விஜய் ஆண்டனி முரட்டுத் தனமான கேரக்டரில், நான், சலீம் படங்கள் இரண்டும் நன்றாக ஓடி கல்லா கட்டி இருக்கிறது. மேலும் பக்கா செண்டிமெண்ட் ஆக நடித்த பிச்சைக்காரன் படமும் இண்டஸ்ட்ரி ஹிட் ஆகி தூள் கிளப்பியது. தற்போது வரும் ஜுன் 7 ஆம் தேதி வெளிவர இருக்கும் கொலைகாரன் படமும் அந்த வரிசையில் சேரும் என்கிறார்கள் படக்குழுவினர். ஏனென்றால் கொலைகாரன் படத்தில் நான் சலீம் படங்களில் போல் பக்கா திரில்லர் விசயங்களும் இருக்கிறதாம், பிச்சைக்காரன் படத்தைப் போல பக்கா செண்டிமெண்ட் மேட்டரும் இருக்கிறதாம். அதனால் படம் எப்படியும் பட்டயக் கிளப்பும் என்கிறார்கள். காத்திருப்போம்
நான், சலீம், பிச்சைக்காரன் வரிசையில் கொலைகாரன்

