மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிக்கும் ‘ஏஸ் ( ACE ) ‘படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு

மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘ ஏஸ் ( ACE) எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘உருகுது உருகுது’ எனும் முதல் பாடலும், பாடலுக்கான வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. இயக்குநர் ஆறுமுக குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ ஏஸ் ( ACE) எனும் திரைப்படத்தில் விஜய் சேதுபதி, ருக்மணி வசந்த், யோகி பாபு, பி .எஸ். அவினாஷ், திவ்யா பிள்ளை, பப்லு , ராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கரண் பகதூர் ராவத் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருக்கிறார். ஃபென்னி ஆலிவர் படத்தொகுப்பு பணிகளை கவனிக்க, ஏ. கே. முத்து கலை இயக்கத்தை மேற்கொண்டிருக்கிறார். கமர்சியல் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை 7 CS என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆறுமுக குமார் பிரம்மாண்டமான பொருட் செலவில் தயாரித்திருக்கிறார்.…

Read More

Armour of god – திரை விமர்சனம்

அமெரிக்காவை ஒட்டியுள்ள பகுதிகளில் அகதிகளாக வாழும் கூட்டத்தில் ஒருவன் சிறுவன் ஆரி லோபஸ், கால் பந்தாட்ட கனவுகளோடு அமெரிக்க நகரத்திற்கு வரும் இந்த சிறுவன் ஆடை தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றில் கொத்தடிமையாக்கப்படுகிறார். அவரைப் போல் அந்த இடத்தில் பல சிறுவர்கள் கொத்தடிமைகளாக இருக்கிறார்கள். அங்கிருந்து எப்படியாவது தப்பிக்க வேண்டும் என்று நினைக்கும் ஆரி லோபஸின் வலி மிகுந்த வாழ்க்கையையும், அதில் இருந்து மீள்வவதற்கான அவரது முயற்சிகளையும் யதார்த்தமாகவும் அதே சமயம் சினிமா மொழியின் மூலம் விறுவிறுப்பாகவும் சொல்லியிருக்கிறார்கள். படத்தின் மையப் புள்ளியான சிறுவன் ஆரி லோபஸ், வசனமே பேசாமல் தன் கண்கள் மூலமாக பல உணர்வுகளை நம்மிடம் கடத்தி விடுகிறார். அடிமைச் சிறையில் இருந்து தப்பிக்க அவர் மேற்கொள்ளும் முயற்சிகளில் அரங்கில் அப்படி ஒரு அமைதி. அமெரிக்கா என்றால் கோடிகளில் குளிக்கும் பணக்காரர்கள், ஆடம்பர வாழ்க்கை, அதீத…

Read More

கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல் – திரை விமர்சனம்

பிரபல எஸ்டேட் தொழிலதிபரின் மேலாளராக இருப்பவர் ஸ்ரீகாந்த். அதோடு அந்த தொழிலதிபரின் குதிரை பண்ணையில் குதிரைகளுக்கு பயிற்சி அளிக்கும் பயிற்சியாளராகவும் இருந்து வருகிறார். இவருக்கு பணக்கார பெண்ணை மணமுடித்து செட்டில் ஆவது லட்சியம். கோடீஸ்வரர் சச்சு வீட்டில் அவரை பராமரிக்கும் பணிப்பெண்ணாக இருப்பவர் நாயகி பூஜிதா. இவருக்கும் நாயகன் போலவே கோடீஸ்வரன் ஒருவனை கரம் பிடித்து செட்டில் ஆகிவிட வேண்டும் என்பது லட்சியம். இவர்கள் இருவரும் ஒரு கட்டத்தில் சந்தித்துக் கொள்ளும் போது வசதி படைத்தவர்களாக தங்களை காட்டிக் கொள்கிறார்கள். தொழிலதிபரிடம் உதவியாளராக இருக்கும் ஸ்ரீகாந்த், தன்னை அந்த தொழிலதிபராகவே காட்டிக் கொள்கிறார். வீட்டு வேலை பார்க்கும் பூஜிதா தன்னை அந்த பங்களாவின் உரிமையாளர் என்கிறார். இருவருமே கோடீஸ்வரர்கள் என்று தங்களை அறிமுகப்படுத்திக் கொண்ட உடனே அவர்கள் காதலாகிறார்கள். இந்த காதல், திருமணம் வரை வருவதற்குள் அவர்கள்…

Read More

டெஸ்ட் படத்தில் நயன்தாராவின் கதாபாத்திரம் இது தானா? வெளியான தகவல்!

நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கும் ‘டெஸ்ட்’ படத்தில் நடிகை நயன்தாராவின் கதாபாத்திரம் குமுதாவாக அறிமுகம்: தான் விரும்பும் வாழ்க்கையை அடைய குமுதா சோதனைகளை எதிர்கொள்ள வேண்டும்! சில கனவுகள் எளிமையானது. ஆனால், அந்த எளிய கனவுகள் மிகப்பெரும் அர்த்தம் கொண்டது. YNOT ஸ்டுடியோஸ் வழங்கும் ‘டெஸ்ட்’ திரைப்படத்தில் நடிகை நயன்தாரா குமுதா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். குமுதா ஏங்குவது எல்லாம் அன்பு, அமைதியான வீடு, அன்பான கணவர், அம்மா என்றழைக்க ஒரு குழந்தை இதெல்லாம்தான். ஆனால், இந்த கனவுகளுக்கும் சோதனை வருகிறது. இதனை அன்பு மற்றும் வலிமை மூலம் குமுதா எதிர்கொள்கிறாள். நம்பிக்கைக்கும் மனவேதனைக்கும் இடையில் சிக்கி தான் விரும்பிய வாழ்க்கைக்காக போராடுகிறாள். கனவு காணத் துணிந்து அதை விட்டுக்கொடுக்க மறுக்கும் ஒவ்வொரு பெண்ணுக்கும் அவளுடைய கதை ஒரு சான்றாகும். தனது கதாபாத்திரம் பற்றி நயன்தாரா…

Read More

நடிகர் விமல் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஓம் காளி ஜெய் காளி’ வெப்சீரிஸின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

நடிகர் விமல் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஓம் காளி ஜெய் காளி’ வெப்சீரிஸின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. டிரெய்லரில் வெப்சீரிஸ் மார்ச் 28, 2025 அன்று வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சினிமா மற்றும் வெப்சீரிஸ் ரசிகர்களுக்கு ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சிறந்த கதைகளை வழங்கி வருகிறது. ராமு செல்லப்பா இயக்கத்தில் விமல் நடித்திருக்கும் ‘ஓம் காளி ஜெய் காளி’ வெப்சீரிஸ் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது வெளியாகியுள்ள சுவாரஸ்யமான டிரெய்லர் இந்த எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டின் பிரம்மாண்டமான தசரா திருவிழாவின் பின்னணியில் பழிவாங்கும் கதையாக இது அமைந்திருக்கிறது. டிரெய்லரில் வெப்சீரிஸ் மார்ச் 28 ஆம் தேதி வெளியாகும் என்ற அறிவிப்பும் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. ஆக்‌ஷன், எமோஷன், உண்மை, அதிகாரம் மற்றும் பழிவாங்கல் என ’OKJK’ வெப்சீரிஸின் உலகம் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. குலசேகரப்பட்டினம் தசரா திருவிழாவின்…

Read More

ஆக்‌ஷன் கமர்ஷியல் திரைப்படமாக உருவாகும் ‘யுவன் ராபின் ஹூட்’! – பூஜையுடன் தொடங்கியது

