பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடித்த ‘வணங்கான்’ தற்போது ஸ்ட்ரீம் ஆகும் நிலையில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட படங்களை ஓடிடியில் டென்ட் கொட்டா விரைவில் வெளியிட உள்ளது

அமெரிக்காவில் இந்திய திரைப்படங்களை கண்டு மகிழ்வதற்கான முன்னணி ஓடிடி தளமான டென்ட் கொட்டா சமீபத்தில் இந்தியாவில் கால் பதித்து தமிழ் படங்களை ரசிகர்களின் சொந்த திரைகளுக்கு தொடர்ந்து வழங்கி வருகிறது. தேசிய விருது பெற்ற இயக்குநர் பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி வெற்றி பெற்று பாராட்டுகளை குவித்த ‘வணங்கான்’ திரைப்படத்தை டென்ட் கொட்டா தளத்தில் தற்போது ரசிகர்கள் கண்டு களிக்கலாம். இதைத் தொடர்ந்து, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பல்வேறு படங்களை ஓடிடியில் டென்ட் கொட்டா விரைவில் வெளியிட உள்ளது. தரமான பொழுதுபோக்கை தமிழ் ரசிகர்களுக்கு கொண்டு வரும் அதன் முயற்சிகளின் ஒரு பகுதியாக ‘ராஜாகிளி’ மற்றும் ‘காதல் என்பது பொதுவுடைமை’ படங்களை இந்த வாரம் ஓடிடியில் டென்ட் கொட்டா வெளியிடுகிறது. மேலும், ‘ஃபயர்’, ‘ஜென்டில்வுமன்’, ‘தினசரி’, ‘ஒத்த ஓட்டு முத்தையா’ உள்ளிட்ட திரைப்படங்களை…

Read More

ஊடகத்துறையினர் அறிமுக இயக்குநர்களை ஊக்குவிக்க வேண்டும் – மர்மர் இயக்குநர் வேண்டுகோள்

தமிழ் திரையுலகின் முதல் ஃபவுண்ட் ஃபூட்டேஜ் ஹாரர் திரைப்படமாக “மர்மர்” உருவாகி இருக்கிறது. மர்மர் திரைப்படம் சமீபத்தில் வெளியானது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான மர்மர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை வெற்று வருகிறது. முதற்கட்டமாக இந்தப் படம் 100 திரைகளில் மட்டுமே வெளியானது. எனினும், ரசிகர்களின் பெரும் ஆதரவோடு இந்தத் திரைப்படம் ரிலீசான இரண்டாவது நாளில் இதன் திரைகள் எண்ணிக்கை இருமடங்காக அதிகரித்தது. தொடர்ந்து இந்தப் படம் பெரும் வரவேற்பை பெற்று வரும் நிலையில், மர்மர் படக்குழு சார்பில் நன்றி தெரிவிக்கும் விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில், படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் பேசிய படத்தின் புரொடக்ஷன் டிசைனர் ஹாசினி, “அனைவருக்கும் வணக்கம். எங்கள் படத்தை பார்த்து, ரசித்து பிளாக்பஸ்டர் ஆக மாற்றியுள்ளீர்கள். நீங்கள்…

Read More

வஞ்சி: தமிழின் புதிய வாழ்வியல் திரைப்படம் விரைவில் திரைக்கு

சென்னை: பிரபல தயாரிப்பாளர் விமலா ராஜநாயகம் தயாரிக்கும் மூன்றாவது படம் **”வஞ்சி”**, விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தை **ராஜேஷ் C.R** இயக்க, **பின்சீர்** ஒளிப்பதிவு செய்துள்ளார். **சஜித் சங்கர்** இசையமைத்துள்ள இந்த படத்தின் எடிட்டிங் பணியை **ஜெயகிருஷ்ணன்** மேற்கொள்கிறார். **ராஜேஷ்** ஹீரோவாக நடிக்க, **நயீரா நிகார்** ஹீரோயினாக ஒப்பந்தமாகியுள்ளார். மேலும், **மாஸ்டர் ராஜநாயகம்**, **நட்டி நடராஜன்**, மற்றும் பல முன்னணி கலைஞர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். **கதையின் மையக்கரு** வஞ்சி திரைப்படம், தமிழ்நாடு-கேரளா மலைப்பகுதிகளில் வேலை செய்யும் கூலி தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் உண்மையான சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. வனவிலங்குகளால் நேரும் உயிர்பலிகள், அரசு வழங்கும் பாதுகாப்பு, மற்றும் ஒரு பெண்ணின் போராட்டம் ஆகியவை கதையின் மூலக் கருவாக அமைந்துள்ளன. **நயீரா நிகார் – பெண்ணின் வீரத்தைக் காட்டும் நடிப்பு** படத்தில் நயீரா நிகார் தன்னம்பிக்கையுடன் வாழும்…

