ஏசியன் இன்ஸ்டிடியூட் ஆப் நெப்ராலஜி அண்ட் யூரோலஜி (AINU)ன் பாலியல் ஆரோக்கியம் தொடர்பான ஸ்கிரீனிங் முகாம்

 

பாலியல் ஆரோக்கியம் தொடர்பான விழிப்புணர்வை ஆண்களிடம் ஏற்படுத்துவதற்காக சென்னையை  சேர்ந்த ஏசியன் இன்ஸ்டிடியூட் ஆப் நெப்ராலஜி அண்ட் யூரோலஜி (AINU)  நிறுவனம்  பொதுமக்களுக்கு ஒரு இலவச ஸ்கிரீனிங்  முகாமை  வெற்றிகரமாக நடத்தியது . 

  • சென்னையில் ஒரு பல்சிறப்பு மருத்துவமனை இப்படி ஒரு தனித்துவம் வாய்ந்த முகாமை முதல் முறையாக நடத்தியது பொதுமக்களிடம் இருந்து நல்ல வரவேற்பை பெற்றது

சென்னை, 01st டிசம்பர் 2023; இந்தியாவின் முன்னணி சிறுநீரக பராமரிப்பு நிபுணரும், சென்னையின் மிகப்பெரிய நெப்ராலஜி அண்ட் யூரோலஜி மருத்துவத்துறை சிறப்பு மையமுமான ஏசியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் நெப்ராலஜி அண்ட் யூரோலஜி (AINU) சென்னை, அவர்கள் நடத்திய ஆண்களின் பாலியல் ஆரோக்கிய ஸ்கிரீனிங் முகாம் வெற்றிகரமாக நடந்து முடிந்ததை பெருமிதத்துடன் அறிவித்திருக்கிறது. இந்த குறிப்பிடத்தக்க சுகாதார முன்முயற்சி மற்றும் ஆண்களின் நல்வாழ்வுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட பாலியல் ஆரோக்கியம் குறித்த முதல் முகாம் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஏ.ஐ.என்.யூ (AINU) மருத்துவமனை வளாகத்தில் நடத்தப்பட்டது. இந்த இலவச மருத்துவ முகாமிற்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. 20 களின் முற்பகுதி முதல் 80 களின் பிற்பகுதியிலான வயது கொண்ட 40க்கும் மேற்பட்ட ஆண்கள் அவர்களுக்கு வழங்கப்பட்ட விரிவான தரப் பரிசோதனைகள் மற்றும் ஆலோசனைகளால் பயனடைந்துள்ளனர்.

 

சர்வதேச ஆண்கள் தினத்தை (நவம்பர் 19) தொடர்ந்து, ஏஐஎன்யு (AINU) சென்னையின் சிறுநீரக மருத்துவ ஆலோசகரும், மைக்ரோசர்ஜிகல் ஆண்ட்ரோலஜிஸ்டுமான டாக்டர் சஞ்சய் பிரகாஷ், ஆண்களின் பாலியல் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளிப்பதன் முக்கியமான அவசியத்தை வலியுறுத்தினார். “மொத்த டெஸ்டோஸ்டிரோன் அளவு, ராண்டம் இரத்த சர்க்கரை அளவு (Random BS), லிப்பிட் ப்ரொபைல், எண்டோதீலியல்  ஸ்கேன் மற்றும் ஆண்ட்ரோலஜி ஆலோசனை  முதலான  கண்காணிக்கும் ஆய்வக பரிசோதனைகள்  மற்றும் நிபுணர் அடிப்படையிலான பரிசோதனைகள்  ஆகியவற்றை நாங்கள் நடத்தினோம் – இவை அனைத்தும் பொதுமக்களுக்கு முற்றிலும் இலவசமாக வழங்கப்பட்டன. பாலியல் நடைமுறைகள் மீதான நமது தடைகளைக் களைவதில் நாம் கவனம் செலுத்த வேண்டும் என்பதை நான் வலியுறுத்த விரும்புகிறேன். இந்த தலைப்புடன் தொடர்புடைய தடையை உடைத்து சரியான பாலியல் நடைமுறைகளைப் பின்பற்றுவது முக்கியம். ஆண்களின் ஆரோக்கியம் மற்றும் பாலியல் ஆரோக்கியம் பெரும்பாலும் புறக்கணிக்கப்படுகின்றன, மேலும் அலட்சியம் அவர்களின் தனிப்பட்ட மற்றும் தொழில்முறை வாழ்க்கையை கடுமையாக பாதிக்கும். இந்த முகாம் பாலியல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தியது மட்டுமல்லாமல், இருதய ஆரோக்கியத்திற்கான பரிசோதனையாகவும் செயல்பட்டது” என்று டாக்டர் சஞ்சய் பிரகாஷ் கருத்து தெரிவித்தார்.

இந்தியாவில் ஆண்ட்ரோலஜி மற்றும் ஆண்களின் இனப்பெருக்க ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் அதிகரித்து வரும் நிலையில், இந்த உணர்வுபூர்வமான விஷயத்தைச் சுற்றியுள்ள தயக்கங்கள் காரணமாக அதற்கான விழிப்புணர்வு என்பது ஒரு சவாலாக உள்ளது. உயர்தர பராமரிப்பு ஆலோசனைகள் மற்றும் பரிசோதனைகள் வழங்குவதன் மூலம், குறிப்பாக சரிசெய்யும் அறுவை சிகிச்சைகள் மற்றும் ஒப்பனை ஆண்ட்ரோலஜி ஆகியவற்றை வழங்குவதன் மூலம் இந்த இடைவெளியை நிவர்த்தி செய்வதில் ஏ.ஐ.என்.யு (AINU ) சென்னை ஒரு கலங்கரை விளக்கமாக உருவெடுத்துள்ளது. பாலியல் ஆரோக்கியம் மற்றும் ஆணின் கருவுருவாக்கும் தன்மை தொடர்பான புகார்களைத் தீர்ப்பதும் இதில் அடங்கும்.

