தமிழ்சினிமா வந்ததும்-போனதும் வசூல் செய்தது என்ன?

தமிழ் சினிமாவில் தினந்தோறும் புதிய பட அறிவிப்புகள் வந்து கொண்டிருக்கிறது, படங்களின் முதல் பார்வை, முன்னோட்ட டிரைலர், தனிப்பாடல்கள் வெளியீடு என சமூக வலைதளங்களில் நிரம்பி வழிகின்றன. சினிமா துறையினர் நிரம்பி இருக்கும் வாட்ஸ்அப் குழுக்களில் புதிய படங்கள் வெளியீடு, படங்களுக்கு சமூக வலைதளங்களில் வழங்கப்பட்ட மதிப்பெண்கள் என பெருமையுடன் தயாரிப்பாளர்களால் பகிரப்பட்டு வருகின்றன

வாரந்தோறும் வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படங்களின் உண்மை வசூல் நிலவரங்கள் மிக மோசமாக இருக்கிறது என்கின்றனர் திரையரங்கு உரிமையாளர்கள்
இந்த வருடம் ஜனவரி மாதம் 12, பிப்ரவரி மாதம் 22, மார்ச் இதுவரை 10 என  45தமிழ் படங்கள் திரையரங்குகளில் வெளியிடப்பட்டுள்ளது இவற்றில் நட்சத்திர அந்தஸ்து உள்ள படங்கள்
1. மாஸ்டர்(விஜய்)2. கபடதாரி(சிபிராஜ்)3.பாரிஸ் ஜெயராஜ்(சந்தானம்)4.கமலி From நடுக்காவேரி5.சக்ரா(விஷால்)
6. வேட்டைநாய்(R.K. சுரேஷ்)
7. மிருகா(ஸ்ரீகாந்த்)
8.அன்பிற்கினியாள்(அருண்பாண்டியன்)9. நெஞ்சம் மறப்பதில்லை(சூர்யா)
10. சங்கத் தலைவன் (சமுத்திரகனி)
மேற்குறிப்பிட்டுள்ள படங்களில் மக்களுக்கு அறிமுகமான, பிரபலமான நடிகர் நடிகைகள் நடித்திருந்தாலும் மாஸ்டர், நெஞ்சம் மறப்பதில்லை படங்களை தவிர்த்து மோசமான தோல்வியை சந்தித்திருக்கின்றன அப்படங்களின் முதலீட்டுடன் ஒப்பிடுகிறபோது பல திரைப்படங்கள் தொடக்க காட்சிக்கு பார்வையாளர்கள் வராததால் காட்சிகள் தியேட்டர்களில்ரத்து செய்யப்பட்டது
கொரானா ஊரடங்கு விலக்கி கொள்ளப்பட்டு சகஜமான வாழ்க்கை – இயல்புநிலைக்கு திரும்பிய பின்னர் திரையரங்குகள் திறக்கப்பட்ட பின்னரும் மக்கள் தியேட்டருக்கு வருவதற்கு பயப்படுகின்றனரா என திரையரங்கு உரிமையாளர்கள் வட்டாரத்தில் கேட்டபோது “அதுவே பிரதான காரணமாக கூறமுடியாது”
ஒரு காலாண்டில் தமிழ் சினிமா பாக்ஸ்ஆபீஸில்அதிகபட்சமாக வசூல் ஆகும் தொகை 700 திரைகளில் வெளியிடப்பட்ட”மாஸ்டர்” படத்தின் மூலம் டிக்கட் விற்பனை, ரசிகர் மன்றங்கள் டிக்கட் விற்பனை செய்ததன் மூலமாக தமிழகத்தில் சுமார் 200 கோடி ரூபாய் கிடைத்துள்ளது.
அது மட்டுமல்லாமல் கேண்டின், பார்க்கிங் மூலமாக சுமார் 120 கோடி ரூபாய் என 320 கோடி ரூபாய் பணம் 15 நாட்களில் மக்கள் மாஸ்டர் படத்திற்காக செலவு செய்துள்ளனர் அதற்கடுத்து வெளியான எந்தப் படமும் 120 ரூபாய் கொடுத்து டிக்கட் வாங்கி, 3 மணி நேரத்தை உபயோகப்படுத்த தகுதியான படங்கள் இல்லை என்கிற பேருண்மையை தயாரிப்பாளர்களும், புதுமுகங்களை வைத்து படம் இயக்கும் இயக்குனர்களும் புரிந்துகொண்டால் தமிழ்சினிமா உருப்படும் என்கின்றனர்.
மாஸ்டர் படத்திற்கு பின்வந்த படங்களில் இளைஞர்களால் கொண்டாடப்பட்ட படம் “நெஞ்சம் மறப்பதில்லை” நான்கு வருடங்கள் தாமதமாக வந்த படம். எதிர்மறையான விமர்சனங்கள் வந்தபோதும் இயக்குனர் செல்வராகவன், நாயகன்எஸ்.ஜே.சூர்யா ஆகியோரது ரசிகர்களால் கொண்டாப்பட்ட படமாக அமைந்தது மருந்துக்கு கூட இந்த படத்தை பார்க்க குடும்பங்கள் தியேட்டருக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது என்கின்றனர் தியேட்டர் உரிமையாளர்கள்
நெஞ்சம் மறப்பதில்லை படத்தின் அதிக பட்சவசூல் சென்னை, மற்றும் புறநகரில் இயங்கும் மால்கள், கோவை இந்த மூன்று விநியோக ஏரியா பகுதிகளில் கிடைத்திருக்கிறது முதல் வார முடிவில் சுமார் 6 கோடி ரூபாய் வசூல்தமிழக திரையரங்குகள் மூலமாக கிடைத்திருக்கிறது நெஞ்சம் மறப்பதில்லைநான்கு கோடி ரூபாய்க்குதமிழக உரிமை வாங்கப்பட்டுள்ளது இரண்டாவது வாரமும் முதல் வாரம் போன்று வசூல் கிடைக்கும் பட்சத்தில் தமிழக விநியோகஸ்தருக்கு அசல் வரவாகி லாபம் கிடைக்கலாம்.நேற்றைய தினம்(12.03.2021) வெளியான 1தீதும் நன்றும்,2.கணேஷபுரம்3. பூம்பூம் காளை4. ஆதங்கம் என நான்கு படங்களும் வசூல் ரீதியாக பின்னடைவை சந்தித்துள்ளன பல ஊர்களில் தொடக்க காட்சிக்குடிக்கட் விற்பனை ஆகாததால் காட்சிகள் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன.

Related posts

Leave a Comment