மே 5 தமிழாற்றுப்படை வரிசையில் பெரியார் கவிஞர் வைரமுத்து கட்டுரை அரங்கேற்றம்!

தமிழுக்கு முன்னோடிகளாக விளங்கும் மூவாயிரம் ஆண்டுப் பேராளுமைகளைத் ‘தமிழாற்றுப்படை’ என்ற வரிசையில் கடந்த சில ஆண்டுகளாகக் கவிஞர் வைரமுத்து ஆய்வுக்கட்டுரை எழுதி அரங்கேற்றி வருகிறார்.

இதுவரை தொல்காப்பியர் – அவ்வையார் – கபிலர் – திருவள்ளுவர் – இளங்கோவடிகள் – செயங்கொண்டார் – கம்பர் – அப்பர் – ஆண்டாள் – திருமூலர் – வள்ளலார் – உ.வே.சாமிநாதையர் – கால்டுவெல் – பாரதியார் – பாரதிதாசன் – அண்ணா –  கலைஞர் – மறைமலையடிகள் – புதுமைப்பித்தன் – கண்ணதாசன் – பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் – ஜெயகாந்தன் – அப்துல் ரகுமான் என்று 23 ஆளுமைகளை அரங்கேற்றியிருக்கிறார். தமிழாற்றுப்படையின் நிறைவுக்கட்டுரையாக தந்தை பெரியாரை ஆய்வு செய்து திருச்சியில் அரங்கேற்றவிருக்கிறார்.

நாளை மே 5 ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு திருச்சி, கலைஞர் அறிவாலயத்தில் விழா நடைபெறுகிறது. திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி விழாவுக்குத் தலைமை ஏற்கிறார். முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தொடக்கவுரை ஆற்றுகிறார். பேராசிரியர் அருணன் வாழ்த்துரை வழங்குகிறார். தந்தை பெரியாரின் திருவுருவப் படத்திற்குத் தமிழன்பர்கள் மலரஞ்சலி செய்கிறார்கள்.
திருச்சி வெற்றித்தமிழர் பேரவையின் தலைவர் பி.வீ.பாஸ்கர், சந்திரன், அரிமா ஜெயக்கண், சாத்தனூர் சிவா, எஸ்.மணி, சீதாராமன், மாருதி கண்ணன், பிரகாஷ், கவிஞர் நந்தலாலா, தமிழ்ச்சங்கம் வரதராஜன், கி.ஆ.பெ.வி.கதிரேசன், பேராசிரியர் குபேந்திரன், பீர் முகமது, ஜெயகர்ணா, டாக்டர் இஸ்தியாக் அகமது, ஜெரார்ல்டு இக்னேசியஸ், ஆர்.ராஜ், வானதி  ஆகியோர் விழா ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர்.

Related posts

Leave a Comment