிகளால் கொல்லப் படுகிறார் ஸ்ரீகாந்த் . இதையடுத்து, தன் ஸ்ரீகாந்தை கொன்ற குற்றவாளிகளைத் தேடிக் கண்டி பிடித்து ராக்கி பழி வாங்குவது தான் படத்தின் மீதி கதை.

நேர்மையான போலீஸ் அதிகாரியாக வரும் ஸ்ரீகாந்த் பிட்டாக இருக்கிறார். வேலையில் நல்ல போலீஸ் அதிகாரி, மனைவி மீது அதிக பாசம் காட்டும் கணவன் என நன்றாக நடித்திருக்கிறார். நாயகி ஈஷான்யா. அன்பான மனைவியாக நடித்துள்ளார்.

போலீஸ் கமிஷ்னர் ரோலில் வரும் நாசர், வில்லன் சாயாஜி சிண்டேவும், அவரது கூட்டாளிகளான ஓ.ஏ.கே.சுந்தர் மற்றும் கராத்தே ராஜா ஆகியோர் சிறப்பாக நடித்துள்ளனர்.

வழக்கமாக தமிழ் சினிமாவில் ஹீரோ அல்லது ஹீரோயின் இல்லையென்றால் வில்லன் தான் இரட்டை வேடத்தில் வருவார்கள் ஆனால் இந்த படத்தில் நாய் இரட்டை வேடத்தில் நடித்துள்ளது கொஞ்சம் புதுமைதான் மேலும் ஹீரோ என்ன வேலை ஒரு கமர்சியல் படத்தில் செய்வாரோ ( ரொமான்ஸ் தவிர ) அத்தனையும் இந்த ராக்கி செய்வது அருமை.

பப்பி லஹரி மற்றும் சரன் அர்ஜுனின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசையை ஓரளவிற்கு ரசிக்க வைத்திருக்கிறது.

மொத்தத்தில் இந்த ராக்கி இன்னும் கொஞ்சம் திரைக்கதையில் கவனம் செலுத்தியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்

Related posts

Leave a Comment