முற்போக்குச் சிந்தனையாளர்களான இரட்டையர்கள் புஷ்கர் & காயத்ரி எழுத்தில் உருவான இந்த சீசன், பிரம்மா & சர்ஜுன் இயக்கத்தில் வால்வாட்சர் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது எட்டு எபிசோட்கள் அடங்கிய இந்தத் தொடரில், கதிர் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முன்னணி கதாபாத்திரங்களில் தோன்ற அவர்களுடன் இணைந்து லால், சரவணன், கௌரி கிஷன், சம்யுக்தா விஸ்வநாதன், மோனிஷா பிளெஸ்ஸி ரினி, ஷ்ரிஷா, அபிராமி போஸ், நிகிலா சங்கர், கலைவாணி பாஸ்கர், மற்றும் அஸ்வினி நம்பியார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள் நடிகை மஞ்சிமா மோகன் மற்றும் நடிகர் கயல் சந்திரன் ஆகியோர் கௌரவ வேடத்தில் தோன்றுகின்றனர் சுழல்-தி வோர்டெக்ஸ் சீசன் 2 இந்தியா மற்றும் உலகம் முழுவதும் 240 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் பிரைம் வீடியோவில் பிப்ரவரி 28 அன்று பிரத்தியேகமாகத் திரையிடப்படத் தயாராக உள்ளது. மும்பை,…
Read More‘மெட்ரோ’ சத்யா நாயகனாக நடிக்கும் ‘ராபர்’ படத்தின் டிரெய்லரை வெளியிட்ட மக்கள் செல்வன் விஜய் சேதுபதி..
சென்னையில் நடந்த ஓர் உண்மைச் சம்பவத்தின் பின்னணியில் உருவாகி இருக்கும் படம் ‘ராபர்’. இப்படத்திற்கு ‘மெட்ரோ ‘திரைப்படத்தின் இயக்குநர் ஆனந்த கிருஷ்ணன் கதை திரைக்கதை எழுதியுள்ளார். எஸ். எம்.பாண்டி இயக்கி உள்ளார். இம்ப்ரஸ் ஃபிலிம்ஸ் சார்பில் பத்திரிகையாளர் கவிதா எஸ் தயாரித்துள்ளார். தயாரிப்பில் அவருடன் மெட்ரோ ப்ரொடக்ஷன்ஸ் ஆனந்த கிருஷ்ணனும் இணைந்துள்ளார் இப்படத்தின் கதை சென்னையில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்க பட்டுள்ளது. இப்படத்தின் கதை, திரைக்கதையை ‘மெட்ரோ’ , ‘கோடியில் ஒருவன்’ படங்களை இயக்கிய ஆனந்த கிருஷ்ணன் எழுதி உள்ளார்.. “உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகி இருப்பதால் காட்சிகளும் உண்மைக்குப் பக்கத்தில் இயல்பாக இருக்கும். ‘ பெற்றோர் பெண் குழந் தைகள் இந்த படத்தை அவசியம் பார்க்க வேண்டும் இந்த’ ராபர்’ திரைப் படத்தின்’ டைட்டில் ஃபர்ஸ்ட்…
Read Moreசின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்திருக்கும் நட்சத்திரம் மேகா ஷெட்டி!