Read More

ராபர் படம் எதைப்பற்றி பேசுகிறது தெரியுமா?

சென்னையில் நடந்த ஓர் உண்மைச் சம்பவத்தின்  பின்னணியில் உருவாகி இருக்கும் படம் ‘ராபர்’. இப்படத்திற்கு ‘மெட்ரோ ‘திரைப்படத்தின் இயக்குநர் ஆனந்த கிருஷ்ணன் கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். இந்த படத்தை அவரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய எஸ். எம்.பாண்டி இயக்கி உள்ளார். இம்ப்ரஸ் ஃபிலிம்ஸ் சார்பில் பத்திரிகையாளர் கவிதா. எஸ் தயாரித்துள்ளார்.  அவருடன் மெட்ரோ ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் இயக்குனர் ஆனந்த கிருஷ்ணனும் இணைந்து தயாரித்துள்ளார். இந்த’ ராபர்’ திரைப் படத்தின்’ டைட்டில் ஃபர்ஸ்ட் லுக் ‘எனப்படும் தலைப்பின் முதல் தோற்றத்தை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார்.படத்தின் டிரெய்லரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டார். மார்ச் 14ஆம் தேதி வெளியாகும் இந்த  படத்தை சக்தி ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் சார்பில் சக்திவேலன் வாங்கி வெளியிடுகிறார்.  இந்த படத்தில் நாயகனாக சத்யா நடித்துள்ளார்.இவர் ஏற்கனவே ‘மெட்ரோ’ படத்தில் நடித்து அனைவராலும் கவனிக்க…

Read More

அவ்னி மூவிஸ் – பென்ஸ் மீடியா இணைந்து தயாரிக்கும் புதிய படத்திற்கான படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது.

அவ்னி மூவிஸ் மற்றும் பென்ஸ் மீடியா ஆகியவை தங்களது அடுத்த பட தயாரிப்பில் இணைத்துள்ளனர், படத்தின் தலைப்பு ஆச்சரியப்படும் வகையில் விரைவில் அறிவிக்கப்படும். கற்பனை காதல் நகைச்சுவை கலந்த படத்திற்கான முக்கிய படப்பிடிப்பை பாரம்பரிய பூஜை விழாவுடன் தொடங்குவதாக அறிவித்துள்ளன. இந்த படத்தில் அஸ்வின் கந்தசாமி இயக்குனராக அறிமுகமாகிறார், மேலும் இந்த படத்தில் சந்தோஷ், ரேஷ்மா வெங்கடேஷ், வினோத் கிஷன், சம்யுக்தா விஸ்வநாதன் மற்றும் பிஜோர்ன் சுர்ராவ் உள்ளிட்ட நட்சத்திர நடிகர்கள் நடிக்கின்றனர்.   இந்த திரைப்படம் நகைச்சுவை, காதல் மற்றும் உத்வேகம் கொண்ட கற்பனை ஆகியவற்றின் தனித்துவமான கலவையை உள்ளடக்கியது, அனிமியில் காணப்படும் மிக விசித்திரமான மற்றும் அதைவிடவும் மிகப்பெரிய வாழ்க்கை கதையை சொல்லும் படமாக இருக்கும். படத்தின் கதையம்சம் இரண்டு மாறுபட்ட யதார்த்தங்களை வழிநடத்தும் ஒரு கதாபாத்திரத்தைப் பின்பற்றுகிறது, நகைச்சுவை மற்றும் இதயப்பூர்வமான உணர்ச்சியை…

