மறைந்த நடிகர் விவேக்கின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது என்று கூறி முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ள நீண்ட இரங்கல் செய்தியில், “விவேக், தலைமைச் செயலகத்தில் பணியாற்றி பின்னர் திரைத்துறையில் நாட்டம் கொண்டு ’மனதில் உறுதி வேண்டும்’ என்ற படத்தின் மூலம் நடிகராகத் தனது கலையுலக வாழ்க்கையைத் தொடங்கினார்.30 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ்த் திரையுலகில் சிறந்த நடிகராகத் தனது ஆளுமையைக் கோலோச்சியவர். விவேக் தன்னுடைய சொந்த வாழ்க்கையிலும் சமூக நலனைக் குறிக்கோளாகக் கொண்டு வாழ்ந்தசமூகஆர்வலர்.இளைஞர்களுக்
அதுமட்டுமின்றி மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் கனவை நனவாக்கும் வகையில் ‘க்ரீன் கலாம்’ என்ற அமைப்பின் மூலம் 1 கோடி மரக்கன்றுகளை நடுவதை இலக்காகக் கொண்டு அதைத் தீவிரமாக செய்துவந்தார்.
விவேக் மிகவும் எளிமையானவர். பழகுவதற்கு இனிமையானவர். கலைத்துறையில் இவரது ஈடு இணையற்ற பங்களிப்புக்காக மத்திய அரசால் வழங்கப்படும் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருது தமிழக அரசின் கலைவாணர் விருது, சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருதுகள், ஃபிலிம் ஃபேர் விருதுகள் என எண்ணற்ற விருதுகளைப் பெற்ற சிறப்புக்குரியவர்.தனது ஈடு இணையற்ற கலைச்சேவையாலும், சமூகச் சேவையாலும் தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்த்த விவேக்கின் மறைவு தமிழ்த் திரைப்படத்துறைக்கும் ரசிகப் பெருமக்களுக்கும் சமூக ஆர்வலர்களுக்கும் பெரிய இழப்பாகும். அவருடைய இடத்தை இனி எவராலும் நிரப்ப முடியாது.அவர் மறைந்தாலும் அவரது நடிப்பும் சமூகச் சேவையும் என்றென்றும் தமிழ் நெஞ்சங்களில் நீங்கா இடம் பிடித்திருக்கும். விவேக்கை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கு திரைத்துறையினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன் அன்னாரது ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
துணை முதல்வர் பன்னீர் செல்வம், “திரைப்படங்கள் மூலம் பல சமூக சீர்திருத்த கருத்துகளை பரப்பிய திரு.விவேக் அவர்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மரம் வளர்ப்பு ஆகியவற்றிலும் முக்கியப்பங்கு வகித்தவர்.பத்மஸ்ரீ விவேக்அவர்களின் மறைவு இச்சமூகத்திற்கும், தமிழ் திரையுலகிற்கும் மிகப்பெரிய இழப்பாகும். தனது வாழ்நாள் முழுவதும் நகைச்சுவை மூலம் நம்மை மகிழ்ச்சியில் திளைக்கவைத்தவர், இன்று சோகத்தில் நம்மை ஆழ்த்திவிட்டார்” என்று இரங்கல் தெரிவித்துள்ளார்.