பாஜகவுக்கு வாக்களித்தால் பிரியாணி சாப்பிடலாம் – நமீதா

பாஜக வேட்பாளர் சரவணனை ஆதரித்து மதுரை வடக்கு தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் நடிகை நமீதா பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

தாமரை சின்னத்தில் வாக்களித்தால், விலையில்லா எரிவாயு சிலிண்டரில் பிரியாணி சமையல் செய்து சாப்பிட்டுக் கொண்டே, இலவச கேபிள் இணைப்பில் மகிழ்ச்சியாக தொலைக்காட்சித் தொடா் பாா்க்கலாம் என்று நடிகை நமீதா பிரசாரம் செய்தார்

தேர்தல் களத்தில் அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி, அமமுக கூட்டணி, மக்கள் நீதி மய்யம் கூட்டணி, நாம் தமிழர் கட்சி என்று 5 முனை போட்டி நிலவுகிறது. இதோடு புதிய தமிழகம் சுயேச்சை வேட்பாளர்கள் பலரும் களத்தில் உள்ளனர். தேர்தல் தேதி நெருங்கி வருவதால் அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இதற்கிடையில், தேர்தலில் வாய்ப்பு வழங்கப்படாததால் மதுரை திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி திமுக எம்.எல்.ஏ.வாக செயல்பட்டு வந்த சரவணன் கடந்த 14ஆம் தேதி அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். பாஜகவில் இணைந்த சரவணன் அதிமுக கூட்டணியில் மதுரை வடக்கு தொகுதி பாஜக வேட்பாளராக களமிறங்கியுள்ளார்.

இந்நிலையில், சரவணனை ஆதரித்து, கருப்பாயூரணி, சீமான் நகா், கோமதிபுரம், மேலமடை பகுதிகளில் இன்று வாக்கு சேகரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார் நமீதா.

அவர் பேசுகையில், “எனது சகோதரி, அக்கா, தங்கை, பாட்டி அனைவருக்கும் வணக்கம்.

இங்கு இருக்கும் ‘மச்சான்ஸ்’ உங்களுக்கும் வணக்கம். பாஜக வேட்பாளா் சரவணன், தனது அறக்கட்டளை வாயிலாக 20 ஆண்டுகளாக மருத்துவ சேவை செய்து வருகிறாா். ஏராளமான அறுவை சிகிச்சைகள் இலவசமாக செய்துள்ளாா். மாற்றுத் திறனாளிகளுக்குத் தொடா்ந்து உதவி செய்து வருகிறாா். ஒன்றுமில்லாத கட்சியில் இருந்தபோது இவ்வளவு சேவையை செய்ய முடிந்திருக்கிறது. இப்போது பாஜகவில் இணைந்திருப்பதால், பிரதமா் நரேந்திர மோடியைப் போல ஏழை, எளிய மக்களுக்கு இன்னும் உதவிகளைச் செய்வாா். ஆகவே, அவருக்கு வாக்களிக்க வேண்டும்.

தாமரை சின்னத்துக்கு வாக்களித்தால், ஆண்டுக்கு 6 எரிவாயு சிலிண்டர் இலவசமாகக் கிடைக்கும். அனைவருக்கும் வாஷிங் மிஷின் இலவசமாக வழங்கப்படும். கேபிள் தொலைக்காட்சி இணைப்புக்கு கட்டணம் செலுத்தத் தேவையில்லை. வீட்டிலிருக்கும் பெண்கள் இலவச எரிவாயு சிலிண்டரில் பிரியாணி சமைத்து, சாப்பிட்டுக் கொண்டே மகிழ்ச்சியாக தொலைக்காட்சித் தொடா் பாா்க்கலாம் என்றாா்.

வருடத்திற்கு 6 கேஸ் சிலிண்டர் இலவசமாக கொடுக்கப்போகிறோம். மகிழ்ச்சியா?. என பெண்களைபார்த்து தாமரைக்கு ஓட்டு கேட்டார்.

அதன்பின் உங்களுக்கு எப்போது வேண்டுமோ அப்போது உங்களின் விருப்பமான பிரியாணி செய்து சாப்பிடுங்கள். என்னையும் பிரியாணி சாப்பிட அழையுங்கள். நானும் வருவேன். ஆனால், நான் சைவ பிரியர். சைவ பிரியாணி தான் சாப்பிடுவேன் என்றார். நமீதாவின் எதார்த்தமான பேச்சை பலரும் ரசித்தனர்

Related posts

Leave a Comment

14 − four =