அரிமாநம்பி இருமுகன் ஆகிய படங்களின் இயக்குநர் ஆனந்த்சங்கர் இயக்கத்தில் விஷால்,ஆர்யா,மிருணாளினி உள்ளிட்ட பலர் நடிக்கும் புதிய படம் எனிமி.இந்தப்படத்தின் படப்பிடிப்பு 2020 அக்டோபர் 16 ஆம் தேதி ஐதராபாத்தில் தொடங்கியது.
அதன்பின் இடைவெளி விட்டுவிட்டு நடந்த அப்படத்தின் படப்பிடிப்பு தற்போது துபாயில் நடந்துவருகிறது.
அங்கு படப்பிடிப்பு தொடங்கியபின் வருவதாகச் சொன்ன விஷால், சொன்னதைவிட சில நாட்கள் தாமதமாகச் சென்றாராம்.
அங்கு போனவுடன் ஓரிரு நாட்கள் படப்பிடிப்பில் கலந்து கொண்டவர், அப்புறம் காணாமல் போய்விட்டார் என்கிறார்கள். மூன்று நாட்கள் அவரைத் தொடர்பு கொள்ளவே முடியவில்லையாம்.
மூன்று நாட்களுக்குப் பின் வந்து படப்பிடிப்பில் கலந்து கொண்டாராம்.
இதனால், திட்டமிட்டதைவிட பத்துநாட்கள் அதிகமாகப் படப்பிடிப்பு நடத்தவேண்டியிருக்கிறதாம். இதனால் படக்க்ழூவினர் தாமதமாகத்தான் சென்னை திரும்புவார்கள் என்று சொல்லப்படுகிறது.
இதனால் படத்தின் தயாரிப்பாளர் வினோத், மிகவும் நொந்துபோயிருக்கிறார் என்று சொல்கிறார்கள்.
ஐதராபாத்தில் படப்பிடிப்பு தொடங்கிய நேரத்திலும் நான்கு நாட்கள் அவர் படப்பிடிப்புக்கு வராமல் காணாமல் போனார் என்பது குறிப்பிடத்தக்கது.