கார் பந்தயம் என்பது பொழுதுபோக்கு தானே தவிர,அதில் முறையாக பயிற்சி எடுக்கவில்லை- நாக சைதன்யாகார்

ஆந்திரா, தெலுங்கானா மட்டுமில்லாமல் தமிழ்நாடு கேரளா கர்நாடகா வட இந்தியா முழுவதும் பிப்ரவரி 7 ஆம் தேதி அன்று வெளியாகும் நாக சைதன்யா – சாய் பல்லவி இணைந்து நடித்திருக்கும் ‘தண்டேல்’ படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. மீனவ இளைஞனின் தேசபக்தி மிக்க உணர்வுபூர்வமான காதல் கதையை மையமாகக் கொண்ட இந்த ‘தண்டேல்’ படத்திற்கு, படக்குழுவினர் இந்தியா முழுவதும் அனைத்து தரப்பு ரசிகர்களையும் சென்றடையும் வகையில் தீவிரமாக விளம்பரப் படுத்தி வருகிறார்கள். இயக்குனர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில் உருவாகி இருக்கும் தண்டேல் எனும் திரைப்படத்தில் நாக சைதன்யா சாய் பல்லவி கருணாகரன் ஆடுகளம் நரேன் பப்லு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சியாம் தத் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ராக்ஸ்டார் தேவி ஸ்ரீ பிரசாத் தயாரித்திருக்கிறார். எதிர்வரும் ஏழாம் தேதி அன்று உலகம் முழுவதும்…

Read More

விஜய் டிவி ராமர் நடிப்பில் விரைவில் ரிலீஸுக்கு தயாராகும் ‘அது வாங்குனா இது இலவசம்’

ஸ்ரீஜா சினிமாஸ் தயாரிப்பில் S.K செந்தில் ராஜன் எழுத்து இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘அது வாங்குனா இது இலவசம்’. விஜய் டிவி ராமர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க கதாநாயகியாக கன்னட திரை உலகை சேர்ந்த நடிகை பூஜாஸ்ரீ நடித்துள்ளார். மேலும் கலையரசன், சூப்பர் குட் சுப்பிரமணி, மாரிஸ் ராஜா, சம்பத், மீசை ரமேஷ், அருண், அம்மையப்பன் பாலாஜி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இயக்குநர் S.K செந்தில் ராஜன் குறும்படம், விளம்பர படம் மற்றும் இசை ஆல்பங்கள் இயக்கிய அனுபவம் கொண்டவர். அவர் முதன்முதலாக இயக்கும் திரைப்படம் இது. படத்தின் டைட்டிலுக்கு ஏற்றபடி தப்பு பண்ணினால் தண்டனை ஃபிரீ என்கிற கருத்தை மையமாக வைத்து நகைச்சுவை திரைக்கதையுடன் இந்த படத்தை உருவாக்கியுள்ளனர். இயக்குநர் செந்தில் ராஜன் கூறும்போது, “ஒரு சிலர் செய்யும் தவறுகளால் மற்றவர்கள் எப்படி…

Read More

துல்கர் சல்மானின் ‘காந்தா’ பட ஃபர்ஸ்ட் லுக்!

நடிகர் துல்கர் சல்மான் சினிமாத்துறைக்கு வந்து 13 ஆண்டுகள் ஆனதை சிறப்பிக்கும் பொருட்டு ‘காந்தா’ படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது. போஸ்டரில் துல்கரின் வியக்கத்தக்க உழைப்பு உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. சினிமாவில் 2012 ல் நடிகர் துல்கர் சல்மான் அறிமுகமானதில் இருந்தே அவரது வித்தியாசமான கதாபாத்திரங்களும் திறமையான நடிப்பும் அவரை முன்னணி நடிகராக்கியுள்ளது. ‘பெங்களூர் டேய்ஸ்’, ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’, ‘ஓ காதல் கண்மணி’, ‘மகாநடி’, ‘குரூப்’ மற்றும் சமீபத்திய வெற்றிப் படங்களான ‘சீதா ராமம்’, ‘லக்கி பாஸ்கர்’ என அவரது மாபெரும் வெற்றிகள் அனைத்தும் துல்கரின் வளர்ச்சி, அர்ப்பணிப்பு மற்றும் அவரது கதைகள் தேர்வுக்கு சான்றாக உள்ளது. ‘ஹண்ட் ஃபார் வீரப்பன்’ என்ற நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தொடர் இயக்கிய செல்வமணி செல்வராஜ் ‘காந்தா’ படத்தை இயக்குகிறார். இதுகுறித்து அவர் பகிர்ந்து…

