சினிமா படப்பிடிப்புகள் ஒத்திவைப்பு?

தமிழ் சினிமாவில் படப்பிடிப்பை நடத்தலாம் என நடிகர்களை அழைத்தால் கொரோனா முழுமையாக முடிவுக்கு வரட்டும் என்று முன்ணனி நடிகர் நடிகைகள் மறுத்து விட்டனர்
புதிய படங்களின் படப்பிடிப்பை தொடங்கலாம் என தயாரிப்பாளர்கள் முயற்சி எடுத்தால் பைனான்சியர்கள் கடன் தரதயாராக இல்லை பணம் திரும்ப கிடைப்பதற்கான எந்த வழிவகையோ, உத்திரவாதமோ இங்கு இல்லை இது தான் தமிழ்சினிமா தயாரிப்பு பிரிவின் உண்மைநிலை தொலைக்காட்சி தொடர் படப்பிடிப்புகள் மட்டுமே எல்லா தரப்புக்கும் லாபகரமான இருந்து வருகிறதுகொரோனா இரண்டாம் அலை தீவிரமானதால்தமிழக அரசு முழு ஊரடங்கை அறிவித்துள்ளது. இன்று முதல்(15.05.2021) மேலும் சில கட்டுப்பாடுகளைதீவிரப்படுத்தியுள்ளது.  இதனிடையே படப்பிடிப்புகளுக்கு நெறிமுறைகளை பின்பற்றி நடத்தி கொள்ள அதிமுக ஆட்சிகாலத்தில் அனுமதி வழங்கப்பட்டு இருந்ததுஇந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக திரைப்படம் மற்றும் சின்னத்திரை படப்படிப்புகள் வரும் மே 31ஆம்தேதிவரைரத்துசெய்யப்படுவதாக தென்னிந்தியதிரைப்பட தொழிலாளர்கள் கூட்டமைப்பின்
தலைவரும், இயக்குநருமான ஆர்.கே.செல்வமணிதெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாகஇன்று(15.05.2021)
செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், சென்ற வாரம் முதல்அமைச்சரை சந்தித்தோம். சரியான வழிமுறைகள் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளோம். கொரோனோ நிவாரண நிதி உதவியாக கூடுதலாக திரைப்பட தொழிலாளர்களுக்கு 2000 வழங்க வேண்டும், திரைப்பட தொழிலாளர்களுக்கு தடுப்பூசி செலுத்த தனி முகாம் ஏற்படுத்த வேண்டும் எனவும் கேட்டுள்ளோம். சினிமா தொழிலாளர்கள் கொரோனோவால் பாதிக்கப்பட்டு, மருத்துவ படுக்கை கிடைக்காமல் உயிரை இழக்கும் நிலை உள்ளது. படப்பிடிப்புக்கு அரசு அனுமதி தர வேண்டாம். இந்த மாதம் இறுதி வரை படப்பிடிப்பில் ஈடுபட மாட்டோம் என்று உறுதி எடுத்துள்ளோம் என்று ஆர்.கே.செல்வமணிதெரிவித்தார்

Related posts

Leave a Comment