Read More

சசிகுமார், சத்யராஜ் மற்றும் பரத் நடிக்கும் குடும்பத்துடன் காணக்கூடிய பொழுதுபோக்கு திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது

நடிகர் சசிகுமார் கதாநாயகனாக நடிக்கும் மிகவும் எதிர்பார்க்கப்படும் குடும்பத்துடன் காணக்கூடிய திரைப்படத்தின் படக்குழு பாரம்பரியமான பூஜையுடன் அதிகாரப்பூர்வமாக படப்பிடிப்பை தொடங்கியுள்ளது. யதார்த்தமான மற்றும் உணர்ச்சிகரமான படங்களுக்கு பெயர் பெற்ற சசிகுமார், மூத்த நடிகர் சத்யராஜ் மற்றும் பரத் ஆகியோருடன் முக்கிய வேடங்களில் இத்திரைப்படத்தின் மூலம் இணைந்து மற்றொரு இதயத்தைத் தொடும் கதையை பெரிய திரைக்கு கொண்டு வர உள்ளார். இத்திரைப்படத்தின் மூலம் மேகா ஷெட்டி மற்றும் மாளவிகா ஆகியோர் கதாநாயகிகளாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார்கள். அனுபவமிக்க கலைஞர்களான M.S. பாஸ்கர், ‘ஆடுகளம்’ நரேன், சரவணன், ‘கஞ்சா’ கருப்பு, இந்துமதி மற்றும் ஜோ மல்லோரி ஆகியோர் திறமையான மற்றும் சிறப்பான நடிப்பு ஆகியவை ஒருசேர உருவாகும் ஒரு தரமான திரைப்படத்திற்கு உத்தரவாதம் அளிக்கின்றனர். இத்திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகும். M. குரு, இதற்கு முன்னர் இயக்குனர் இரா. சரவணனிடம்…

Read More

துஷ்யந்த் ஜெயப்பிரகாஷ் நடித்திருக்கும் ‘வருணன்- காட் ஆஃப் வாட்டர் ‘ திரைப்படத்தின் முன்னோட்டம் சென்னையில் வெளியீடு

யாக்கை பிலிம்ஸ் பேனரில் கார்த்திக் ஸ்ரீதரன் தயாரிப்பில், வான் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் இணை தயாரிப்பில், நடிகர்கள் ராதாரவி – சரண்ராஜ் நடிப்பில் உருவாகியுள்ள ‘வருணன் – காட் ஆப் வாட்டர்” திரைப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இயக்குநர் ஜெயவேல் முருகன் இயக்கத்தில் உருவாகி உள்ள ‘வருணன் – காட் ஆஃப் வாட்டர்’ திரைப்படத்தில் டத்தோ ராதாரவி, சரண்ராஜ் , துஷ்யந்த் ஜெயப்பிரகாஷ், கேப்ரியல்லா, சங்கர் நாக் விஜயன், ஹரிப்பிரியா, மகேஸ்வரி, ஜீவா ரவி, அர்ஜுனா கீர்த்தி வாசன், ஹைடு கார்த்தி, பிரியதர்ஷன், கௌஷிக், துங்கன் மாரி, கிரண் மயி, பேபி ஜாயிஸ் , ஐஸ்வர்யா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஸ்ரீ ராம சந்தோஷ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு போபோ சசி இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பை யு. முத்தையன் கையாள, கலை இயக்கத்தை பத்து…

