தேவி + 2- விமர்சனம்!

ரொம்ப நாட்களுக்குப் பிறகு சொல்லி அடித்திருக்கிறார் இயக்குநர் விஜய். குழந்தைகளை கொண்டாட வைக்கும் அளவில் ஒருபடம் வந்துவிட்டால் நிச்சயம் அப்படங்களை குடும்பங்களும் கொண்டாடும். தேவி படத்தில் தமன்னாவை பெண் பேய் வந்து ஆட்டும். தேவி+2-வில் பிரபுதேவாவை இரண்டு ஆண் பேய்கள் வந்து ஆட்டுகின்றன. அந்தப் பேய்களிடம் இருந்து தமன்னா எப்படி கணவனை மீட்டு எடுக்கிறார், பேய்கள் போடும் கான்ட்ராக்ட் என்னாச்சு என்பது தான் 2 மணி நேர தேவியாட்டம்.

நடிகர் பார்த்திபன் குரலில் தேவி முதல்பாகத்திற்கும் இந்த பாகத்திற்கும் உள்ள தொடர்போடு கதை துவங்குகிறது. அதனால் முதல் காட்சிக்கு முன்பே நாம் படத்தோடு ஒன்றி விடுகிறோம். மொரீசியஸ்க்கு தமன்னாவோடு செல்லும் பிரபுதேவாவிற்கு அங்கு தான் இரண்டு பேய்கள் பிடிக்கின்றன. அந்த இரண்டுப் பேய்களுக்கும் உள்ள மோட்டிவேஷன் ஒரு காதல் என்பது தான் கலாட்டா ஏரியா. தமன்னா பிரபுதேவாவின் திடீர் அவதாரங்களைக் கண்டு தவிப்பதும், கோவை சரளா அதற்கு உதவி செய்வதும் சம்மர் ஆபர் காமெடி.

பிரபுதேவாவிற்கு கிட்டத்திட்ட மூன்று கேரக்டர். சாப்டான பிரபுதேவா, உருகி காதலிக்கும் ஜாலி பிரபுதேவா, அதிரடியாக காதலித்து ஆக்சனில் இறங்கும் பிரபுதேவா என மூன்று கேரக்டர்களாக மாறி அசரடிக்கிறார். தமன்னாவின் சோல்டரில் தான் மொத்தப்படமும் என்றளவில் தமன்னாவிற்கு அவ்ளோ வெயிட் கேரக்டர். படம் முழுதும் அதகளப்படுத்தி இருக்கிறார். அஜ்மல் படத்தின் இறுதியில் வைக்கும் ட்விஸ்ட் சூப்பர். நந்திதா ஸ்வேதா சில காட்சிகள் வந்தாலும் சிறப்பான பங்களிப்பை கொடுத்திருக்கிறார். எல்.கே.ஜி ஹீரோ ..அதான் நம்ம பாலாஜி பத்து நிமிடம் வந்தாலும் அதை கெத்து நிமிடமாக்கி விடுகிறார். படத்தில் நடித்த எல்லா கதாபாத்திரங்களும் மனதில் நிற்கும் அளவில் ரைட்டிங் வொர்க் அமைத்திருப்பதில் இயக்குநரின் மெனக்கெடல் தெரிகிறது. முன்பாதியில் சற்று நிதானமாக படம் பயணித்தாலும் பின்பாதி அசூர வேகம். குறிப்பாக பேய்களை விரட்ட கோவை சரளா, தமன்னா போடும் ஐடியாக்கள் எல்லாம் குட்டி சுட்டீஸுக்கு வயிற்றை வலிக்கச் செய்யும் காமெடிகள்.

காஞ்சனாவைக் கொண்டாடிய மக்கள் இந்தத் தேவி+2வை கொண்டாடுவதற்கான எல்லா சாத்தியங்களும் படத்தில் இருக்கிறது.

ஒரு க்ளாமர் பாடல் படத்தில் இருக்கிறது. குழந்தைகள் தியேட்டரில் குவியும் இவைபோன்ற படத்தில் அதைக் கொன்சும் தவிர்த்து இருக்கலாம். சண்டைக்காட்சிகளில் கூடுதல் அழுத்தம், பாடல்கள் பின்னணி இசை இரண்டிலும் கூடுதல் டெம்போ ஏத்தி இருக்கலாம். இப்போதும் குறை ஒன்றுமில்லை.

நம்பி போங்க நல்லா சிரிச்சுட்டு வாங்க

Related posts

Leave a Comment