விஜய்யின் மாஸ்டர் படத்தின் மூலம் தமிழ் திரையுலகம் கொஞ்சம் நிமிர்ந்து நடைபோட தொடங்கிவிட்டது. கடந்த மாதங்களில் எக்கச்சக்கப் படங்கள் திரையரங்கில் வெளியாகிக் கொண்டிருக்கிறது. ஆனால், பாலிவுட் இன்னும் பழைய நிலைக்குத் திரும்பவில்லை. பாலிவுட் ரசிகர்கள் கொரோனா அச்சத்தினால் இயல்பாக திரையரங்குக்கு வரவில்லை.
தமிழுக்கு விஜய்யின் மாஸ்டர் போல, பாலிவுட் திரையுலகம் சல்மான் கானின் ராதே படத்தை நம்பியிருக்கிறது. சல்மான் கான், திஷா பதானி நடிப்பில் உருவாகிவரும் ‘ராதே: தி மோஸ்ட் வான்டட் பாய்’ திரைப்படம் வரும் ரம்ஜான் பண்டிகை தின ஸ்பெஷலாக மே 13ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தை பிரபு தேவா இயக்கியிருக்கிறார். மாஸ்டர் போல, பக்கா கமர்ஷியல் மாஸ் படமாக இருக்கும் என்கிறார்கள்.
சல்மான் கானுக்குப் போட்டியாக பாலிவுட் நடிகை கங்கனா களமிறங்குகிறார். விஜய் இயக்கத்தில் கங்கனா நடிப்பில் உருவாகிவரும் படம் ‘தலைவி’. தமிழக முன்னாள் முதலமைச்சரான ஜெயலிலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியிருக்கிறது. ஜெயலலிதாவின் சினிமாவும் அரசியலுமாகப் படம் உருவாகியிருக்கிறதாம். இந்தப் படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகிறது. சல்மான் கானின் ராதேயும் இந்தி தவிர தமிழிலும் தெலுங்கிலும் டப்பாகி வெளியாகும் என்கிறார்கள்.
தமிழில் மாஸ்டரும், ஈஸ்வரனும் பொங்கல் ரிலீஸில் போட்டிப் போட்டதுபோல, பாலிவுட்டில் சல்மான் கானின் ராதே மற்றும் கங்கனாவின் ‘தலைவி’ படங்களுக்கு நடுவே பெரிய போட்டி இருக்கும் என்கிறார்கள்.
இந்திய அளவில் இவ்விரு படங்களுக்கும் எதிர்பார்ப்பு இருப்பது போல, தமிழில் சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் டாக்டர் படமும் ரம்ஜான் பண்டிகைக்கு வெளியாகும் என்று அறிவித்திருக்கிறார்கள். அதோடு, அதே ரம்ஜானை இலக்காக கொண்டு சிம்புவின் மாநாடு, விக்ரமின் கோப்ரா, தனுஷின் ஜெகமே தந்திரம் படங்களும் ரம்ஜான் பண்டிகை ஸ்பெஷலாக வெளியாகத் திட்டமிட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தப் பட்டியலில் சில படங்கள் பின்வாங்கவும் வாய்ப்பு அதிகம் இருக்கிற