அட்லி – ரன்வீர் சிங் நடனத்துடன் களைகட்டிய இயக்குநர் ஷங்கர் மகள் திருமண வரவேற்பு

இந்திய திரையுலகின் பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா ஷங்கர் – தருண் கார்த்திகேயன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது. பல முக்கிய பிரபலங்கள்  புடைசூழ நடைபெற்ற இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில்  தமிழ் சினிமாத் துறை தவிர்த்து, தெலுங்கு, மலையளம், கன்னடம்  மற்றும் ஹிந்தி திரையுலகைச் சேர்ந்த பிரபல நடிகர் நடிகைகள், இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மிகவும் கோலாகலமாக நடைபெற்ற இந்த நிகழ்வில், பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நடனமாடி மணமக்களை உற்சாகப்படுத்தினார். டிரம்ஸ் சிவமணி இசைக்க நடனமாடிய ரன்வீர் சிங்குடன் மணமக்கள் ஐஸ்வர்யா ஷங்கர் – தருண் கார்த்திகேயன், அதிதி ஷங்கர், அர்ஜித் ஷங்கர், இயக்குனர் அட்லி ஆகியோரும் சேர்ந்து சந்தோசமாக  நடனமாடி நிகழ்ச்சியை மேலும் சிறப்பித்தனர்.

இதனால் உற்சாகம் அடைந்த மணமக்கள் ஐஸ்வர்யா ஷங்கர் – தருண் கார்த்திகேயன் இருவரும்  மற்றவர்களோடு இணைந்து நடனமாடி  தங்கள் சந்தோஷத்தை வெளிப்படுத்தினர். இது மணமக்களை வாழ்த்த வந்திருந்த அனைவரையும் சந்தோசத்தில் ஆழ்த்தியது. அது தொடர்பான புகைப்படங்கள் இணையதளங்கள் முழுவதும் வைரலாக பரவி வருகிறது.

Related posts

Leave a Comment