‘கேம்பஸ் கிராண்டி’ (Campus Kranti), ’ஸ்டூடண்ட்ஸ்’ (Students), ’பிருந்தாஸ் கூக்லி’ (Brundass Googly) ஆகிய திரைப்படங்கள் மூலம் கன்னட திரையுலகில் முன்னணி இயக்குநர் மற்றும் தயாரிப்பாளராக வலம் வரும் சந்தோஷ் குமார், தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். அவர் எழுதி இயக்கி தயாரிக்கும் முதல் தமிழ்ப் படத்திற்கு ’யுவன் ராபின் ஹூட்’ (Yuvan Robin Hood) என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் மூலம் கன்னட நடிகர் வீரன் கேஷவ் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமாகிறார். நாயகியாக பாலிவுட் நடிகை அல்பிஃயா ஷேக் அறிமுகமாகிறார். இவர்களுடன் ரித்விகா, பொன்வண்ணன், ஸ்ருதி சுதிர், தேஷ்பாண்டே, சந்திர சேகர் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். பேஷன் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் சந்தோஷ் குமார் தயாரித்து இயக்கும் இப்படத்தின் துவக்க விழா மார்ச் 15 ஆம் தேதி சென்னை…

Read More

காதல் என்பது பொதுவுடமை படம் TentKotta OTT யில் வெளியானது.!

BOFTA G. தனஞ்ஜெயன் வெளியீட்டில் இயக்குனர் ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் லிஜோமோல், வினித், ரோகிணி, கலேஷ், தீபா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் ‘காதல் என்பது பொதுவுடமை’ . மனிதர்களுக்குள் காதல் வருவது இயல்பானதாக இருந்தாலும் காதலுக்கென்று வரைமுறைகளை வகுத்துவைத்துள்ள இந்த சமூகத்தில் இயல்பானதாக வரும் காதலுக்குள் மிகமுக்கியமான உளவியல் சிக்கலை பேசுகிற படம் . ரோகிணி, லிஜோமோல் , வினித் மற்றும் பலர் நடித்திருக்கும் இந்த படம் சர்வதேச திரைப்படவிழாக்களிலும் சிறந்த வரவேற்பைபெற்றிருந்தது. ‘நல்ல திரைப்படங்களுக்கு எப்போதும் வரவேற்ப்பு கொடுப்பார்கள் என்கிற நம்பிக்கை எனக்கு உண்டு ‘என்று இத்திரைப்படத்தை இத்திரைப்படத்தை தமிழகம் முழுவதும் G தனஜ்செயன் வெளியிட்டிருந்தார். சிறந்த படம் என்று பார்வையாளர்களாலும், விமர்சகர்களாலும் பாராட்டுக்களை பெற்றிருந்தது. படம் இன்று TENTKOTTA OTT தளத்தில் வெளியாகியுள்ளது.

Read More

ஷாம் நடிக்கும் ‘அஸ்திரம்’ படத்தின் புதிய ரிலீஸ் தேதி.  மார்ச்-21ஆம் தேதி உலகெங்கும் வெளியாகிறது.

பெஸ்ட் மூவிஸ் சார்பில் தன சண்முகமணி தயாரிப்பில் க்ரைம் இன்வெஸ்டிகேஷன் திரில்லராக உருவாகியுள்ள படம் ‘அஸ்திரம்’. ஷாம் கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தை அறிமுக இயக்குநர் அரவிந்த் ராஜகோபால் இயக்கியுள்ளார். அறிமுக எழுத்தாளர் ஜெகன் கதை மற்றும் திரைக்கதை எழுதியுள்ளார். கதாநாயகியாக மாடலிங் துறையை சேர்ந்த நிரா நடிக்க முக்கிய வேடங்களில் நிழல்கள் ரவி, ஜீவா ரவி, அருள் டி.சங்கர், வெண்பா மற்றும் அறிமுக  நடிகர் ரஞ்சித் DSM ஆகியோர் நடித்துள்ளார்கள். வரும் மார்ச்-21ஆம் தேதி இந்த படம் உலகமெங்கும் வெளியாக தயாராக இருக்கிறது. முன்னதாக ‘அஸ்திரம்’ படத்தின் சிறப்பு பத்திரிகையாளர்கள் காட்சி சமீபத்தில் நடைபெற்றது. படம் பார்த்த ஊடகம் & பத்திரிகையாளர்கள் அனைவரும் ‘அஸ்திரம்’ திரைப்படத்தை வெகுவாக பாராட்டி பாசிட்டிவ் விமர்சனங்களை கொடுத்துள்ளார்கள். ரேஞ்சர், ஜாக்சன் துரை 2 ஆகிய படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய கல்யாண் இந்த…