Read More

பரபரப்பான கோர்ட் டிராமாவாக உருவாகியுள்ள “வில்”  படத்தின்  ஃபர்ஸ்ட் லுக் மற்றும் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது..

Foot Steps Production தயாரிப்பில், இயக்குநர் S சிவராமன் இயக்கத்தில், சோனியா அகர்வால், விக்ராந்த் நடிப்பில்,  முழுமையான கோர்ட் டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் “வில்” (உயில்). இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகியுள்ளது…   Kothari Madras International Limited இப்படத்தினை இணைந்து வழங்குகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு உயில் ஏற்படுத்தும் பிரச்சனை, நீதிமன்றத்திற்கு வழக்காக வருகிறது. அந்த வழக்கு என்ன ஆனது? உயிலின் பின்னால் இருக்கும் தியாகம் என்ன? என்பது தான் இந்தப்படம். உயர்நீதிமன்றப் பின்னணியில், விக்ராந்த், சோனியா அகர்வால் பாத்திரங்கள் ஓவியமாக வரையப்பட்டிருக்கும், வித்தியாசமான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்,மற்றும் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இப்படத்தில் நடிகை சோனியா அகர்வால் முதன்மைப் பாத்திரத்தில், நீதிபதியாக மாறுபட்ட கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். சிறப்புத் தோற்த்தில் நடிகர் விக்ராந்த் போலீஸ்…

Read More

சிலம்பரசன் TR பிறந்த நாளில் அறிவிக்கப்பட்ட #STR49, தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனின் Dawn Pictures தயாரிப்பில், பார்க்கிங் பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குகிறார் !!

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர் சிலம்பரசன் TR பிறந்த நாளில், அவரது ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில், அவரது அடுத்த படமான #STR49 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனின் Dawn Pictures தயாரிப்பில், பார்க்கிங் படப்புகழ் இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தின் அறிவிப்பு போஸ்டரில் சிலம்பரசன் TR திரும்பி நிற்க, “தி மோஸ்ட் வாண்டட் ஸ்டூடண்ட்” என டேக்லைன் எழுதப்பட்டுள்ளது. இந்த மிரட்டலான போஸ்டர், இணையம் முழுக்க பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. சிலம்பரசன் TR ரசிகர்களை பெரிதும் உற்சாகப்படுத்தியுள்ளது. பார்க்கிங் படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன், மாறுபட்ட களத்தில், கல்லூரி மாணவனாக விண்டேஜ் சிலம்பரசனை, அதிரடி அவதாரத்தில் அறிமுகப்படுத்தும் வகையில், அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில், கமர்ஷியல் கொண்டாட்டமாக இப்படத்தை உருவாக்கவுள்ளார். இப்படத்தின் மற்ற…

Read More

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பான் இந்தியா திரைப்படமான கண்ணப்பா படத்திலிருந்து ரிபெல் ஸ்டார் பிரபாஸின் ருத்ரா கதாப்பாத்திர போஸ்டர் வெளியாகியுள்ளது

