மணி இவ்வளவு சீக்கிரம் நீ போயிருக்ககூடாது-நடிகர் சத்யராஜ்

தமிழ்சினிமா எத்தணையோ படைப்பாளிகளைக் கடந்து வந்திருக்கிறது அப்படிப்பட்ட படைப்பாளிகளில் சிலரே மறைந்த பின்னரும் நினைவில் கொள்ளத் தக்க சாதனையோ, செயலோ செய்ததால் மனதில் வாழ்கிறார்கள். அப்படிப்பட்ட படைப்பாளிகளில்ஒருவரான மணிவண்ணன் நினைவுதினம் இன்று
எல்லோருக்கும் ஒரு அரசியல்  கொள்கை இருக்கும் என்றபோதும் சிலர் அதைத் தமது தொழில் தொடர்பான விஷயங்களில்வெளிப்படுத்துவது இல்லை.வேறு சிலரோ தமது தொழிலும் தமது அரசியல் வெளிப்படும்படி நடந்துகொள்வர். மணிவண்ணன் இரண்டாம் ரகம். அவரைப் பொறுத்தவரை அரசியல் என்பது உழைக்கும் மக்களுக்கான அரசியல், ஒடுக்கப்பட்டவர்களுக்கான அரசியல். அவை தொடர்பான படங்களை உருவாக்குவதில் மட்டுமே மணிவண்ணனுக்கு நம்பிக்கை இருந்தது. மார்க்சிய சித்தாந்தம், தமிழ்த் தேசியம், தமிழீழ அரசியல் போன்றவற்றில் பிடிப்பு கொண்டிருந்த மணிவண்ணன் 50 படங்களை இயக்கியுள்ள மணிவண்ணனின் படங்களில் முப்பதுக்கும் மேற்பட்டவை வசூலைக் குவித்தவை. என்றபோதும், வெற்றியின்போது தலையில் கொம்பு முளைத்ததும் இல்லை, தோல்வியின் போதும் தான் தலைகுனிந்ததுமில்லை என்றுதான் அவர் கூறியிருக்கிறார். அவர் இயக்கிய ஐம்பது படங்களில் 25-ல் நாயகனாக சத்யராஜ் நடித்திருக்கிறார்; அதில் ஜல்லிக்கட்டு முதல் அமைதிப்படை வரை12 படங்கள் தொடர்ந்து வெற்றிபெற்றுள்ளன.,
90களில் அவர் நிறைய படங்களில் நடித்துக்கொண்டிருந்ததால் அவரை நடிகராக அறிந்துள்ள இன்றைய இளைஞர்கள் பலர் இயக்குநராகவும் கதை-வசனகர்த்தாவாகவும் அவருடைய சாதனைகளை இன்றைய இளைஞர்கள் அதிகம் அறிந்திருக்க மாட்டார்கள்.
தன் சொந்த வாழ்க்கையிலும் கடவுள் மறுப்பு, சாதி எதிர்ப்பு உள்ளிட்ட பகுத்தறிவு, முற்போக்குக் கருத்துகளைப் பின்பற்றிவந்த மணிவண்ணன் அவற்றைத் தன் படங்கள் வாயிலாக வலியுறுத்தினார். பிரச்சாரமாக அல்லாமல் ஜனரஞ்சகக் கலை அம்சத்துடன் முற்போக்குக் கருத்துகளைக் கதைகளுக்குள்ளும் காட்சிகளுக்குள்ளும் பொருத்தினார். தான் எழுதிய, இயக்கிய படங்களில் மட்டுமல்லாமல் நடிகராக நடித்த படங்களிலும் சமூக அவலங்களைப் பகடி செய்யும் வசனங்களை முற்போக்குக் கருத்துகளையும் நகைச்சுவை வழியாக நுழைக்கும் திறமையும் சாதுரியமும் வாய்க்கப் பெற்றிருந்தார்.மணிவண்ணன் நினைவு தினத்தை முன்னிட்டு

மணிவண்ணின் சீடர்கள் பலரும் அவரை  பற்றி தங்களது நினைவஞ்சலிகளை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகின்றனர்

மணிவண்ணனின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரான நடிகர் சத்யராஜ் அவரது நினைவு தினத்தையொட்டி சத்யராஜ்வீடியோ பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில்,

இன்றைக்கு ஜூன் 15. என் தலைவன் மணிவண்ணனின் நினைவு நாள்ன்னு சொல்றாங்க. ஆனால், எனக்கு வருடத்தின் 365 நாளும் என் தலைவனோட நினைவு நாள்தான்.

ஏன்னா அந்த மணிவண்ணன் இல்லைன்னா இந்த சத்யராஜ் இல்லை. சத்யராஜ் பாணின்னு சொல்றாங்க பாருங்க.. அதுவே மணிவண்ணனின் பாணிதான்.

நான் மட்டுமில்ல.. தமிழ்ச் சினிமாவே இப்போதும் என் தலைவன் மணிவண்ணனை நினைச்சுக்கிட்டிருக்கு. அதற்கு உதாரணமா மாஸ்டர்படத்துல தம்பி விஜய் ஒரு காட்சியில் பெரிய அமைதிப்படை அமாவாசைன்னு நினைப்பா..? என்று ஒரு வசனத்தைப் பேசியிருக்கிறார்.

இதேபோல் தம்பி தனுஷ் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியிருக்கும் ‘ஜகமே தந்திரம்’ படத்தில் ‘சோழர் பரம்பரையில் ஒரு லண்டன் தாதா’ன்னு வசனம் பேசியிருக்காரு.

இது மாதிரி என் தலைவன் மணிவண்ணனை இன்னமும் ஞாபகம் வைச்சிருக்கிறதுக்கு அவருடைய சார்பில் இந்த வசனங்களை பேசிய தம்பிகள் விஜய், தனுஷ், இயக்குநர்கள் லோகேஷ் கனகராஜ், கார்த்திக் சுப்பராஜ் ஆகியோருக்கு எனது நன்றிகள்.

அந்தச் சோழர் பரம்பரை வசனத்தைக் கேட்கும்போது ‘அமைதிப் படை’ படத்தில் நான் பேசிய நாகராஜ சோழன்.. சோழர் பரம்பரையில் ஒரு எம்.எல்.ஏ.என்ற வசனம்தான் ஞாபகத்துக்கு வருது.

இதையெல்லாம் பார்த்தால் திரும்பவும் வில்லனா நடிக்கலாம்ன்னு ஆசை வருது. ஆனால் அமைதிப்படை அமாவாசைமாதிரி ஒரு கேரக்டரை கிரியேட் செய்து தருவதற்கு என் நண்பன் மணிவண்ணன் மாதிரி ஒரு ஆள் வேணுமே..?

தலைவா.. இவ்வளவு சீக்கிரம் நீ போயிருக்கக் கூடாது தலைவா.. தலைவா ஹாட்ஸ் அப் யூ..என்று உணர்ச்சி பொங்க பேசியிருக்கிறார் நடிகர் சத்யராஜ்.

Related posts

Leave a Comment