தொலைக்காட்சியில் இருந்து கன்னட சினிமாவின் நம்பிக்கைக்குரிய நட்சத்திரங்களில் ஒருவராக மேகா ஷெட்டி மாறியிருப்பது சாதாரண பயணம் கிடையாது. மாடலிங் மற்றும் நடிப்பு துறையில் முன் அனுபவம் இல்லாமலேயே இவர் இந்த இடத்திற்கு வந்திருப்பது குறிப்பிடத்தக்கது. மங்களூரில் பிறந்த இவர் முதன்முதலில் வெற்றிகரமான கன்னட சீரியல் ‘ஜோதே ஜோதேயலி’ மூலம் நடிப்புத்துறைக்குள் அடியெடுத்து வைத்தார். நடிப்புத் துறைக்குள் அறிமுகமானதில் இருந்தே, மேகா ஏழு கன்னட படங்களில் நடித்துள்ளார். ‘டிரிபிள் ரைடிங்’, ‘தில்பசந்த்’ மற்றும் ‘கைவா’ ஆகிய படங்கள் பாசிட்டிவான விமர்சனங்களைப் பெற்றிருக்கிறது. அவரது அடுத்த படமான ‘ஆஃப்டர் ஆபரேஷன் லண்டன் கஃபே’ வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது, அதே நேரத்தில் ‘கிராமாயணா’ மற்றும் ‘சீட்டா’ படத்தின் பணிகள் தற்போது நடந்து வருகிறது. கன்னட சினிமாவில் மட்டுமல்லாது பிற மொழி படங்களிலும் நடிக்க இருக்கிறார் மேகா. இந்தப் படங்களில் அவர் தனது…
Read Moreகதாநாயகர்கள் எல்லாம் வில்லனாகி வருகிறார்கள்: இயக்குநர் எஸ். ஏ. சந்திரசேகர் பேச்சு!
கதாநாயகர்கள் எல்லாம் வில்லனாகி வருகிறார்கள் என்று கூரன் பட விழாவில் இயக்குநர் எஸ். ஏ. சந்திரசேகர் பேசினார்.அது பற்றிய விவரம் வருமாறு: ஒரு நாய்க்கான சட்ட உரிமைப் போராட்டத்தைக் கதையாக வைத்து உருவாகி இருக்கும் திரைப்படம் ‘கூரன்’. இத் திரைப்படத்தில் எஸ்.ஏ. சந்திரசேகர், ஒய். ஜி. மகேந்திரன்,சத்யன் ,பாலாஜி சக்திவேல், ஜார்ஜ் மரியான், இந்திரஜா ரோபோ சங்கர் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தை அறிமுக இயக்குநர் நிதின் வேமுபதி இயக்கியுள்ளார். மார்டின் தன்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். சித்தார்த் விபின் இசை அமைத்துள்ளார். பீ. லெனின் மேற்பார்வையில் மாருதி எடிட்டிங் செய்துள்ளார். கனா புரொடக்சன்ஸ் சார்பில் விபி கம்பைன்ஸ் உடன் இணைந்து இயக்குநர் விக்கி தயாரித்துள்ளார். ‘கூரன்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் இயக்குநர் எஸ். . சந்திரசேகரன் பேசும்போது, பொதுவாகவே ஒவ்வொரு திரைப்பட…
Read Moreசுழல் சீசன் 2 ஓடிடி ரிலீஸ் தேதி!! எந்த தளத்தில், எப்போது வெளியாகிறது தெரியுமா?
பிரேம் வீடியோவின் தமிழ் அசல் க்ரைம் திரில்லர் இணைய தொடரான ‘ சுழல் – தி வோர்டெக்ஸின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இரண்டாவது பாகத்திற்கான கவுண்ட்டவுன் தொடங்கியுள்ளது. இந்த விருது பெற்ற தொடரின் முதல் சீசன் அதன் ஒப்பற்ற கதை சொல்லல், கவர்ச்சிகரமான பின்னணி மற்றும் சக்தி வாய்ந்த நடிப்பிற்காக கொண்டாடப்பட்டது. தற்போது தமிழ்நாட்டின் காளிபட்டிணம் எனும் கற்பனை கிராமத்தில் நடைபெறும் வருடாந்திர அஷ்ட காளி திருவிழாவின் பின்னணியில் ஒரு புதிய மர்ம முடிச்சுகளுடன் இந்த இணைய தொடரின் இரண்டாம் பாகம் உருவாகி இருக்கிறது. குடும்ப பிணைப்புகள், காதல், தியாகம், நேர்மை, பழிவாங்கல், பயம் ஆகிய கரு பொருள்களுடன் சுழல்- தி வோர்டெக்ஸ் எனும் இணைய தொடரின் இரண்டாவது சீசனில் காளி பட்டிணத்தின் சிக்கலான சமூக கட்டமைப்பை சீர்குலைக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் ஒரு அதிர்ச்சியூட்டும் மரணத்தை மையமாக கொண்டுள்ளது.…
