கீ – திரை விமர்சனம்

வெகு நாட்களாக கீ இல்லாமல் கிடப்பில் கிடந்த கீ படம்  வெளியாகி இருக்கிறது. தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனை இந்தக் கீ முன்னாடி கொண்டுவரும் என்று பார்த்தால் பாவம் ரிவர்ஸ் கியர் போட்டு பின்னாடி தள்ளி விட்டிருக்கிறது.
தொழில்நுட்ப வளர்ச்சி தனிமனித சுதந்திரத்தை எப்படியெல்லாம் ஆக்கிரமிக்கும் என்பதையும், அந்த தொழிநுட்பத்தை அதிகமாக கத்துக்கிட்டவன் அதை வைத்து என்னவெல்லாம் பண்ணுவான் பண்ணலாம் என்ற பயமுறுத்தலும் தான் இப்படத்தின் கதை.
விதை நெல்லாய் இருக்க வேண்டிய கதை உமிகளைப் போல போய்விட்டது. படத்தில் லாஜிக் என்பது ஊறுகாய் அளவிற்கு கூட இல்லை. ஜீவா என்ற நல்ல நடிகர் படத்திற்கு பெரும் எனர்ஜியாக இருந்து மொத்த உழைபையும் கொடுத்திருக்கிறார். ஆனால் இயக்குநர் அவரின் உழைப்பை அநியாயத்திற்கு தன் சொதப்பல் திரைக்கதையால் வீணடித்திருக்கிறார். நிக்கி கல்ராணி கதாபாத்திரத்தில் துளி அளவு கூட ஈர்ப்பில்லை. ஆர்.ஜே பாலாஜி அங்கங்கே சில பன்ச்கள் அடித்து சிரிக்க வைக்கிறார். அதைவிட ஜீவாவும் அவர் அப்பாவும் பேசும் செண்டிமெண்ட் காட்சிகளுக்குத் தான் சிரிப்பு அதிகமாக வருகிறது?!

ஜீவாவை போலவே வில்லனும் நடிப்பில் மிரட்டி இருக்கிறார். ஆனாலும் வில்லன் கதாப்பாத்திரமும் வலிமையாக எழுதப்படவில்லை. தயாரிப்பாளரை மட்டும் தூக்கி எறியாமல் படம் பார்க்கும் நம்மையும் தூக்கி எறிந்திருக்கிறது கீ.

நாடோடிகள் உள்பட பல தரமான படங்களைத் தந்த மைக்கேல் ராயப்பனா இப்படியா கதைகளைத் தேர்ந்தெடுத்தார்? சத்தியசோதனை!

Related posts

Leave a Comment