ஆண்களின் பாலியல் ஆரோக்கியம் குறித்த வெளிப்படையான விவாதங்களை ஊக்குவித்தல், தடைகளை அகற்றுதல், பாலியல் ஆரோக்கியத்தை மையமாகக் கொண்ட முக்கியமான விஷயங்களை தெளிவுபடுத்துதல் மற்றும் அதற்கான கல்வி மற்றும் விழிப்புணர்வுக்கான தளங்களை உருவாக்குதல் ஆகியவற்றை ஏ.ஐ.என்.யு (AINU ) சென்னை நோக்கமாகக் கொண்டுள்ளது.  ஆண்களின் பாலியல் நல்வாழ்வு ஸ்கிரீனிங் முகாம் போன்ற முன்முயற்சிகள், ஆரோக்கியத்திற்கான முன்னெச்சரிக்கை பராமரிப்பு நடவடிக்கைகளில் இந்த நிறுவனம் கொண்டுள்ள அக்கறையை தெளிவாக எடுத்துக் காட்டுகிறது. இது மதிப்புமிக்க மருத்துவ சேவைகளை வழங்குவதோடு மட்டுமல்லாமல், சமூக நல்வாழ்வு மற்றும் ஆண்களின் பாலியல் ஆரோக்கியம் குறித்த தாக்கமுள்ள சமூக விழிப்புணர்வின் பரந்த நோக்கத்திற்கும் பங்களிக்கிறது.

AINU பற்றி:

ஏசியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் நெப்ராலஜி அண்ட் யூரோலஜி என்பது இந்தியாவில் உள்ள ஒரு உலக தரம் வாய்ந்த சூப்பர்-ஸ்பெஷாலிட்டி சிறுநீரக பராமரிப்பு மையம் .  இது சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தால் DNB சான்றிதழ் வழங்கப்பட்ட மற்றும் மிகக்குறுகிய காலகட்டத்திலேயே NABH ஆல் அங்கீகாரம் பெறப்போகும் மருத்துவமனையாகும்.  ஹைதராபாத், விசாகப்பட்டினம், சிலிகுரி மற்றும் சென்னை ஆகிய 4 முக்கிய நகரங்களில், மொத்தம் 7 கிளைகளை கொண்டு, நெப்ராலஜி மற்றும் யூரோலஜி துறையில் ஒரு அர்ப்பணிப்புள்ள குழுவாக பல மைல்கற்களை  கடந்து உள்ளனர் . நெப்ராலஜி, யூரோலஜி , குழந்தைகளுக்கான  நெப்ராலஜி மற்றும்  யூரோலஜி , மருத்துவ புற்றுநோயியல், மயக்கவியல், ஆண்ட்ராலஜி மற்றும் கதிரியக்கவியல் துறையில் நிபுணத்துவம் பெற்ற பல புகழ்பெற்ற மருத்துவர்கள் குழுவைக் கொண்ட AINU , சிறுநீரக ஆரோக்கியத்தில் பிரத்தியேக கவனிப்பைப் பூர்த்தி செய்வதற்கான அதிநவீன வசதிகளைக் கொண்டு செயல்படுகிறது . இது 500  படுக்கை வசதிகள் , SICU , தீவிரமான சிறுநீரக பராமரிப்பு பிரிவு, மேம்பட்ட டயாலிசிஸ் பிரிவு , விரிவான நோயறிதல் பிரிவு , 24×7 அவசர சிகிச்சை பிரிவு , மருந்தக வசதி , நோயாளிகளுக்கு தேவையான பிறவசதிகள்  ஆகிய வசதிகளுடன் கூடிய சிறுநீரக அறிவியலில் முதன்மையாக விளங்கும் ஒரு மையமாகும் . மேம்பட்ட நோயாளி பராமரிப்பு , அனுபவம் வாய்ந்த பணியாளர்கள் , ரோபோடிக் உதவியுடனான அறுவை சிகிச்சைகள் போன்ற சமீபத்திய தொழில் நுட்ப வசதிகள் , மேம்பட்ட ஹீமோடியாஃபில்ட்ரேஷனுடன்  கூடிய 50085 HDF அமைப்பு மற்றும் 100  படுக்கை வசதிகள்   உள்ள ஹீமோடையாலிசிஸ் பிரிவு  போன்ற பல வசதிகளுடன்  கூடிய AINUவிற்கு, “மருத்துவத்துறை பராமரிப்பில் சிறந்து விளங்கும் சிறந்த மருத்துவமனை ”  என்ற விருதினை உலகளவில் மதிப்புமிக்க “நியூஸ் வீக்  பப்ளிகேஷன்” வழங்கி உள்ளது . நிபுணர் அடிப்படையிலான டயாலிசிஸ் ஒவ்வொரு நபரின் தனிப்பட்ட தேவைகளுக்கு மிகவும் பொருத்தமானது மற்றும்  பலதரப்பட்ட அணுகுமுறைகளையும் கொண்டது .

 

 

 

Related posts

Leave a Comment