பெரிதும் எதிர்பார்க்கப்படும் கண்ணப்பா படத்திலிருந்து, கடந்த திங்கட்கிழமை ரிபெல் ஸ்டார் பிரபாஸின் ப்ரீ-லுக் வெளியானது ரசிகர்களிடம் பெரும் உற்சாக அலையை உருவாக்கியது. இதைத் தொடர்ந்து நடிகர் விஷ்ணு மஞ்சுவின் மிகவும் எதிர்பார்க்கப்படும் பான்-இந்தியப் படமான கண்ணப்பா படத் தயாரிப்பாளர்கள் இப்போது ரிபெல் ஸ்டார் பிரபாஸின், “ருத்ரா” கதாப்பாத்திர ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். போஸ்டர் பிரபாஸை தெய்வீக மற்றும் பிரமிக்க வைக்கும் ஒரு சக்திவாய்ந்த பாத்திரத்தில் அறிமுகப்படுத்துகிறது, இது படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. ருத்ரா என்று பெயரிடப்பட்ட பிரபாஸின் கதாபாத்திரம், அபரிமிதமான சக்தி மற்றும் ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த பாத்திரமாக சித்தரிக்கப்பட்டுள்ளது. இந்த கதாபாத்திரம் பொங்கி எழும் புயல் என வர்ணிக்கப்படுகிறது, கடந்த கால மற்றும் எதிர்கால காலங்களுக்கு வழிகாட்டியாக சிவபெருமானின் கட்டளையால் ஆளப்படும் இப்பாத்திரம் தெய்வீகத்தன்மை மற்றும் வலிமையின் சரியான கலவையாகத் திகழ்கிறது.…

Read More

மதுரையில் கோலாகலமாக நடைபெற்ற இயக்குநர் எஸ். யூ. அருண் குமாரின் திருமணம்

திரைப்பட இயக்குநர் எஸ். யூ. அருண் குமாருக்கும், ஏ. அஸ்வினி என்பவருக்கும்  இரு தரப்பு பெற்றோர்களின் சம்மதத்துடன் நேற்று மதுரையிலுள்ள ஹெரிடேஜ் நட்சத்திர ஹோட்டலில் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்திற்கு தமிழ் திரையுலகிலிருந்து ஏராளமான பிரபலங்கள் கலந்துகொண்டு மணமக்களுக்கு நேரில் வாழ்த்து தெரிவித்தனர். ‘பண்ணையாரும் பத்மினியும்’ என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குநராக அறிமுகமானவர் எஸ். யூ. அருண்குமார். இப்படத்தின் வெற்றிக்குப் பிறகு விஜய் சேதுபதி நடிப்பில் ‘சேதுபதி’,  ‘சிந்துபாத்’ என இரண்டு படங்களை தொடர்ந்து இயக்கினார். பிறகு சித்தார்த் நடிப்பில் வெளியான ‘சித்தா’ திரைப்படத்தையும் இயக்கியிருந்தார். இவர் தற்போது சீயான் விக்ரம் நடிப்பில் தயாராகி வரும் ‘வீர தீர சூரன்’ எனும் திரைப்படத்தினை இயக்கி வருகிறார். இந்நிலையில் இவருக்கும், ஏ. அஸ்வினி என்ற பட்டதாரி பெண்ணிற்கும் பெற்றோர்களின் சம்மதத்துடன் திருமணம் நிச்சயமானது. இதனைத் தொடர்ந்து…

Read More

மோகன்லாலின்  மிகப் பிரம்மாண்டமான திரைப்படமான ‘விருஷபா’ படத்தின்  படப்பிடிப்பு நிறைவு பெற்றது

