இரண்டாம் திருமணத்தை உறுதிப்படுத்திய விஷ்ணு விஷால்

தமிழ் சினிமா நடிகர்களில் ஒருவரான விஷ்ணு விஷால், 2009ம் ஆண்டில் சுசீந்திரன் இயக்கத்தில் வெளிவந்த ‘வெண்ணிலா கபடி குழு’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து ‘முண்டாசுப்பட்டி, ஜீவா, இன்று நேற்று நாளை, ராட்சசன்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

அவர் நடித்துள்ள ‘காடன்’ படம் தமிழ், தெலுங்கில் அடுத்த வாரம் வெளியாக உள்ளது. இப்படத்திற்கான வெளியீட்டிற்கு முந்தைய நிகழ்வு ஐதராபாத்தில் நடைபெற்றது. அப்போது தன்னுடைய திருமணத்தைப் பற்றி விஷ்ணு விஷால் அறிவித்துள்ளார். அவருக்கும் இந்திய பாட்மிண்டன் வீராங்கனையான ஜுவாலா கட்டாவுக்கும் சில வருடங்களாகவே காதல் இருந்து வருகிறது. இருவரும் ஜோடியாக இருக்கும்புகைப்படங்களை சமூக

வலைதளங்களில் விஷ்ணு விஷால் வெளியிட்டு வந்தார் ஆனால் திருமணம் பற்றிய செய்தியை அறிவிக்காமலும், உறுதிப்படுத்தாமலும், வதந்திகளுக்கு பதில் சொல்லாமல் மௌனம் காத்துவந்த விஷ்ணு விஷால் மெளனம் கலைத்து
படப்பிடிப்பிலும் ஒரு படம் முடிவடையும் வரையிலும் ஜுவாலா கட்டா எனக்கு மிகப் பெரும் ஆதரவாக இருக்கிறார். விரைவில் நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள உள்ளோம். திருமணத் தேதி பற்றி விரைவில் அறிவிக்கிறோம், சீக்கிரமே நான் தெலுங்கு மாப்பிள்ளை ஆகப் போகிறேன்,எனத் தெரிவித்துள்ளார்.
விஷ்ணு விஷாலுக்கும் நடிகர் ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பரான இயக்குனரும், நடிகருமான நட்ராஜ் மகள் ரஜினிக்கும் 2010ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. 2018ல் இருவரும் விவகாரத்து செய்து கொண்டனர். அவர்களுக்கு 4 வயதில் ஆர்யன் என்ற மகன் இருக்கிறான்.

Related posts

Leave a Comment