இந்திய சினிமாவில் எந்த திட்டமிடலும் இல்லாமல் தமிழ், தெலுங்கு,மலையாளம், இந்தி மொழிகளில் வெற்றிபெற்ற, அல்லது படைப்புரீதியாக பாராட்டுக்களை பெற்ற படங்களின் மொழிமாற்று உரிமையை பைனான்சியர்கள், பிரபல தயாரிப்பாளர்கள் வாங்கும் வழக்கம் நீண்டகாலமாக உள்ளது
ஒரு படம் இறுதிகட்ட பணிகளில் இருக்கும்போது நிதி நெருக்கடி ஏற்படும் அந்த நிலையில் மொழிமாற்று உரிமை, தொலைக்காட்சி உரிமைகளை விற்பனை செய்யவேண்டிய சூழல் தயாரிப்பாளருக்குஏற்படும் அப்போது முடிந்தவரை குறைந்த விலைக்கு அந்த உரிமையை வாங்க பைனான்சியர்கள், தயாரிப்பாளர்கள் முயற்சி எடுப்பார்கள் தனுஷ் நடித்து வெளியான
” துள்ளுவதோ இளமை” படம் திட்டமிட்ட அடிப்படையில் வெளியிடுவதற்கு நிதி நெருக்கடி அப்போது அந்தப் படத்தை ஒரு படமாகவே மதிக்கவில்லை இருந்தபோதிலும் அப்படத்தின் மொழிமாற்று உரிமையை இரண்டு லட்ச ரூபாய்க்கு முதல்வன் பட தயாரிப்பாளர்களில் ஒருவரான மாதேஸ் வாங்கினார் அந்தப் படம் வெளியாகி பாக்ஸ்ஆபீஸ் சாதனையை நிகழ்த்தியது இரண்டு லட்ச ரூபாய்க்கு வாங்கிய படத்தின் மொழிமாற்று உரிமை இருபது மடங்கு கூடுதலாக விற்பனை ஆனது படம் வெளியான பின் அதன் வெற்றியை பொறுத்து மொழிமாற்று உரிமையின் விலை மாறுபடும் படம் நன்றாக இருந்தும் வெற்றிபெறாத படங்கள் வேறு மொழிகளில் தயாரிக்கப்பட்டு வெற்றிபெறுவது உண்டு
கடந்த பல வருடங்களாகவே தென்னிந்திய சினிமாவில் தன்னை நிலைநிறுத்திக்கொள்ளும் முயற்சியில் இந்தி பட தயாரிப்பாளரும், மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவருமான போனி கபூர் முயற்சித்து வருகிறார் தென்னிந்திய மொழிகளில் வெற்றிபெற்ற படங்களை இந்தியில் தயாரிப்பது இந்தியில் வெற்றிபெற்ற படத்தை தமிழில் தயாரிக்க தொடங்கினார் அப்படித்தான் இந்தியில் வெற்றி
பெற்ற பிங்க் படத்தை தமிழில் நேர்கொண்ட பார்வை, தெலுங்கில் வக்கில் சாப் என தயாரித்தார்
தற்போது ஆர்டிகிள் 15 படத்தை தமிழில் தயாரித்து வருகிறார் இதில் கதாநாயகனாத உதயநிதி நடிக்க கானா படத்தை இயக்கிய அருண் காமராஜ் இயக்குகிறார்இவை தவிர நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து அஜீத்குமார் நடிக்கும் வலிமை படத்தை தயாரித்து வருகிறார் கொரோனா ஊரடங்கு காரணமாக எந்த ஒரு படத்தையும் திட்டமிட்ட அடிப்படையில் முடித்து வெளியிட முடியாத சூழலில் சிக்கி கொண்டிருக்கும் போனி கபூர் கடும் நிதி நெருக்கடியில் உள்ளார்
இந்த நிலையில் மலையாள மொழியில் மம்முட்டி நடிப்பில் வெளியான அரசியல் படம் திஒன் படத்தின் பலமொழிகளின் மொழிமாற்று உரிமையை வாங்கியுள்ளார் இந்தியில் பிரபலமான வியாபார முக்கியத்துவமுள்ள நடிகர் ஒருவரை நடிக்க வைக்கும் முயற்சியை மேற்கொண்டுள்ளார் எந்த மொழிக்கும் பொருந்தக் கூடிய அரசியல் கதை என்பதால் அந்த மொழி, மாநில அரசியல் தன்மைக்கு ஏற்ப சில மாற்றங்களை செய்து படம் தயாரித்தால் படம் வெற்றிபெறும் என்கிற நம்பிக்கை, தொலைநோக்கு பார்வையே போனி கபூரின் பலம் என்கிறது அவரது வட்டாரம்