நடிகர் சங்கத் தேர்தலில் மீண்டும் போட்டியிடும் நாசர் & விஷால் அணி!

தென்னிந்திய நடிகர் சங்கத்தில், நாசர் தலைமையிலான நிர்வாகக் காலம் முடிவடைந்ததை யடுத்து, 2019 -2022 ஆண்டுகளுக்கான நிர்வாக குழுவைத் தேர்வு செய்யும் தேர்தல் ஜூன் 23 அன்று நடைபெறவுள்ளது.

இதற்கான வேட்புமனு தாக்கல் ஜூன் 8-ஆம் தேதி தொடங்கி 10-ஆம் தேதி நிறைவு பெறுகிறது. மேலும், ஜூன் 14-ஆம் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். இந்தத் தேர்தல், சென்னை அடையாறு ஜானகி எம்.ஜி.ஆர். கல்லூரியில் நடைபெற உள்ளது. காலை 7 மணிக்குத் தொடங்கும் வாக்குப்பதிவு, மாலை 5 மணி வரை நடைபெறும். மாலை 6 மணிக்கு மேல் வாக்கு எண்ணிக்கை தொடங்கி உடனடியாக முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

இந்நிலையில் இந்தத் தேர்தலில் நாசர் – விஷால் அணி மீண்டும் போட்டியிடவுள்ளது.இதற்கான 26 பேர் கொண்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தலைவர் பதவிக்கு நாசரும் பொதுச்செயலாளர் பதவிக்கு விஷாலும் துணைத் தலைவர்கள் பதவிக்கு பூச்சி முருகன், கருணாஸும் பொருளாளர் பதவிக்கு கார்த்தியும் போட்டியிடவுள்ளார்கள். மேலும் செயற்குழு உறுப்பினர்களுக்கான பதவிகளுக்கு ஸ்ரீமன், பசுபதி, ரமணா, நந்தா, குட்டி பத்மினி, கோவை சரளா, மனோபாலா, குஷ்பு, லதா உள்ளிட்ட பலர் போட்டியிடுகிறார்கள்.

Related posts

Leave a Comment

three + five =