ஒரு அபார்ட்மென்ட்-ல் உடல் கட்டப்பட்டு இருக்கிறார் அருள்நிதி. அவருக்குப் பின்னால் ஒரு பெண் இறந்து கிடக்கிறாள். இந்தச் சம்பவத்திற்கு யார் காரணம்? இப்படியான சூழலில் இருந்து அருள்நிதி எப்படித் தப்பித்தார் என்பதே படத்தின் திரில்லர் கதை.
வெற்றிபெற்ற, பெறும் கலைகளின் ஆகப்பெரும் பலமே எளிமை தான். எளிமை இல்லாத கலை எளிய மனிதர்களை ஈர்ப்பதே இல்லை. அந்த வகையில் பெரும் குழப்பமான திரைக்கதையை K13-ல் கூடுமான வரையில் எளிமைப்படுத்தி தந்திருக்கிறார் இயக்குநர் பரத் நீலகண்டன்.
எந்தவொரு பொழுதுபோக்கு அம்சமும் இல்லாத படம் தான். கொஞ்சமேனும் ஒரு திரில்லிங்கான அனுபவத்தைத் தருவதால் படத்தோடு ஒன்ற முடிகிறது. மெளனகுருவையும் இரவுக்கு ஆயிரம் கண்களையும் இணைத்து தன் நடிப்பில் வெளிப்படுத்தி இருக்கிறார் அருள்நிதி. கதாநாயகிக்கு அடிச்சி அந்தர் பன்ற அளவிற்கான கேரக்டர் சிறப்பாக நடித்திருக்கிறார். குற்றவுணர்ச்சியோடு மல்லுக்கட்டும் காட்சிகளில் ஹீரோயினோடு முட்டி மோதி போரிடுகிறார் காயத்ரி. குறிப்பிட்ட அந்தக்காட்சியில் இருவரின் நடிப்பும் அப்படியொரு சிறப்பு
ஒரு சிறிய வட்டத்திற்குள்ளே படம் பயணிப்பதால் முன்பாதியிலே சற்றுநேரம் நமக்கு சலிப்பு மனநிலை எட்டிப்பார்க்கிறது. முன்பாதி முடிவதற்கு சற்று நேரத்திற்கு முன்பாக அட்டகாச ட்விஸ்ட் வந்து ஆசுவாசப்படுத்துகிறது.
பின்பாதி கதை விறுவிறுப்பான நடையில் சென்றாலும் க்ளைமாக்ஸ்..”என்ன அப்பு, இதுக்கா இவ்ளோ பில்டப்பு” என்ற ரேஞ்சில் முடிந்து விடுவதால் படம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
சாம்.சி.எஸ் பின்னணி இசை ஒன்றே படத்தின் ஹை லெவல் எனர்ஜி. ஒவ்வொரு ஷாட்டுக்கும் அவ்வளவு உழைப்பைக் கொடுத்திருக்கிறார். ஒளிப்பதிவாளரும் மெச்சத்தக்கவரே.
மற்றபடி க்ளைமேக்ஸில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தி இருந்தால் படம் நின்று பேசி இருக்கும்.