Read More‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி – அசோக் செல்வன் – ஐஸ்வர்யா ராஜேஷ் – இயக்குநர் கோகுல் – ரம்யா பாண்டியன் ஆகியோர் இணைந்து வெளியிட்ட அருண் பாண்டியன் – கீர்த்தி பாண்டியன் நடிக்கும் ‘அஃகேனம்’ படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக்
அஃகேனம் என்றால் ஆயுத எழுத்தை குறிக்கும் என்பதால் டைட்டிலுக்கான ஃபர்ஸ்ட் லுக் அர்த்தப்பூர்வமாக வடிவமைக்கப்பட்டிருப்பது… ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது. நடிகர்- தயாரிப்பாளர்- விநியோகஸ்தர் – என பன்முக ஆளுமை கொண்ட அருண் பாண்டியன் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் புதிய திரைப்படத்திற்கு, ‘அஃகேனம் ‘ என பெயரிடப்பட்டு, அதற்கான ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி, நடிகர் அசோக் செல்வன், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் – இயக்குநர் கோகுல் – நடிகை ரம்யா பாண்டியன் ஆகியோர் இணைந்து அவர்களது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு, படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். இயக்குநர் உதய் கே இயக்கத்தில் உருவாகி வரும் ‘ அஃகேனம் ‘ எனும் திரைப்படத்தில் அருண்பாண்டியன், கீர்த்தி பாண்டியன், பிரவீண் ராஜா , ஆதித்யா ஷிவ்பிங்க், ரமேஷ் திலக், ஜி. எம். சுந்தர், ஆதித்யா…
Read Moreபிரபல நடன இயக்குநர் கலைமாமணி ஸ்ரீதர் மாஸ்டரின் ஏ ஆர் எஸ் டான்ஸ் ஸ்கூல் நான்காவது கிளை சென்னை பெரம்பூர் ஓட்டேரியில் தொடக்கம்!
சென்னை மாநகரில் நந்தனம், அசோக் நகர் மற்றும் மயிலாப்பூர் ஆகிய இடங்களில் ஏ ஆர் எஸ் டான்ஸ் ஸ்கூல் எனும் நடனப் பள்ளியை மிகவும் சிறப்பாக நடத்தி வரும் பிரபல திரைப்பட நடன இயக்குநர் கலைமாமணி ஸ்ரீதர் மாஸ்டர், நான்காவது கிளையை பெரம்பூர் ஓட்டேரியில் திங்கட்கிழமை (பிப்ரவரி 17) தொடங்கினார். இயக்குநர் வெற்றிமாறன் ஏ ஆர் எஸ் டான்ஸ் ஸ்கூலை திறந்து வைக்க அமரன் புகழ் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி வாழ்த்துரை வழங்கினார். சென்னை மேயர் பிரியா ராஜன், சென் ஹாஸ்பிடல் தலைவர் டாக்டர் எம் வெங்கடேஷ், ஐபிஎஸ் அதிகாரி ராஜேஸ்வரி, நடிகர்கள் ஜீவா, ஷாம், நகுல், இசையமைப்பாளர் அமரேஷ் கணேஷ், நடன இயக்குநர் அசோக், சுஜா, சிவா, தொலைக்காட்சி பிரபலங்கள் தங்கதுரை மற்றும் ‘பிக் பாஸ்’ வெற்றியாளர் முத்துக்குமரன் உள்ளிட்ட பல்துறை முக்கிய பிரமுகர்கள் ஏ…
Read Moreஇயக்குநர் சுசீந்திரனின் “2K லவ்ஸ்டோரி” திரைப்பட வெற்றிக் கொண்டாட்டம் !!