முன்னணி நடிகர் மோகன்லாலின் நடிப்பில், இந்தியாவின் மிகப்பிரம்மாண்ட படைப்பாக உருவாகி வரும் ‘விருஷபா’ படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவு பெற்றது. மும்பையில் இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடத்தி முடிக்கப்பட்டது. இதில் கலந்துகொண்ட நடிகர்கள், தொழில்நுட்ப குழுவினர், அர்ப்பணிப்பு மிக்க தொடர் உழைப்பைத் தொடர்ந்து, படப்பிடிப்பு நிறைவடைந்ததை, கேக் வெட்டிக் கொண்டாடினர். புகழ்மிகு இயக்குநர் நந்த கிஷோர் எழுத்து இயக்கத்தில், கனெக்ட் மீடியா மற்றும் பாலாஜி டெலிஃபிலிம்ஸ் ஏவிஎஸ் ஸ்டுடியோஸ் இணைந்து வழங்கும் இப்படம், உணர்ச்சிமிகு கதைக்களம் மற்றும் புராணங்களின் தனித்துவமான கலவையுடன், மிரட்டலான ஆக்சன் காட்சிகளுடன், இந்தியாவின் பிரம்மாண்ட ஆக்சன் படமாக உருவாகிறது. இப்படம் பான் இந்திய அளவில் அனைத்து பார்வையாளர்களும் ரசிக்கும் வகையில், மலையாளம் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டுள்ளது. மோகன்லாலுடன், இந்திய அளவிலான முன்னணி நட்சத்திர நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். திறமைமிகு முன்னணி…

Read More

‘விடாமுயற்சி’ ஷுட்டிங் விபத்தில் நடந்த அந்த விஷயம்.. அஜித் குறித்து ஆரவ் ஓப்பன் டாக்!

அஜர்பைஜான் சாலையில் ‘விடாமுயற்சி’ படத்தின் ஆக்ஷன் காட்சி படமாக்கப்பட்ட போது, எதிர்பாராத விதமாக நடிகர் அஜித் ஓட்டிச்சென்ற கார் விபத்துக்குள்ளான BTS வீடியோ கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த சில தருணங்கள் ஒட்டுமொத்த இண்டஸ்ட்ரியையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியதோடு, ரசிகர்களுக்கு சிறந்த படத்தைக் கொடுக்க வேண்டும் என்ற ‘விடாமுயற்சி’ படக்குழுவின் அர்ப்பணிப்பையும் உணர்த்தியது.   குறிப்பாக, அந்த தருணத்தில் காரை பாதுகாப்பாக ஓட்டிச் சென்ற அஜித்குமார், உடனிருந்த நடிகர் ஆரவுக்கு எந்த ஒரு அடியும் படாமல் பார்த்துக் கொண்டார். நடிகர் ஆரவ் அந்த தருணங்கள் பற்றி பகிர்ந்து கொண்டதாவது, “இது நன்கு திட்டமிடப்பட்ட ஷாட்! ஆனால், எதிர்பாராத விதமாக விபத்து நடந்தது. விபத்துக்குப் பிறகு நடந்ததுதான் ஆச்சரியமான விஷயம். விபத்து நடந்த முப்பது நிமிடங்களுக்குப் பிறகு, படப்பிடிப்பை மீண்டும் தொடங்க முடிவு செய்து அந்த காட்சியை படமாக்கி முடித்தோம்.…

Read More

“பேபி & பேபி” திரைப்பட டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா !!

யுவராஜ் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் B.யுவராஜ் தயாரிப்பில், இயக்குநர் பிரதாப் இயக்கத்தில், நடிகர் சத்யராஜ், ஜெய், பிரக்யா நக்ரா, யோகிபாபு நடிப்பில், குடும்பங்களோடு கொண்டாடும் கலக்கலான காமெடிப்படமாக உருவாகியுள்ள படம் “பேபி & பேபி”. ஒரு மிகப்பெரிய குடும்பத்திற்குள் எதிர்பாராதவிதமாக நுழையும் ஒரு குழந்தையால் ஏற்படும் காமெடி கலாட்டா தான் இந்தப்படம். விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. தயாரிப்பாளர் யுவராஜ் பேசியதாவது… எனக்கு தொழில் சினிமா இல்லை, ஆனால் சினிமா மீது சிறுவயதிலிருந்தே எனக்கு ஆர்வம். இயக்குநர் பிரதாப் சொன்ன கதை, எனக்கு மிகவும் பிடித்திருந்தது, உடனே தயாரிக்கலாம் என இறங்கினோம். படத்தில் வேலை பார்த்த அனைவருக்கும் என் நன்றிகள். ஒரு நல்ல படத்தை தமிழ்த்திரைத்துறைக்கு…

Read More