கைபேசியில் கதைசொல்லி மோகன்லாலிடம்கால்ஷீட் வாங்கிய இயக்குனர்

மோகன்லால் நடித்த லூசிபர் படத்தின் மூலம் இயக்குனர் ஆனார் மலையாள நடிகர் பிருத்விராஜ். இந்த படத்தின் 2ம் பாகம் இயக்கும் நோக்கத்துடன்தான் படத்தின் கதையை முடித்திருந்தார். இரண்டாம் பாக கதை வெளிநாட்டில் நடப்பதால் கொரோனா ஊரடங்கு காரணமாக அந்த படத்தை தொடங்க முடியவில்லை. இந்த நிலையில்தான் மீண்டும் மோகன்லாலுடன் இணைந்து புரோ டாடி என்ற படத்தை இயக்குகிறார். இது மிகவும் ஜாலியான படம் என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: மலையாள சினிமாவில் கொண்டாட்டமான, ஜாலியான படங்கள் வெளிவந்து ரொம்ப காலமாகி விட்டது. அதுமாதிரியான படங்களுக்கு நிறைய நடிகர்கள், சிரிப்பு, சந்தோஷம், நகைச்சுவை, இசை என்றெல்லாம் யோசிக்கும்போது, அய்யோ இது பெரிய படம், நிறைய இடங்களில், நிறைய மனிதர்களை வைத்து எடுக்க வேண்டும் என்று யோசிப்போம். எனவே அதை ஒதுக்கி வைத்துவிடுவோம்.
அதனால்தான் மலையாளப் படங்கள் எல்லாம் இறுக்கமாக, மர்மக் கதையாக, கொலைகாரனைக் கண்டுபிடிப்பவையாக இருக்கின்றன. லூசிபர் 2ம் பாகத்தை நீண்ட நாட்களுக்கு முன்பே வெளியிட்டிருக்க வேண்டும். அது பிரம்மாண்டமான படம். ஆனால், கொரோனா நெருக்கடி காரணமாக ஆரம்பிக்க முடியவில்லை.

என் பார்வையில், மலையாளத் திரையுலகில் கடந்த ஒன்றரை வருடங்களாக மகிழ்ச்சியான திரைப்படங்களைப் பார்க்க முடிவதில்லை என்று தோன்றுகிறது. இந்த நேரத்தில் தான் இரண்டு கதாசிரியர்கள் என்னைச் சந்தித்து ஒரு கதையைச் சொன்னார்கள். எனக்கு அது சுவாரசியமாக தெரிந்தது. நான் அதை மோகன்லாலிடம் வீடியோ காலில் விவரித்தேன். அவர் கதையில் ரொம்பவே இம்ப்ரஸ் ஆகி நான் நடிக்கிறேன் என்று சொன்னார். அதுதான் புரோ டாடி. என்கிறார் பிருத்விராஜ்

Related posts

Leave a Comment

seventeen + 19 =