City light pictures தயாரிப்பில், தமிழ் திரையுலகின் பெருமை மிகு படைப்பாளியான இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வைச் சொல்லும் படைப்பாக, ரொமான்ஸ் ஜானரில் உருவான திரைப்படம் “2K லவ்ஸ்டோரி”. கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியான இப்படம், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும் விமர்சகர்கள் மத்தியிலும் பாராட்டுக்களைக் குவித்து வருகிறது. இந்நிலையில் படக்குழுவினர் பத்திரிக்கை, ஊடக நண்பர்களுடன் இணைந்து படத்தின் வெற்றியைக் கொண்டாடினர். இந்நிகழ்வினில்… தயாரிப்பாளர் விக்னேஷ் சுப்ரமணியன் பேசியதாவது… City light pictures தயாரிப்பில், இது எங்கள் முதல்ப்படம். இந்தப்படத்தின் வெற்றிக்கு உங்கள் அனைவருக்கும் நன்றி. இப்படம் உருவாக முக்கிய காரணமாக இருந்த சுசீந்திரன் சாருக்கு நன்றி. இப்படத்திற்கு எங்களுடன் உறுதுணையாக நின்ற தயாரிப்பாளர் தனஞ்செயன் சாருக்கு நன்றி. இப்படத்திற்காக உழைத்த ஒளிப்பதிவாளர்,…
Read More” டிராகன் படத்தில் சமூக பொறுப்புடன் பல விஷயங்களை சொல்லி இருக்கிறோம்” -இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து பெருமிதம்
தமிழ்த் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், இயக்குநரும், நடிகருமான பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் தயாராகி, வரும் 21ம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படம் ‘டிராகன்.’ இந்த படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டது. ‘ஓ மை கடவுளே’ புகழ் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதன், அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோஹர், கே. எஸ். ரவிக்குமார், கௌதம் மேனன், மிஷ்கின், வி. ஜே.சித்து, ஹர்ஷத் கான், மரியம் ஜார்ஜ், இந்துமதி மணிகண்டன், தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். நிகேத் பொம்மி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைத்திருக்கிறார். இன்றைய இளைய தலைமுறையினரின் வாழ்வியலை மையப்படுத்திய இத்திரைப்படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ்.…
Read Moreஅகரம் பவுண்டேஷன் அமைப்பின் புதிய அலுவலக திறப்பு விழா !!
சென்னை, தியாகராய நகர் அருளாம்பாள் தெருவில் அமைக்கப்பட்டுள்ள அகரம் பவுண்டேஷன் அமைப்பின் புதிய அலுவலக திறப்பு விழா பிப்ரவரி 16, 2025 ஞாயிறு அன்று நடைபெற்றது. நிகழ்வில் திரைக் கலைஞர்கள் சிவகுமார், சூர்யா, கார்த்தி, ஜோதிகா ஆகியோர் கலந்து கொண்டனர். சூர்யா – கார்த்தி தாயார் லட்சுமி அவர்கள் கட்டிடத்தை திறந்து வைத்தார். கட்டிட திறப்பு விழா நிகழ்வில் அகரம் பவுண்டேஷன் நிறுவனர் சூர்யா அவர்கள் பேசியதாவது, இப்ப ஆரம்பிச்ச மாதிரி இருக்கு, திரும்பி பார்த்தா 2006-ல இருந்து 20 வருஷம் வந்துட்டோம். 2006-இல் 10 X 10 அளவில் சிறிய அறையில் ஆரம்பித்தது அகரம் பயணம். 2010-இல் விதைத் திட்டம் ஆரம்பித்தோம். நூறு மாணவ, மாணவியரை படிக்க வைக்க ஆசைப்பட்டோம், அப்பவும் பத்தாயிரம் விண்ணப்பங்கள் வந்தது. 15 ஆண்டுகள் கடந்து இன்று 700 மாணவ மாணவியரை படிக்க வைக்கிறோம்.…
Read More