Read More

*ஜனநாயக துரோகம்! – இயக்குனர்_பேரரசு*

சட்டசபைக்குள் அனுப்புவதற்காகத்தான் MLAக்களை மக்கள் தேர்ந்தெடுக்கிறார்கள்! அதேபோல் பாராளுமன்றத்திற்குள் அனுப்புவதற்காகத்தான் எம்பிக்களை மக்கள் தேர்ந்தெடுக்கிறார்கள்! ஆஊன்னா வெளிநடப்பு செய்வதற்கல்ல! சபைக்குள் முடிந்தவரை தன் கருத்துக்களை சொல்லி போராட வேண்டும். இல்லையென்றால் அங்கு என்னதான் நடக்கிறது என்று இறுதிவரை இருந்து பார்க்க வேண்டும். அடிக்கடி இப்படி வெளிநடப்பு செய்வது வாக்களித்த மக்களை அவமதிப்பதற்கு சமம்! மக்கள் வரிப்பணத்தை சம்பளமாக பெற்று, விமான டிக்கெட் போட்டு,இருக்க வசதியான அறை குடுத்து, உண்ண உணவு கொடுத்து இதெல்லாம் எதுக்கு வெளிநடப்பு செய்யவா? இது அனைத்து கட்சிகளுக்கும் பொருந்தும். வெளிநடப்பு செய்து சாதித்ததாய் ஒரு நிகழ்வும் இல்லை. வெளி நடப்பு உரிமை அல்ல! அது பொறுப்பின்மை! இதுவும் ஒரு ஜனநாயக துரோகம்! அடிக்கடி வெளிநடப்பு செய்பவர் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் சபாநாயகருக்கு வேண்டும். #இயக்குனர்_பேரரசு

Read More

“கயல் வின்சன்ட்” மற்றும் காதலிக்க நேரமில்லை TJ.பானுவால் இணைந்தது இந்தியாவும் இலங்கையும்…

“கயல் வின்சன்ட்” மற்றும் காதலிக்க நேரமில்லை படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த T.J.பானு நடிக்கும் “அந்தோனி” என்கிற புதிய திரைப்பட படப்பிடிப்பு, பூஜையுடன் இலங்கையில் ஆரம்பமாகியது. ஓசை பிலிம்சின் கலை வளரி சக இரமணா – சுகா , விஜய் பாலசிங்கம் பிலிம்சின் விஜய் சங்கர், டிரீம் லைன் புரடக்‌ஷன்சின் சிரீஸ்கந்தராஜா மற்றும் கனா புரொடக்சன்ஸ் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர்.   இலங்கையின் பல்வேறு பகுதிகளில் படப்பிடிப்புகள் நடைபெறயிருக்கும் இப்படத்தை சுகிர்தன் கிறிஸ்துராஜா மற்றும் ஜெனோசன் ராஜேஸ்வர் ஆகிய இரு நண்பர்கள் இணைந்து இயக்குகின்றனர். இத்திரைப்படத்தை கயல் வின்சன்ட் மற்றும் T.J பானுவுடன் சேர்ந்து இலங்கை நடிகர்களான சுதர்சன் ரவீந்திரன், செளமி போன்றோரும் தமிழகத்திலிருந்து அருள்தாஸ் போன்ற நடிகர்கள் என இரு நாட்டினரும் சேர்ந்து நடிக்கிறார்கள். இத்திரைப்படத்தை “மணல்” என்கிற திரைப்படத்தினூடாக சர்வதேச விருதுகளை வென்ற ஒளிப்பதிவாளர்…

Read More

படவா – திரை விமர்சனம்

ஊருக்கு ஆகாதவன் அந்த ஊருக்கே சிறப்பு சேர்த்த கதை.எக்காரணம் கொண்டும் வேலை செய்யக் கூடாது என்ற முடிவில் இருப்பவர் விமல். வேலை செய்யப் போகிறவர்களையும் தடுத்து விடுவார். சூரியுடன் சேர்ந்து வெட்டியாக ஊர் சுற்றுவது, நள்ளிரவில் பட்டாசு வெடித்து ஊர் மக்களை பீதி ஆக்குவது, கண்ணில் பட்ட பொருட்களை திருடி விற்பது என ஜாலியாக சுற்றித் திரிகிறார். அந்த ஊருக்கே அவரால் தலைவலி. சொந்த அக்கா வீட்டிலேயே ஏமாற்றி பணத்தை ஆட்டை போடுவதால் அக்கா குடும்பமும் அவரைப் பார்த்தால் அலறுகிறது. இதனால் ஒரு கட்டத்தில் அவரை நாடு கடத்த முடிவு செய்யும் கிராம மக்கள், பணம் வசூலித்து அதன் மூலம் அவரை மலேசியாவுக்கு அனுப்பி வைக்கிறார்கள். ஆனால், ஆட்குறைப்பில் அங்கு விமல் செய்து வந்த வேலை பறிபோக, மீண்டும் சொந்த கிராமத்திற்கு வருகிறார்.விமலை கண்டாலே பயந்து ஓடும்…

Read More