தேமுதிகவில் வேட்பாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி-அதிரடி மாற்றத்துக்கு தயாராகும் தலைமை

தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவடைந்த பின் எல்லா கட்சி தலைமையும் எத்தனை இடங்களில் வெற்றிபெறுவோம் என்கிற ஆய்வில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர் தலைமை தேர்தல் செலவுக்கும், வாக்களர்களுக்கும் என கொடுத்த பணம் கடைகோடி வரை செல்லாதவாறு கரன்சிகளை கவனமாக பதுக்கியவர்களை களை எடுக்கபட்டியல் தயாரித்து வருகின்றனர்

 விஜயகாந்த் செயல்பட இயலாத குழலில் கட்சி தலைமையை கைப்பற்றிய பிரேமலதா விஜயகாந்த், எல்.கே.சுதீஷ் இருவரும் தமிழக அரசியல் அரங்கில் மாத்தி யோசித்து செயல்படுபவர்கள் என கூறுவார்கள் தமிழகம் முழுவதும் 60 தொகுதிகளில் அமமுக கூட்டணியில் போட்டியிட்ட தேமுதிக தனது வேட்பாளர்கள் தேர்தல் செலவுக்கு எதையும் திட்டமிட்டு செய்யவில்லை
பிரேமலதா விஜயகாந்த் தான் போட்டியிட்டவிருதாசலம்தொகுதிக்குள் முடங்கிபோனார். எல்.கே.சுதீஷ் கொரானாவால் முடக்கப்பட்டார் வேறுவழியின்றி விஜயகாந்த் மௌனமாக கை உயர்த்தி முரசு சின்னத்திற்கு தமிழகம் முழுவதும் பிரயாணம் செய்துவாக்கு கேட்டார் அவரது மகன் விஜய் பிரபாகரன் மட்டுமே அந்த கட்சியின் வேட்பாளர்களுக்காக 60 தொகுதியிலும் பிரச்சாரம் செய்து வாக்கு கேட்டார் இதனால் தேமுதிக வேட்பாளர்கள் தங்கள் சக்திக்கு உட்பட்டு கடன் வாங்கி உற்சாகத்துடன் சட்டமன்றதேர்தல் வேலை செய்தனர்
தான் வெற்றிபெற முடியாவிட்டாலும் தேமுதிக கட்சியை சட்டமன்றதேர்தல் இடஒதுக்கீட்டில் நம்ப வைத்து அவமானப்படுத்திய அதிமுக வேட்பாளர் தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்தனர் வேட்பாளர்கள். அந்த ஒற்றை நோக்கமே தலைமை உதவி இல்லை என்றபோதும் தேமுதிகவினரை தேர்தல் களத்தில் தீவிரமாக களப்பணியாற்ற காரணமானது
வாக்கு எண்ணிக்கையன்று அதிமுக வேட்பாளர்கள் தோல்வியடையும் தொகுதிகளில் அதனை கொண்டாட பட்டாசு வெடிக்கதேமுதிக நிர்வாகிகள் இப்போதே தயாராகி வருவதை காண முடிகிறது அதற்கு காரணம் கடந்த 16.04.2021 அன்று தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள், அந்த தொகுதிக்குட்பட்ட மாவட்ட கழக, ஒன்றிய கழக செயலாளர்கள் அனைவரும் சென்னைக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது
என்ன காரணமாக இருக்கும் என்கிற குழப்பத்தில் 17.04.2021 சென்னை வந்தடைந்த வேட்பாளர்கள், நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்ற கூட்டத்தில் தலைமை கழகம் சார்பில் பங்கேற்று பேசிய எல்.கே.சுதீஷ் தேர்தல் பணி, வெற்றிவாய்ப்பு பற்றி கேட்டு இருக்கிறார். தொகுதிவாரியாக வேட்பாளர்கள் செலவு செய்த விபரங்களும் சேகரிக்கப்பட்டுள்ளது அப்போது பேசிய சில வேட்பாளர்கள் தலைமை முன்கூட்டியே உதவி செய்திருந்தால் சில இடங்களில் வெற்றி பெற்றிருக்க முடியும் பெரும்பான்மையான தொகுதிகளில் இரண்டாம் இடமும், அதிமுக, பாஜக வேட்பாளர்கள் தோல்விக்கு நமது வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் காரணமாகி இருக்கும் என கருத்து தெரிவித்திருக்கின்றனர்
தேர்தலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு கொடுத்த மூன்று லட்சம் நிதியை முன்கூட்டியே கொடுத்திருந்தால் பிரச்சாரத்தை கூடுதல் வலிமையோடு கொண்டு சென்றிருக்கமுடியும்என்பதை கவனமாக கேட்ட எல்.கே.சுதீஷ்
வேட்பாளர்கள் எல்லோரும் தேர்தல் செலவுக்காக கடன் வாங்கியிருப்பது கட்சி தலைமைக்கு தெரியும். உங்கள் சிரமத்தில் கட்சி தலைமை பங்கேற்கும் தன்னம்பிக்கையோடு கட்சி பணியாற்றுங்கள் என ஆறுதலாக பேசி கூட்டத்தை முடித்துள்ளார் இதுக்கு ஏன் இவ்வளவு அவசரமாக, யாருக்கும் தெரியாமல் சென்னைக்கு வாருங்கள் என அழைத்தார்கள் என்கிற கேள்வியுடன் ஊர் திரும்பிய வேட்பாளர்களுக்கு மறுநாள் பொழுது புலர்ந்த போது இன்ப அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது தேமுதிக தலைமை
வேட்பாளர்கள் அனைவருக்கும் தேர்தலுக்கு சில தினங்களுக்கு முன்பு தலா 3 லட்ச ரூபாய் அவரவர் வங்கி கணக்கில் வரவு வைத்தது தேமுதிக தலைமைநடந்து முடிந்த வேட்பாளர்கள், நிர்வாகிகள் கூட்டத்தில் தொகுதிவாரியாக சேகரிக்கப்பட்ட தேர்தல் செலவு கணக்கு. அடிப்படையில் மாவட்ட செயலாளர்கள் மூலம் வேட்பாளர்களுக்கு நிதியை அனுப்பி வைத்து இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது தேமுதிக தலைமை தேர்தல் முடிந்துவிட்டால் பாராமுகமாய் மாறிவிடும் முதலாளித்துவ அரசியல் கட்சிகளில் தேமுதிக முதல் முறையாக தனது வேட்பாளர்கள் சிரமத்தை குறைக்க மாத்தி யோசித்திருக்கிறது என்கின்றனர் தேமுதிக வட்டாரத்தில் “ஏய்த்து புடுங்குமா பெருமாளு அதனை அடிச்சு புடுங்குமாம் அனுமாரு” என்பதற்கு ஏற்ப மாவட்ட செயலாளர்கள் மூலம் வழங்கப்பட்ட தேர்தல் நிதியில் முடிந்தவரை கட்டிங் போடமாவட்டம்,ஒன்றியசெயலாளர்கள் கூட்டணி அமைத்து செயல்படுவதாக தலைமைக்கு வேட்பாளர்கள் புகார் அனுப்ப தயாராகி வருவதாக கூறப்படுகிறது தேர்தல் முடிவுக்கு பின்னர் மாவட்ட செயலாளர்கள் மட்டத்தில் அதிரடிகளையெடுப்பு, மாற்றங்களுக்கு தேமுதிக தலைமை தயராகி வருவதாக கூறப்படுகிறது

Related posts

Leave a Comment