தமிழகம் முழுவதும் கர்ணன் திரையரங்குகளில் கொரானா பரவலை பற்றிய பயமின்றி இளைஞர்கள் கூடி கல்லாவை
நிரப்பி வருகின்றனர் படம் பற்றிய எதிர்மறையான விமர்சனங்கள் அதேபோன்று படத்தை பாராட்டி விமர்சனங்கள் சம அளவில் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது
அசுரன் படம் வணிகரீதியாக வெற்றிபெற்ற பின் தனுஷ் நடிப்பில் வெளிவந்த பட்டாஸ் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை கர்ணன் இந்த இரண்டு படங்களை
காட்டிலும் அதிகபட்ச வசூலை குவித்து வருகின்றது சாதிக்கு ஆதரவான படம் கர்ணன் என்கிற குற்றசாட்டு,விவாதம் முதல் நாளே சமூக வலைதளங்களில் தொடங்கியது இதனை முறியடிக்கவும் சாதி உரிமை பேசும் படமாக கர்ணன்அடையாளப்படுத்தபட்டு விடக்கூடாது என்பதற்காக தயாரிப்பாளர் கலைப்புலி தாணு சினிமா, அரசியல், பொதுவானவர்கள் என அனைத்து தரப்பு VIP க்களிடமும் படம் பற்றி பாசிட்டுவான விமர்சனங்களை பதிவு செய்யுமாறு தனிப்பட்ட முறையில் வேண்டுகோள் வைத்திருக்கிறார் ஆனால்களநிலவரம் வேறு மாதிரியான சூழலை உருவாக்கி வருகிறது 2019ல் மோகன்ஜீ இயக்கத்தில் ரிச்சர்ட் நாயகனாக நடித்து வெளியான “திரெளபதி” படத்தை தணிக்கை செய்து வெளியிடுவதற்கு கடுமையான நெருக்கடி போராட்டங்களை எதிர்கொண்டார் தயாரிப்பாளரும் இயக்குனருமான மோகன்ஜீ படம் வெளியான பின்பு அதனை தங்களுடைய படமாக கொண்டாட தொடங்கியது வடமாவட்டங்களில் வன்னிய சமூகமும் கொங்கு மண்டலத்தில் கொங்கு வேளாளர்களும் தென் மாவட்டங்களில் முக்குலத்து சமூகமும் இதன் காரணமாக 65 லட்ச ரூபாயில் தயாரிக்கப்பட்ட “திரெளபதி” 19 கோடி ரூபாய் அளவுக்கு தமிழகத்தில் வசூல் செய்தது. அதேபோன்ற நிலை கர்ணன் திரைப்படத்திற்கும் உருவாகியுள்ளது கொரானா பயம் காரணமாக குடும்பங்கள் வர பயப்படும் நிலையில் கர்ணன் படம் பார்க்க இதுவரை திரையரங்குக்கு வந்த கூட்டம் அனைத்தும் 35 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் தன்எழுச்சி, என் சமூக உரிமை பேசும்படம் என்கிற மனோநிலையில் குறிப்பிட்ட இரண்டு சமூகத்தினர் படம் பார்க்க அதிகளவில் குடும்பமாக தியேட்டருக்கு வர தொடங்கியுள்ளனர்
இதற்கு காரணம் இது நமது படம், நம் உரிமை பேசும்படம், நமது பலத்தை காண்பிக்க வேண்டும் எனவே தமிழகம் முழுவதும் குடும்பத்துடன் சென்று
” கர்ணன்” படம் பார்க்க வேண்டும் என்று அன்பு கட்டளை பிறப்பிக்கபட்டிருக்கிறது படத்தில் யாருடைய உரிமை பேசப்பட்டிருக்கிறதோ அந்த சமூக அமைப்பின் சார்பில் அதனால்தான் அசுரன் திரையரங்குகளில் ஓடி முடியும் பொழுது என்ன வருவாய் கிடைத்ததோ அதே அளவு தொகை மூன்று நாட்களில் கர்ணன் படத்திற்கு வருவாயாக கிடைத்திருக்கிறது என்கின்றனர் தியேட்டர், விநியோகஸ்தர்கள் வட்டாரங்களில்