Read More

வெட்டு இசை வெளியீட்டு விழா

“வெட்டு” படத்தின் இசை விழாவில், இயக்குனர்கள் ஆர்.கே.செல்வமணி, கஸ்தூரிராஜா, அம்மா ராஜசேகர், நடிகர்கள் ராகின் ராஜ், சேலம் வேங்கை அய்யனார், பிரேம்நாத், ரவிமரியா, முத்துக்காளை, கிங்காங், விஜய் கணேஷ், கராத்தே ராஜா, காஜா செரிப், நடிகைகள் வனிதா விஜயகுமார், விஜி சந்திரசேகர், சுந்தரா டிராவல்ஸ் ராதா மற்றும் திரையுலக பிரமுகர் கலந்து கொண்டனர்! ஸ்ரீ பூவாயி அம்மன் மூவிஸ் சார்பில், சேலம் வேங்கை அய்யனார் தயாரிப்பிலும், பிரேம்நாத் இணைத் தயாரிப்பிலும் உருவாகியுள்ள படம் “வெட்டு”! மதுரையை சார்ந்த அம்மா ராஜசேகர், நடன இயக்குனராக தமிழில் பல படங்களுக்கு பணிபுரிந்து, தெலுங்கு திரையுலகில் 300 படங்களுக்கு நடன இயக்குனராக பணிபுரிந்துள்ளார். கோபி சந்த் நடிப்பில் ரணம் என்ற பெயரில் முதல் படம் தெலுங்கில் இயக்கி, மெகா ஹிட் கொடுத்தவர். தொடர்ந்து தனது இயக்கத்தில் 12வது படமாக தனது 17…

Read More

“எம்புரான்”  திரைப்படம், மார்ச் 27, 2025-ல், உலகமெங்கும் பிரம்மாண்டமாக வெளியாகிறது !!

மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும், “லூசிபர்” திரைப்படத்தின் இரண்டாம் பாகமான “எம்புரான்” திரைப்படம், வரும் 2025 மார்ச் 27-ஆம் தேதி, உலகம் முழுவதும் 4000 -க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. நடிகர்-இயக்குநர் பிரித்திவிராஜ் சுகுமாரன் இயக்கத்தில், முரளி கோபி திரைக்கதை எழுத, பிரம்மாண்ட ஆக்சன் படமாக உருவாகியுள்ள இப்படத்தினை, லைகா புரொடக்ஷன்ஸ், ஆசீர்வாத் சினிமாஸ், ஸ்ரீ கோகுலம் மூவிஸ் ஆகிய நிறுவனங்களின் சார்பில், சுபாஸ்கரன், ஆன்டனி பெரும்பாவூர் மற்றும் கோகுலம் கோபாலன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். 2019-ல் வெளிவந்து பிளாக்பஸ்டர் வெற்றிபெற்ற லூசிபர் படத்தின் தொடர்ச்சியாக, அதிரடி ஆக்சன் கதைக்களத்தில், இந்த வருடத்தின் மிகப்பெரிய திரைப்படங்களுள் ஒன்றாக “எம்புரான்” திரைப்படம் உருவாகியுள்ளது. மலையாள திரையுலகின் சூப்பர்ஸ்டார் மோகன்லால், குரேஷி-ஆப்ரஹாம் என்ற ஸ்டீபன் நெடும்பள்ளி கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். அவருடன், முன்னணி நட்சத்திரங்கள் பிரித்திவிராஜ் சுகுமாரன், டோவினோ தோமஸ் இணைந்து நடிக்க,…

Read More